21-07-2020, 08:28 PM
அன்று -
நான் வேலையாக இருக்கிறேன், தொந்தரவு செய்யாதீர்கள் என்று கண்ணன் போனில் சொல்லிவிட.... ராஜ் வருத்தத்தோடு நின்றுகொண்டிருந்தான்.
நிஷா ராஜ்க்கு காபி எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தாள். இருவரும் பால்கனியில் நின்றுகொண்டிருந்தார்கள். காற்று நன்றாக வீசிக்கொண்டிருந்தது. அவன் கண்ணனோடு பேசி பேசி மூக்குடைபடுவது பிடிக்காமல்... வேறு வழியில்லாமல்... தயங்கி தயங்கி.. பேச்சை ஆரம்பித்தாள்.
அண்ணா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்
என்ன விஷயம் சொல்லு
நான் இன்னொரு வாழ்க்கை அமைச்சுக்கறதா முடிவு பண்ணியிருக்கேன்
வாட்?
சீனுவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னா
ராஜ் கோபமாக அவளைப் பார்த்தான். நிஷா உனக்கு என்ன பைத்தியமா?
ப்ளீஸ்ணா
கண்ணன் உன்ன ராணி மாதிரி பார்த்துப்பார்டி. நான் அவர் கால்ல விழுந்தாவது உன்ன ஏத்துக்க சொல்றேன். யார் இந்த சீனு? ப்ளடி பாஸ்டர்ட்.
அண்ணா ப்ளீஸ் புரிஞ்சிக்கோ எனக்கு சீனுகூட வாழத்தான் பிடிச்சிருக்கு
நிஷா உன் லெவல் என்ன அவனோட லெவல் என்ன? அவன் எப்படியோ உன் மனசை கெடுத்திருக்கான். நோ. நோ வே
அவன் என்மேல உயிரையே வச்சிருக்கான். என்ன நல்லா பார்த்துப்பான்
நிஷா ஸ்டாப் இட். என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது. கண்ணன்தான் உனக்கு ஏற்றவர். ஏதோ கோவத்துல டிவோர்ஸ்னு சொல்லிட்டார். அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவர்கூட வாழுற வழியைப் பாரு
ராஜ் கோபம் தெறிக்க.... அவளிடம் கத்திவிட்டுப் போய்விட்டான். நிஷா கண்கள் கலங்க நின்றுகொண்டிருந்தாள்.
ஐயோ என் தங்கச்சிக்கு என்னாச்சு? எது அவள் மூளையை இப்படி மழுங்கடித்தது? - அவனுக்கு அவள் பேசியதை இன்னும் நம்பமுடியவில்லை. அவள் அப்படி சொன்னதற்கான காரணம் சுத்தமாக விளங்கவில்லை.