screw driver ஸ்டோரீஸ்
"கண்ணாமூச்சி ரே ரே..!!"

அத்தியாயம் 13

ஆதிரா குனிந்து அந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.. அந்த புத்தகத்துக்குள் இருந்த இன்னொரு சிறிய புத்தகம் இப்போது வெளியே நழுவி விழுந்தது..!! அது.. அவளுடைய தங்கை தாமிராவின் கல்லூரி ஆட்டோக்ராஃப் புத்தகம்..!! 

அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தை பார்த்ததுமே ஆதிராவுடைய மூளையில் பளீரென்று ஒரு மின்னல்.. தொலைந்துபோன ஒரு சம்பவத்தின் நினைவுகளை அவளது மூளை இப்போது சட்டென மீட்டெடுத்தது.. ஒரு வருடத்திற்கு முன்பாக நடந்த அந்த சம்பவம்..!!

இதோ.. இதே அறையில்தான்.. அதோ.. அந்த கம்ப்யூட்டர் மேஜை முன்பாகத்தான்.. தாமிரா அமர்ந்து அவளது கம்ப்யூட்டரில் ஏதோ கட்டுரை டைப் செய்து கொண்டிருந்தாள்..!! இதே ஆட்டோக்ராஃப் புத்தகத்தைத்தான் ஆதிரா அந்த மேஜை மீது விசிறியடித்தாள்.. திகைத்துப்போய் நிமிர்ந்து பார்த்த தங்கையிடம், ஆதங்கம் நிறைந்த குரலில் கேட்டாள்..!!

"என்னடி இது..??"

"எ..எது..??" - தாமிராவிடம் ஒருவித குழப்பம்.

"ம்ம்ம்ம்..??? இது..!!!"

கடுப்பாக சொன்ன ஆதிரா.. அந்த ஆட்டோக்ராஃப் புத்தகத்தை திறந்து.. ஒரு குறிப்பிட்ட பக்கத்தை தங்கையிடம் விரித்து காட்டினாள்..!! அவ்வாறு விரித்து காட்டப்பட்ட பக்கத்தில்.. தாமிராவின் கல்லூரி தோழியால் கிறுக்கப்பட்ட அந்த வழியனுப்பு வாழ்த்து செய்தி..!!

"தெளிவாக யோசி பெண்ணே.. துணிச்சலாக ஒரு முடிவெடு.. உனது காதல் கைகூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! - அன்புத்தோழி அகல்விழி"

ஆதிரா அந்தப்பக்கத்தை திறந்து காட்டியதுமே.. தாமிராவின் முகத்தில் பட்டென ஒரு சோர்வு.. 'பாத்துட்டாளா' என்பது போல ஒரு சலிப்பு..!! அவஸ்தையாக இமைகளை மூடிக்கொண்டவள், எதுவும் பேசாமல் தலையை குனிந்துகொண்டாள்.. ஆதிரா அவளை விடவில்லை..!!

"கேக்குறேன்ல..?? சொல்லுடி..!!" - ஆதிராவின் குரலில் ஒரு எரிச்சல்.

"என்ன சொல்ல சொல்ற..??" - அதே எரிச்சல் தாமிராவின் குரலிலும்.

"அப்டியே அறையப் போறேன் பாரு உன்ன..!! இத்தனை நாளா யாரையோ லவ் பண்ணிக்கிட்டு.. எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு கூட உனக்கு தோணலைல..?? எல்லாம் நானே தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு..!!"

"ப்ச்.. புரியாம பேசாதக்கா..!!"

"யார்டி புரியாமப் பேசுறா..?? அமுக்குணி கழுதை..!!"

".............................."

"அத்தானை நான் லவ் பண்ற விஷயத்தை உன்கிட்ட சொன்னப்போ எனக்கு எத்தனை வயசுடி இருக்கும்..??"

".............................."

"சொல்லுடி..!!"

"என்ன.. ப..பன்னெண்டு பதினாலு வயசு இருக்கும்..!!"

"ஹ்ம்ம்.. அப்போ நான் ஏஜ் அட்டண்ட் பண்ணக்கூட இல்ல.... என் மனசுல அந்த மாதிரி ஒரு நெனைப்பு வந்ததுமே, உடனே உன்கிட்ட வந்து சொன்னேன்..!! அப்போவே என் மனசுல இருக்குறதெல்லாம் எவ்வளவு ஃப்ராங்க்கா உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன்..?? பண்ணிக்கிட்டேனா இல்லையா..??"

"ம்ம்.. பண்ணிக்கிட்ட..!!"

"அப்புறம்.. நீ மட்டும் ஏண்டி இப்படி இருக்குற..??"

"எப்படி..??"

"ம்ம்..?? சரியான அழுத்தக்காரியா..!!"
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 02-03-2019, 06:26 PM



Users browsing this thread: 7 Guest(s)