15-07-2020, 01:50 PM
(15-07-2020, 10:49 AM)umakulo Wrote: கண்ணதாசன் மறைவை ஒட்டி, இன்றும் மனம் ஏங்கிக் கொண்டிருக்கும். இப்போது வேண்டினாலும் கண்ணதாசன் வந்து மேலும் படைப்புகளை தர முடியாது. எல்லாம் வாழும் காலம் வரை தான். அதே போல எல்லோரும் கண்ணதாசன் போல நடைமுறை வாழ்க்கையை அளந்து பாடல்களாக தரவே முடியாது. அதனால் வாழும் காலம் தொட்டு, தன்னால் முடிந்த படைப்புகளை தரவே அதிகம் முயல வேண்டும். தங்களையும் அப்படித்தான் நினைக்கிறோம். தொல்லையாய் நினைக்க வேண்டாம். உமக்காக எவ்வளவு பேர் உவகையுடன் எதிர்பார்க்கிறோம், இது எல்லோருக்கும் வாய்க்காது நண்பா..
எல்லோரும் நல்ல வாழ்க்கையை வாழ முடியாத சூழ்நிலையில் தான் இருக்கிறோம், வெகு சில பேரை தவிர. இது எல்லோரும் வாங்கி வந்த வரம், அதற்காக நாம் யாரையும் நொந்து கொள்ள முடியாது, இது தான் நிதர்சனம், அதை ஏற்றுக் கொண்டு தான் எல்லோரும் வாழ்கிறோம். உங்களை போல சில பேர் தான், இந்த வாழ்க்கையிலும் சில சந்தோஷங்களை அனுபவிக்க சில சந்தர்ப்பங்களை வழங்குகிறீர்கள். அதனை தான் எதிர்பார்க்கிறோம். வாருங்கள் நண்பா.. அவ்வப்போது..