16-07-2020, 12:20 PM
(15-07-2020, 11:41 PM)மொபைலில் எழுதுவது மிக கடினம், உங்களுக்கு அது பழக்கமாகி விட்டது போலும். அதுவும் ரிப்பேர் என்பது எங்களுக்கு தெரியாது, பொறுத்து கொள்ளுங்கள் நண்பா.. கொரானாவினால் எங்களின் பொழப்பும் தற்காலிகமாக நின்று விட்டது. மொபைலை சரி செய்து மீண்டும் மீண்டு வாருங்கள் நண்பா, காத்திருக்கிறோம்.. Niruthee Wrote: நண்பர்களுக்கு வணக்கம். உங்களின் அன்புக்கு மிக்க நன்றி.. !!
நான் முன்பே சொன்னதுதான். இன்றுவரை நான் கதைகள் எழுதுவது மொபைலில் மட்டும்தான். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக என் மொபைல் ரிப்பேர். அதனால் என் பிளாக் உட்பட எங்கேயும் கதைகள் எழுதி பதிவிட முடிவதில்லை. தவிர.. கொரோனாவின் பாதிப்பு தொடர்வதால் பல தொழில்கள் முடங்கியுள்ளது. என் தொழிலும் அப்படித்தான். இந்த நிலை மாறும்வரை என் மொபைலை சரி செய்ய முடியாது. கதை சம்பந்தமான அத்தனை விசயங்களும் என் மொபைலில் அடங்கியுள்ளது. மெயில்கூட ஓபன் பண்ண முடியாத நிலை.. !!
இது என் மனைவியின் மொபைலில் இருந்து பதிவிடுகிறேன். இந்த மொபைலை நான் தொடர்ந்து உபயோகிக்க முடியாது. அதனால் சந்தர்ப்பம் அமையும்வரை நான் கதைகளை எழுதி பதிவிட முடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. !!
இத்தனையும் கடந்து இந்த வெப்சைட் ஓபன் பண்ணினால் அது பல நேரங்களில் ஓபனாவதே இல்லை. அதை மாடரேட்டர்கள் கவனித்தல் நலம்.. !!
முடிந்தவரை முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.. !!