அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#63
பாகம் - 13


என் பதினெட்டாவது பிறந்தநாளுக்கு ரெண்டு நாள் முன்பு, மாலை அவள் வீட்டில், அவள் அறையில், கொஞ்சம் மூட் அவுட்டில் இருந்தாள், என்னாச்சுனு கேட்ட மறு நொடி பொறிந்து தள்ளினாள் 

அந்த சுமேஷ் டாக், மறுபடியும் ப்ராப்ளம் பண்றான், சொன்ன புருஞ்சுக்க மாட்றான்"

என் உன் gangல தான் பிரதீப்பும், சுந்தரும் இருக்காங்களே, அவங்க ஏதும் கேக்கலையா?”

அதே ஏன் கேக்குற, பிரதீப் கோவப்பட்டு அடிக்க போக, பெரிய அதகளம் ஆயிருச்சு, நல்ல வேல எல்லாம் கிளாஸ்க்குள்ள நடந்துச்சு, இல்லன பெரிய ப்ராப்ளம் ஆயிருக்கும்"னு சொல்ல எந்த சலனமும் இல்லாமல் இருந்த என்னைப் பார்த்தும் கடுப்பானாள்

ஏண்டா எவ்வளோ பெரிய ப்ராப்ளம்னு சொல்றேன், நீ என்னவோ கதை கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டு இருக்க?"னு அவளின் கோவம் மொத்தமும் என் மீது திரும்பியது

இல்ல மது, நீ தான சொன்ன, நான் சின்ன பையன், நெறைய விசயத்துக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு, அதுதான் இந்த விசயத்துக்கு நான் சரிப்பட்டு வருவேனா? மாட்டேனானு? யோசிக்கிறேன்?”னு நக்கலாக சொல்ல, அருகில் இருந்த தலையணையை எடுத்து என் மீது எறிந்தாள்

----------------------------

அடுத்த நாள் மதியம் எங்க இருக்கேனு கேட்டு ஃபோன் பண்ணினாள், காலையிலேயே பண்ணுவாள் என்று எதிர்பார்த்திருந்தேன், நான் காலேஜ் கேண்டீனில் இருப்பதாக சொல்ல, சில நிமிடங்களில் காண்டீனுக்குள் நுழைந்தாள் வேகமாக!, இது நான் எதிர் பக்காதது. கொஞ்சம் தொலைவிலேயே நின்றாள், என்னை முறைத்துக் கொண்டு, நான் சிரித்தவாரே அவள் அருகில் செல்ல, பளார் என்று கன்னத்தில் விழுந்த அடியில்,,, சிரிப்பு எங்கோ பறந்து போனது!, வாங்கி அடியில் வந்த கோவத்தில் நான் பேச வாயெடுக்க

பொருக்கியடா நீ?” என்றவள்

என் கை பற்றி இழுத்தாள், நான் என் கையை உருவிக் கொண்டு முறைக்க, அவளும் முறைத்தாள், வா என்று செய்கை காட்டியவள், என் பதிலுக்கு காத்திராமல், அவள் பாட்டுக்குப் போனால், எப்பொழுதும் போல் நானும் பின் தொடர்ந்தேன். அவள் வண்டியில் ஏறி அமர்ந்து எண்ணப் பார்த்தாள், எதுவும் பேசாமல் நானும் வண்டியில் அமர்ந்தேன்.

கொஞ்சம் நேரம் கழித்து,

சாரி சொல்லு!”னு, அவள் என்னை பார்த்து முறைக்க,
[Image: 5tl81qB.jpg?1]

நான் எதுவும் பேசாமல் எதிரில் இருந்த சுமேஷ்-யை முறைத்தேன்,


சாரி சொல்லு!”னு இந்த முறை கொஞ்ச சத்தம் அதிகமாக வந்தது, அவளிடம் இருந்து, நான் திரும்பி மதுவைப் பார்த்து முறைத்தவாரே

சாரி, ஆனா மறுபடியும் இவளை தேவை இல்லாம தொந்தரவு செஞ்ச,,,, நான் மனுசனவே இருக்க மாட்டேன்"னு சொல்லிட்டு, சுமேஷின் வீங்கி இருந்த முகத்தில் லேசாய் ஒரு தட்டு தட்டிவிட்டு, விருவிரு அங்கிருந்து நடையை காட்டினேன், திமிராக.

அது திமிர் இல்லை, என் மீது எனக்கு இருந்த நம்பிக்கை, இடைப்பட்ட இந்த மூன்று வருடங்களில் என் உடலின் வளர்ச்சி, வொர்கவுட் பண்ணி என் உடலில் ஏற்றி இருந்த உரம், அப்புறம் முக்கியமாக என் பின்புலம், அதை பற்றி எனக்கு உண்டான புரிதல், அது கொடுத்த நம்பிக்கை. எனது அல்லது என் குடும்பத்தின் பின்புலம், பணவலிமையை நான் எப்போது வெளிக் காட்டிக் கொண்டதில்லை யாரிடமும், இருந்தும் எல்லோரிடமும் மறைக்கவும் முடியதல்லவா, அப்படியோ அறிந்து கொண்ட சில நண்பர்கள் வியப்பதுண்டு.

எப்படி, இப்படி ஒரு பெரும் செல்வச் செழிப்பான குடும்பத்தின் வாரிசாக இருந்து கொண்டு எந்த அலட்டலும் இல்லாமல், ரெம்பவும் எளிமையாக இருக்கிறேன் என்று?, சிலருக்கு அதனாலேயே என் மீது கூடுதல் விருப்பம்!. ஆனால் அவர்களுக்கு தெரியாது, இந்த எளிமைக்கு காரணமே அந்த பின்புலமும், என்னிடம் இருக்கும் பணமும் தான் என்று. இந்த சமூகத்தில் பணம் என்பது அதிகாரத்தை குறிக்கும், உண்மையான அதிகாரம் தன் கையில் இருப்பதை உணர்ந்தவர்கள் அலட்டிக் கொள்ளமாட்டார்கள், எளிமையாகவே இருப்பார்கள்.

அன்று இரவு ஒன்பது மணி, டிங்னு மெசேஜ் டோன் என் மொபைலில் இருந்து, எனக்கு தெரியும் அவளாத்தான் இருக்கும் என்று, எடுத்துப் பார்க்கவில்லை, பத்து நொடிகளில் அவளிடம் இருந்து கால் வந்தது, எடுக்கவில்லை, இத்தோடு சேர்ந்து 11வது கால், மறுபடியும் டிங்னு மெசேஜ் டோன், எடுத்து பார்த்தால் பக்கம் பக்கமாக ஏதோ அனுப்பியிருந்தாள், படித்துப் பார்க்க மனம் இல்லை. பின்ன என்னதான் நினச்சுக்கிட்டு இருக்கா! இவள சும்மா சும்மா ஒருத்தன் நோண்டுன, நான் ஒண்ணும் செய்யாம பாத்துக்கிட்டு இருப்பேன்னு நெனச்சாளோ! என்கிற கோபம்.

"லீவு மே அலோன்"னு கோவமா ரிப்ளை பண்ண

சாரி பாப்பா!"

பாப்பா!, என்னை எப்படி வீழத்தமுடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறாள், சிறு புன்னகை என் முகத்தில்

ம்ம்"

இன்னும் கோவமா?”

என்னனு சொல்லு, எனக்கு தூக்கம் வருது"

பாப்பா" - என் சிரிப்பின் அளவு பெரிதாகியது

லூசு"

சாரி பாப்பா, ரெம்ப வலிச்சதா?”, அதற்கு மேலும் அவளை கெஞ்ச வைக்க மனம் இல்லாமல் கால் செய்தேன், எடுத்ததும்

சாரி டா"என்றாள், பாப்பா வெறும் மேஸேஜில் மட்டும் தான்,

உன் சாரி தூக்கி குப்பைல போடு, அவன்டா என்னைய சாரி சொல்ல வச்சுடல"னு நான் செல்லமாக கோபித்துக் கொள்ள, சிரித்தவள்

உனக்கே இது ஓவரா தெரியல, அவன்ட நீ சாரியா கேட்ட?”

பின்ன பூரிய கேட்டாங்க?”

நீ அடிச்சப்ப கூட, அவன் என்கிட்ட வந்து கோபமா தான் பேசுனான், நீ சொன்ன சாரில, சார் என் கிட்ட சாரி கேட்டுட்டு,,, ஓடிட்டாரு"னு சொல்லி அவள் சிரிக்க

என்ன எதுக்கு அடிச்ச?”

"லூசு, உன்ன அடிச்சுட்டு,,, நான் எவ்வளோ கஷ்டபட்டேன் தெரியுமா?, சும்மா அதையே கேக்கக்காத!,,,, நீ எதுக்கு கால் எடுக்கல”

எதுக்குனு தெரியாத?”

நீ என் கால எடுக்க மாட்டேனு தெரிஞ்சு தான், மதியமே ஒண்ணு போட்டேன்"னு நக்கலாக அவள் சொல்ல

நான் கால் எடுக்க மாட்டேனு உனக்கு எப்படி தெரியும்"

எனக்குத்தான் இத்தாலில ஜோசியம் தெரியுமே!" சொல்லி அவள் சிரிக்க, நானும் கூட சேர்ந்து சிரித்தேன், பிறகு ஏதேதோ பேசினோம்,

ஹாப்பி பர்த்டே டா", வாட்ச்சை பார்த்தேன் 12, அவளே தொடர்ந்தாள்

சரி காலைல ரெடியா இரு, ஷார்ப்பா எய்ட் ஓ கிளாக் உன் வீட்ல இருப்பேன்! இப்போ நல்லா தூங்கு”னு சொல்லி வைத்தாள்.

நான் அப்படியே பெட்டில் படுத்து கண்மூட, ஐந்து நிமிடம் கழித்து, டிங்னு மெசேஜ் டோன், அவள் தான்

தூங்கிட்டியா?”

ஆமா"

ஒரு கோப ஸ்மைலி

பர்த்டே பாய்க்கு என்ன கிப்ட் வேணும்"

அதுதான் நீ நாளைக்கு எனக்கு டிரைவர் வேல பாக்குறிய, அது போதும்"

கோப ஸ்மைலி அவளிடம் இருந்து

அது ஓகே, வேற என்ன கிப்ட் வேணும்?” - அவள்

நீ என்ன குடுத்தாலும் ஓகே"

பிளீஸ் பாப்பா, நான் குடுக்குறது இருக்கட்டும், உனக்கு ஏதாவது ஆசை இருக்க?”

அந்த ஜினாலி ஜெய்ன மடக்க ஏதாவது வழி சொல்லேன்"னு மெசேஜ் போட்டுட்டு, எனக்குள் சிரிக்க

ஒரு செருப்பு ஸ்மைலி வந்தது, தொடர்ந்து கொஞ்ச கோப ஸ்மைலி

பலத்த யோசனைக்கு பின் கேட்டேன்

எனக்கு உன் பாப்பாவா,,, டிரைன்ல இருந்தோமே,,,அந்த மாதிரி ஒரு ரெண்டு நாள் எங்கயாவது போகானும்"

ஹார்ட் ஸ்மைலி வந்தது, தொடர்ந்து

“luv u “

“me too”

காலைல ரெடியா இருக்கு, இப்போ தூங்கு"

----------------------------
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 14-07-2020, 05:44 PM



Users browsing this thread: 12 Guest(s)