Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இஸ்லாமாபாத் கோர்ட் தீர்ப்பு என்ன?

இஸ்லாமாபாத்: இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை விடுதலை செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, பாகிஸ்தான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

[Image: Tamil_News_large_2224926.jpg]


சமீபத்தில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற, பாக்., போர் விமானங்களை விரட்டிச் சென்ற இந்திய விமானப்படை விமானம், பாக்., எல்லைக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்த இந்திய விமானப் படையின் 'விங் கமாண்டர்' அபிநந்தனை, பாக்., ராணுவத்தினர் சிறைபிடித்தனர்.'அபிநந்தனை விடுவிக்க வேண்டும்' என, இந்தியாவும், பல்வேறு உலக நாடுகளும் பாகிஸ் தானுக்கு நெருக்கடி கொடுத்தன. இதையடுத்து, அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில், அபிநந்தனை விடுதலை செய்வதாக, பாக்., பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.இதற்கிடையே, அபிநந்தனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், பாகிஸ்தானை சேர்ந்த முகம்மது ஷோயிப் ரசாக் என்பவர் மனுதாக்கல் செய்தார். மனுவில் கூறப்பட்டதாவது:

[Image: gallerye_113614366_2224926.jpg]


இந்திய விமானி அபிநந்தன், நம் தேசத்திற்கு எதிராக குற்றம் செய்துள்ளார். பாக்., வான்வெளி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, அபிநந்தனை விடுதலை செய்யும், இம்ரான் கான் அரசின் முடிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, அதர் மின்ஹல்லா, அதை தள்ளுபடி செய்தார்.

[Image: gallerye_113608438_2224926.jpg]


அத்துடன் இஸ்லாமாபாத் கோர்ட் வெளியிட்டுள்ள உத்தரவில், விமானப்படை விமானத்தை சுட்டதுடன் தவறுதலாக பாக்., எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக பாக்., பார்லி.,யின் கூட்டுக் குழுவில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். இது பாக்., மக்களின் விருப்பங்களை புறக்கணித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

[Image: gallerye_113619948_2224926.jpg]


அமைதி மற்றும் நல்லிணக்க அடிப்படையில் எடுக்கப்பட்டது. இதனை பிரதமர் பார்லி.,யில் அறிவித்த போது ஒரு உறுப்பினர் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எல்லையில் தற்போது நிலவும் பதற்றமான நிலையை சரி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 03-03-2019, 09:19 AM



Users browsing this thread: 100 Guest(s)