அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#85
மறுநாள்


காரில் இருந்து இறங்க, எனக்காகவே காத்துக் கொண்டிருந்தாள் நேத்ரா

என்ன மேடம்! என்ன சொல்றான் உன் தம்பி?”னு சொல்ல,,

தம்பினு சொல்லி,, மானத்த வாங்காதடி,, பாவி!”னு வெக்கத்தோடு சொல்லி, திடுக்கிட்டு சுத்தி பார்க்க, என் அருகில் வந்தவள் 

பதறாத! யாரும் இல்ல!”னு சொன்னவள், என் கன்னதில் இடித்து

எங்கள தம்பி சொல்ல விடாம தடுக்குறதுல, பைசாக்கு பிரையோஜனம் இல்ல!, முதல்ல அவன சொல்லுறத நிறுத்து!”னு சொல்ல

இன்னைக்கு கூட, காலைலேயே ஃபோன் பண்ணி, வேணும்னே அக்கா, அக்கானு சொல்லி உயிர எடுக்குறான்டி! பாவி!”னு நான் புலம்ப

, அதான், அக்கா இன்னைக்கு காலைலேயே லவ் மூட்ல இருக்கீங்களோ?”னு இவளும் என் உயிரை எடுக்க, என் நிலையைப் நினைத்து, கையில் இருந்த நோட்டால், தலையில் அடித்துக் கொண்டு, கிளாஸ் ரூம் நோக்கி நடந்தேன்.
பானு?”னு, என்னை தடுத்து நிறுத்தியவள்

ஆர் யு சூர் தட் திஸ் இஸ் நாட் அ இன்ஃபெக்க்ஷூவேஷன்?”னு சீரியஸ்ஸா கேட்டவள், என் கண்களில் இருந்த உறுதியாய் பார்த்திருப்பாள் போல 

கூல், ஜஸ்ட் வாண்டெட் டூ கன்பர்ம் தட்ஸ் ஆல்"னு சொல்ல, இருவரும் கிளாஸ் ரூம் நோக்கி நடந்தோம்

அதன் பின்பும் ஓரிரு முறை என் காதலைப் பற்றி சீரியஸ்சாக விவதித்தோம், புரிந்து கொண்டாள்

---------------------------------

இரண்டு வாரங்கள் கழித்து 

நேத்ராவை கட்டிக் கொண்டு குதித்தேன்!

என்ன? மேடம் இன்னைக்கு செம்ம ஜாலி மூட்ல இருக்கீங்க?”னு எனக்கிருந்தே அதே சந்தோஷத்துடன் கேட்க, அவளை தனியே அழைத்துச் சென்று 

என் பேர் சொல்லி கூப்பிட ஒத்துக் கிட்டாண்டி,, இன்னைக்கு பேர் சொல்லித்தான் கூப்பிட்டான்!”னு சொல்லி, மறுபடியும் கட்டிப் பிடிக்க 

ட்ரீட்?”னு அவள் கேக்க 

ட்ரீட் எல்லாம் ஒரு விஷயமா?,,தாங்க்ஸ்டி,, நீ சொன்ன ஐடியா வொர்க்அவுட் ஆக்கிடுச்சு!”னு சொல்லி கேன்டீன் நோக்கி நடந்தோம்

தாங்க்ஸ்டி,, உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியல!!, எல்லாம் உன்னாலதான்!”னு நான் வாஞ்சையாக, எதிரில் இருந்த நேத்ராவின் கை பற்றி சொல்ல, வாயில் இருந்த பஜ்ஜியை முழுங்கியவள்

என்ன மேடம்?,, நன்றி உணர்ச்சியா?,, ரொம்ப எல்லாம் பீல் பண்ணாதீங்க, அவன் ஒண்ணும் உங்கள லவ் பண்ணுரேனு சொல்லல!,, அக்கானு சொல்ல மாட்டேனுதான் சொல்லிருக்கான்,,, ஆனா இன்னும் அக்காவா தான் நினச்சு பழகுறான்!”னு அவள் சொல்ல, அவள் சொல்வதின் உண்மை புரிய, என் முகம் வாடியதை கவனித்திருப்பாள் போல,

என்ன இதுக்கே, மூஞ்சிய தொங்கப் போட்டா எப்பூடி? நான் சொல்றத கேட்டுட்டு அப்புறம் எல்லாத்துக்கும் சேத்து பீல் பண்ணு!”னு சொல்ல, குழப்பத்துடன் அவளைப் பார்த்தேன் 

நாங்க ஒண்ணும் உன்மேல உள்ள அக்கரைல ஐடியா குடுக்கல,, நீ உன் லவ்வா சொல்லி,,, புட்டுக்குச்சகுனா,, இப்போ நான் ஒதுங்கி ஹெல்ப் பண்ணுற மாதிரி,,, நீ ஒதுங்கி எனக்கு ஹெல்ப் பண்ணனும்!!” சொல்லி, நாக்கலாக கண்ணடிக்க,,, அவளை முறைத்தேன்,, செல்லமாக

அப்போதான் சுமேஷ் வந்து என் லவ் பண்ணுவாதாக சொல்ல, நொந்து போனேன் நான். "ஏண்டா,, என்ன கொஞ்ச நேரம் கூட சந்தோஷமா இருக்க விட மாட்டிங்களானு”, மனசுக்குள்ள சொல்லி நேத்ராவை பார்க்க,, அவள் சிரிப்பை அடக்க முயற்சி பண்ணினாள்,, முடியாமல் சிரிக்க,,, சுமேஷ் அவளைப் பார்த்து டென்ஷன் ஆனான். சிரிப்பை கட்டுப் படுத்திக் கொண்டு,, சுமேஷிடம் 

நீங்க கொஞ்சம் லேட் பன்னிட்டிங்க சுமேஷ், இன்னைக்கு மார்னிங் தான் இவ ரொம்ப நாளா லவ் பண்ண பையன்,,, ப்ரபோஸ் பண்ண,,, இவளும் அக்சப்ட் பண்ணிட்டு வந்துருக்கா,,, இந்த ட்ரீட் கூட அதுக்குத்தான்"னு நேத்ரா சொல்ல, முகம் செத்துப் போன சுமேஷ் குனிந்து டேபிளில் இருந்த இரண்டு பஜ்ஜி பிளேட்களைப் பார்த்து விட்டு, “என்னது பஜ்ஜி எல்லாம் ஒரு ட்ரீடா"னு நம்பாமல், உண்மையானு? கேக்குற மாதிரி எண்ணப் பார்க்க,, நான் ஆமாம் என்பது போல தலையாட்டி விட்டு,, எழுந்து கிளாஸ் ரூம் நோக்கி போக,, சிறிது தூரம் சென்ற பிறகு,, திரும்பிப் பார்த்த நேத்ரா,,, வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள் 

பாவம் பா,,, இருந்தாலும் நீ ரொம்ப மோசம்,,, இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டே!”னு சொல்லி சுமேஷ் மீது பரிதாபப் பட 

என்ன லவ் ஃபெய்லியர்க்கு,, லவ் ஃபெய்லியர் சப்போர்ட்டா?”னு,, கேட்டு மீண்டும் திரும்பிப் பார்த்தவள் 

ரெமோ மாதிரி வந்தவன்,,, இப்போ அம்பி மாதிரி நிக்கிறான் பா"னு சொல்லி சிரிக்க,, நானும் கூட சேர்ந்து சிரித்தேன். கிளாஸ் ரூம் நெருங்கும் போது கேட்டாள்

டீல் ஓகே வா?”னு, குழம்பியவாரே 

என்ன டீல்?”னு கேக்க,, என்னை இரு கைகளையும் பிடித்து நிறுத்தியவள்

அடிப்பாவி!, மறந்திட்டியா , சரி நல்ல கேட்டுக்கோ,, அன்னைக்கு கார்ல சொன்னதுதான்,,, உன் லவ் ஓகே ஆச்சுனா,, உங்களுக்கு பொம்பளப் பிள்ளை பிறந்த என் பேரு வைங்க,,, ஒருவேல பூட்டுக்குச்சுனா,, எனக்கு ஹெல்ப் பண்ணு,,, எங்களுக்கு பொம்பளப் பிள்ளை பிறந்த உன் பேருதான் கண்டிப்பா வப்பேன்!”னு சொல்லிட்டு,, கிளாஸ்க்குள் ஓடி விட்டாள்.

நான் அவள் ஆட்டிக்கொள்ளும் பின் புறத்தை முறைத்தவாறு சென்றேன்.

---------------------------

அந்த சுமேஷ் லவ் சொன்னத அன்னைக்கு சாயங்காலமே ,,, வீட்டுக்கு வந்தவனிடம் சொன்னேன். "நீ என்ன சொன்ன" திரும்ப திரும்ப அவன் கேட்க, பதில் சொல்லாமல் கொஞ்ச நேரம் காய விடஅவ்வளவுதான் அவன் முகத்தில் பரிதவிப்பு,, பதட்டம்,, "நான் முடியாது"னு சொல்லிட்டேன் என்று சொன்னதும் தான் அவன் மூச்சே விட்டான். அவனின் பதட்டத்தில்,, பரிதவிப்பில்,, என் லவ் மீட்டர் கண்ண பின்னணு எகிற ரெண்டு நாள்,,, ரொம்ப நம்பிக்கையா,, ஜாலி இருந்தேன்

ரெண்டு நாள் கழித்து, சாயுங்காலம் வந்தவன்,

மது,, நான் சொன்னேன்ல அந்த கீர்த்தி,, என் கிளாஸ் மேட்?”னு சொல்ல,, நான் எதுக்கு இப்போ எவளையோப் பத்திப் பேசுறான்னு நினச்சு, குழப்பமாகி பாக்க

லூசு,, அதான் சொல்லிறுக்கேன்ல,,, எப்போ பாத்தாலும் லுக்கு விடுவானூ?” அவன் சொல்ல, நான் என்ன செய்வதென்று தெரியாமல் தலையாட்ட 

இன்னைக்கு,, எங்க கிளாஸ்ல எல்லோருக்கும் ராக்கி கட்டினாள்,, எனக்கு மட்டும் கட்டலே?,, பசங்க எல்லாம் லவ்னு சொல்றாங்க! நீ சொல்லு லவ்வா இருக்குமோ?”னு கேட்டு ஆர்வமா பாத்து என் சந்தோஷத்துல சங்கு ஊதுவான்

அதுக்கப்புறம் வந்த நாட்களில்,,இப்படித்தான் ,, எனக்கு இருக்கும் லவ்க்கு நம்பிக்கை கொடுப்பது போல, ஏதாவது ஒண்ணு நடக்கும், என் லவ் மீட்டர் எகிறும். நான் சந்தோஷத்தில் பூரித்துப் போய் திரியும் போது, அதே ஸ்பீட்ல ,, வேற ஏதாவது ஒண்ணு எதிர்மறையா நடக்கும், என் பூரிப்பெல்லாம் புஸ்வானாமாகி விடும்

-----------------------------

இப்படி ஏற்றமும், இறக்கமுமாக, போய்க் கொண்டிருந்த வாழ்வில், "எந்த இறக்கமானாலும் சகித்துக் கொள்ள, தாங்கிக் கொள்ளக் கூடிய, இவன் உனக்குத்தான், உனக்கு நிகராக இவன் வாழ்க்கையில் வேறு யாரும் வரமுடியாது" எனக்கு நம்பிக்கை கொடுத்த சம்பவம் ஒன்று நடந்தது.

என் மடியில் புதைந்து அழுது கொண்டிருந்தான் மணி. சொல்ல முடியாத ஆனந்தத்தில் நான்

ஸ்கூல் ஃபைனலியர்யின் பொது நடந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் வெளியேறினேன், காயம் காரணமாக, ஹம்ஸ்ட்ரிங் லிக்மெண்ட் கிழிந்திருந்தது. நான் ஓடோடிச்சென்றேன் அவனைத் தேற்றலாம் என்று சென்றாள், கண்டிப்பாக மனமுடைந்து இருப்பான் என்ற பரிதவிப்பில் தான் ஏர்போர்ட் சென்று இருந்தேன். ஆனால் அவன் தோற்றதைப் பற்றி கவலைப் படாமல், தெம்பாக இருந்தான், என்னை தேற்றினான். நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்காத மாற்றம். கால் குணமடைந்து, முதல்முதலாக கொஞ்ச நேரம் டென்னிஸ் ஆடிவிட்டு வந்தவன் தான் இப்படி என் மடியில் முகம் புதைத்து அழுகிறான், சாம்பியன்ஷிப்பில் வெளியேறியதற்காக!

அவன் அழுகை எனக்கு சொன்னது ஒண்ணே ஒண்ணுதான், இவன் வாழ்க்கையின் அச்சாணி நான் தான். சந்தோஷத்தில் அப்படியே, என் மடியில் படுத்து அழுகிறவனின் முதுகில் சாய்ந்தேன். கிட்டதட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த கிடைத்த நெருக்கம். அழுகை ஓயும் வரை காத்திருந்து விட்டுத்தான், அவனத் தேற்றினேன்

------------------------------
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 16-07-2020, 01:16 AM



Users browsing this thread: 8 Guest(s)