screw driver ஸ்டோரீஸ்
"ஹ்ம்ம்.. நான் ஒன்னு சொல்லட்டுமா..??"

"சொல்லுங்க..!!"

"எனக்குமே இது தேவை இல்லாததுன்னுதான் தோணுதுங்க ஆதிரா.. இப்போ போய் அவர்ட்ட பேசுறதால எந்த பிரயோஜனமும் இல்ல..!! அந்த முகிலன் ரொம்ப முரட்டுத்தனமான ஆளா இருக்காரு.. மூக்குக்கு மேல சுள்ளுன்னு கோவம் வருது..!! தாமிரா காணாமப்போன டைம்ல, இதைப்பத்தி நான் அவர்ட்ட பேசப்போய்.. எனக்கும் அவருக்கும் பெரிய சண்டை ஆய்டுச்சு..!!"
"ஓ..!!"

"உங்க அப்பாட்ட இதுபத்தி சொல்லலாம்னு நெனச்சேன்.. என் அம்மாதான் வேணாம்னு தடுத்துட்டாங்க..!! அதுமில்லாம.. என்னதான் பேசிக்காம இருந்தாலும்.. நீங்கள்லாம் ஒரே குடும்பம்.. எப்படி இதை உங்கட்டயே வந்து சொல்றதுன்னு எனக்கு ஒரு தயக்கம்..!!"

"ம்ம்.. புரியுது கதிர்..!!"

ஜீப் இப்போது ஊருக்குள் நுழைந்து பயணித்தது.. காய்கறி மார்க்கெட்டுக்குள் மிதமான வேகத்தில் ஊர்ந்து சென்றது..!! சாலையோரமாக இருந்த அந்த பூக்கடையை பார்த்ததும் ஆதிராவுக்குல் மீண்டும் பழைய நினைவுகள்..!! ஒருவருடத்திற்கு முன்பாக நடந்த அந்த சம்பவம்.. விபத்தின்போது தொலைந்துபோய் நேற்று கல்மண்டபத்தில் ஆதிராவுக்கு மீண்டும் ஞாபகத்துக்கு வந்த நினைவுகள்..!!

இதோ.. இதே சாலையில்தான்.. ஆதிராவும் தாமிராவும் நடந்து சென்று கொண்டிருக்கையில்.. அதோ.. அதே பூக்கடையின் முன்பாகத்தான்.. காரில் வந்து வழிமறித்தான் முகிலன்..!! அவசரமாக காரில் இருந்து இறங்கியவன்.. ஆத்திரமாக வந்து தாமிராவின் புஜத்தை பற்றினான்..!!

"என்னடி நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..??" என்று சீறினான். 

"ச்சீ.. கையை விடுங்க.. ஏன் இப்படி ரவுடி மாதிரி பிஹேவ் பண்றீங்க..??" அவனிடமிருந்து கையை உதறி விலகிய தாமிரா பதிலுக்கு சீறினாள். 

[Image: krr28.jpg]

"யாருடி ரவுடி..?? அப்படியே அறைஞ்சு பல்லை உடைச்சுடுவேன்..!!" தாமிராவை அறைய கையை உயர்த்தினான் முகிலன்.

"ஐயோ.. என்னத்தான் இது.. விடுங்க..!!" எதுவும் புரியாத ஆதிரா இடையில் புகுந்து தடுத்தாள்.

"ஏய்.. நீ வெலகு.. உனக்கு எதுவும் தெரியாது..!!" முகிலன் ஆதிராவையும் முறைத்தான்

"என்னாச்சுனு சொல்லுங்க.. எதுக்கு அவ மேல கோவப்படுறீங்க.. அப்படி என்ன பண்ணுனா அவ..??"

"என்ன பண்ணுனா என்ன பண்ணிட்டு இருக்கான்னு உன் தங்கச்சியையே கேளு..!! ஏற்கனவே இவ பண்ணின காரியத்தால அந்த குறிஞ்சி அஞ்சு வருஷமா இந்த ஊரை ஆட்டி படைச்சுட்டு இருக்குறா..!! அது பத்தாதுன்னு இப்போ.. குடும்பமானத்தை மொத்தமா குழி தோண்டி புதைக்க கெளம்பிட்டா இந்த குட்டிக்கழுதை..!!" சீறிய முகிலனுக்கு, இப்போது தாமிரா சூடாக பதில் சொன்னாள்.

"ம்க்கும்.. பொல்லாத குடும்பமானம்..!!! ஒரு அப்பாவிப் பொண்ணை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம உயிரோட கொளுத்துனதுக்கு காரணமே அந்த குடும்பமானம்தான..?? அப்படி ஒரு கொடூரமான, கேவலமான குடும்பமானத்தை பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்ல..!! 'குடும்பமானம் குடும்பமானம்'ன்னு சொல்லி.. குறிஞ்சி பத்தின உண்மையை மூடி மறைச்சது போதும்..!! உண்மை என்னன்னு உலகத்துக்கு சொல்லாம நான் விடமாட்டேன்..!!" - தாமிராவின் பதிலில் முகிலன் மூர்க்கமானான்.

"எதுத்தாடி பேசுற.. எதுத்தா பேசுற.. கொழுப்பெடுத்த சிறுக்கி..!! என்ன பண்றேன் பாரு உன்னை..??" என்று அவளை அடிக்க பாய்ந்தான். 

"ஐயோ.. விடுங்கத்தான் ப்ளீஸ்..!!" 

அவனை சமாளிக்க ஆதிரா திணறினாள்..!! ஒருவழியாக.. விஷயம் முழுதாக புரியாமலே.. 'நான் அவகிட்ட பேசி புரிய வைக்கிறேன்.. நீங்க கெளம்புங்க.. உங்களை கையெடுத்து கும்பிடுறேன்.. ப்ளீஸ்த்தான்.. ' என்று சொல்லி.. முகிலனை சமாதானம் செய்து அனுப்பி வைப்பதற்குள் பெரும்பாடு பட்டுவிட்டாள்..!!

"இந்த உருட்டல் மெரட்டல்லாம் உங்கவீட்டு வேலைக்காரங்கட்ட வச்சுக்கங்க.. இதுக்குலாம் பயப்படுற ஆள் நான் இல்ல.. நான் நெனச்சத முடிக்காம விட மாட்டேன்.. என்ன பண்றீங்கன்னு பாக்கலாம்..!!" அவன் செல்லும்வரை பதிலுக்கு பதில் பேசிக்கொண்டேதான் இருந்தாள் தாமிரா.

"அந்தக்கட்டுரை எப்படி வெளில வருதுன்னு பாக்குறேன்..!! சொல்லி வை அவகிட்ட..!! பொம்பளையா அடக்கஒடுக்கமா பொத்திக்கிட்டு இருக்க சொல்லு.. அப்படியே கோழிக்குஞ்சை திருகுற மாதிரி கழுத்தை திருகிப் போட்ருவேன்..!!" தீவிரமான குரலில் ஆதிராவிடம் எச்சரிக்கை செய்துவிட்டே காரில் கிளம்பினான் முகிலன்.

அன்று வீட்டிற்கு சென்றதும், அக்காவிற்கு விஷயத்தை விளக்கி சொன்னாள் தாமிரா..!!

"குறிஞ்சியை பத்தி இந்த ஊர்க்காரங்க சொல்றதுலாம் பொய்க்கா.. அவ ஒரு பாவப்பட்ட ஜீவன்..!! அந்தஸ்து, குடும்ப கௌரவம்ன்ற பேர்ல.. நூறு வருஷம் முன்னாடி.. நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்க அந்தப்பொண்ணுக்கு ஒரு பெரிய கொடுமையை பண்ணிருக்காங்க..!!"

தனது மேஜை ட்ராவில் இருந்து ஒரு பழுப்பேறிய காகிதைக் கற்றையை எடுத்து தூக்கிப் போட்டாள்..!!

"இதை படிச்சு பாரு.. நான் சொல்றது உண்மைன்னு புரியும்..!!"

"என்ன இது..??"

"நம்ம தாத்தாவோட அப்பா அந்தக்காலத்துல எழுதின டைரி இது.. குறிஞ்சியோட உண்மைக்கதை அவருக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு.. டைரில அங்கங்க அந்தக்கதையை கிறுக்கி வச்சிருக்காரு..!! இத்தனை நாளா.. தாத்தா வீட்ல.. யாருக்கும் தெரியாம பழைய பெட்டிக்குள்ள கெடந்திருக்கு.. போன வாரந்தான் என் கைல மாட்டுச்சு..!!"
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 04-03-2019, 12:24 PM



Users browsing this thread: 8 Guest(s)