அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#59
பாகம் - 12 

அந்த டிரைன் நாட்களுக்கு பின்னால் எங்கள் நெருக்கம் இன்னும் அதிகமானது. சாம்பியன்ஷிப் போட்டிகளுக் அப்புறம், பானுவின் கவனம் படிப்பில் திரும்பியது, ஸ்கூல் ஃபைனல் இயர் வேறே, அவள் படிப்பினில் படு சுட்டி, வார விடுமுறைகளில் அக்கடமி வருவாள், அதுவும் ரிலாக்ஸ் செய்ய, ரெண்டு கேம் ஆடுவா. ஆனால் நான் இன்னும் தீவிரமாக பயிற்சி செய்தேன், அடுத்தவருடம் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று.

ஸ்கூல்லில் எப்போதும் போல ஒன்றாக சாப்பிடுவது, டெய்லி ஸ்கூல் முடிஞ்சு போகும் பொது என் ஸ்கூல் பேக்க எடுத்துட்டு போயிருவா, நான் பிரக்ட்டீஸ் முடிச்சுட்டு அவள் வீட்டுக்கு போய் அவளுடன் சேர்ந்து படித்து விட்டு, சைக்கிள்ல என் வீட்டுக்கு வந்துருவேன், காலையில மறுபடியும் பிரக்ட்டீஸ் முடிச்சிட்டு, வீட்டுக்கு வந்து கிளம்பி சைக்கிள் எடுத்துக்கிட்டு அவ வீட்டுக்கு போயி, அவளுடன் சேர்ந்து ஸ்கூல், இப்படித்தான் போனது மீதி வருடம்.

முதல் முறையாக சம்மர் ஹாலிடேஸ்க்கு கொஞ்சம் சோகத்துடன் சென்றேன் பழனிக்கு. போகும் வரைக்கும் இருந்த சோகம் தாத்தாவுடன் சேர்ந்து சுற்ற,, காணாமல் போனது, எண்ண பானுவ கொஞ்சம் மிஸ் செய்தேன். ஆன தினமும் கண்டிப்பா குறைந்தது ஒரு தடவையாவது பேசிறுவேன், இடையில் மெசேஜ் வேறு. அவள் மெடிக்கல் காலேஜ் கவுன்சிலிங் ரெண்டு நாள் முன்னாடி, தனக்கு சென்னை MMCயில் சீட் கண்டிப்பா கிடைக்கும்னு, அதனால அங்கேயே சேரப்போவதாக பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னாள், அவள் சென்னை போவதாக சொல்லிதும் நான் பேசாமல் இருக்க

ஹலோ, டேய் கேக்குதா"

ம்ம்"

உண்மையிலேயே சென்னைக்கு போறியா?”னு நான் பரிதவிப்புடன் கேட்க 

அம்மா அங்கதான் சேரச் சொல்றாங்க"

ஏன், இங்க கோயம்புத்தூர்ல தான் காலேஜ் இருக்கே, இங்கயே படியேன்!”கெஞ்சினேன் 

டேய் தமிழநாடலயே பெஸ்ட் காலேஜ் டா அது"னு என் எண்ணம் புரியாமல் பேசினாள்

கவுன்சிலிங் சென்று வந்தவள், சொன்னதைப் போல் சென்னை MMCயில் சேர்ந்து விட்டதாக சொன்னாள். வாழ்வின் சுயம் எனக்கு முதன்முதலாக உரைத்த தருணம் அது. அடுத்தவருடம் ஸ்கூல் தொடங்க, திரும்ப கோவை வந்தேன், பானு அக்கா இல்லாத கோவை என்பதை ஏற்றுக் கொள்ள மனம் தயாராய் இல்ல. அவள் காலேஜ் செல்லும் நாளும் வந்தது, அவள் எவ்வளவோ சொல்லியும் நேரில் வந்து வழியனுப்ப முடியாதென்று மறுத்துவிட்டேன்

அன்று மாலை டென்னிஸ் அக்கடமிக்கு எப்போதும் போல் செல்ல இன்ப அதிர்ச்சி, அங்கே அவள் எனக்கு முன்பாக வந்திருந்தாள், விளையாடிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவள் ஹாய்னு சிரித்து விட்டு விளையாடுவதை தொடர்ந்தாள். நான் குழப்பமாக இருக்க, அங்கேயே உக்காரந்து வேடிக்கை பார்த்தேன், கேம் முடியவும் வந்தவள்

என்ன சார்,,, மூஞ்சி உம்முணு இருக்கு?” நான் பதில் சொல்லாமல் மூஞ்சை திருப்பிக் கொண்டேன்

ஓகே,, பேசலனா போ,,, உனக்காக சென்னை MMC சேரமா,,,, இங்க கோயம்புத்தூர்ல காலேஜ் சேர்ந்தா , ஃபர்ஸ்ட் டே விஷ் பண்ண கூட வரல?”னு அவள் சொல்ல

என் காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை, அகம் மகிழ்ந்த நான் குனிந்த படியே இருந்தேன். அருகில் அமர்ந்தவள், என் தோள்களில் கை போட்டு, இன்னொரு கையால் என் முகத்தை பிடித்து திருப்பியவள், என் கண்கள் கலங்கியிருப்பதை கண்டவாள் முகத்தில் எரிச்சல்,

எல்லாத்துக்கும் அழுகைதானா? பொம்பள பிள்ளைங்க கூட இப்படி அழமாட்டோம்"னு சொல்ல, லேசாக சிரித்தவன் 

உண்மையிலேயே சென்னை போகலையா?”

என் போகனுமா?”, நான் வேண்டாம் என்று தலையாட்ட, என் கண்ணீரைத் துடைத்தவளிடம் 

அப்போ எதுக்கு அன்னைக்கு போய் சொன்னிங்க?”னு கேட்க 

சும்மாதான், உண்மையிலேயே அக்கா மேல பாசமா இருக்கியானு செக் பண்ணலாம்னு" அவள் சொல்ல, செல்லமாக அவளை அடித்து விட்டு, அவள் மீது சாய்ந்து கொண்டேன்

------------------------------

அன்று எனக்கு பதினெட்டாவது பிறந்தநாள்

அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த கதையை முன் நகர்த்திய முக்கியமான சில நிகழ்வுகளும், உரையாடல்களும் 

அடுத்த இரண்டு வருடங்களும் நடந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் என் கேட்டாகிரியில் வென்றேன்.

காலேஜ் சென்றதில் இருந்து பானுவின் டென்னிஸ் ஆர்வம் குறைந்தது, மருத்துவம் அதைவிட அவளுக்கு பிடித்ததே காரணம்.

வங்க, போங்கனு அவளை அழைத்த நான் வா! போ! என்று அழைக்க தொடங்கி இருந்தேன் நான், அவளின் வற்புறுத்தலால்

அம்மா கூட இப்பொழுதெல்லாம் என்னிடம் கொஞ்சம் சகஜமாக பேச அரம்பித்திருந்தாள்

ஜினாலி ஜெய்ன், ஒரு வட இந்திய பெண், புதிதாக எங்கள் டென்னிஸ் கிளப்பில் சேர்ந்திருந்தாள், சும்மா செம்ம ஹாட் மச்சி, பானுவின் வயது இருக்கலாம், விளையாடிக் கொண்டிருக்க, நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க

[Image: LlkTuHC.jpg]
என்னடா?,, வயசுக்கு வந்துட்டே போல?” என் தோல்மேல் கைபோட்டு கேட்டாள் பானு,, நான் அசடு வழிந்தபடி சிரிக்க 

"பாக்க கும்முணு இருக்கா? இல்ல?”னு மறுபடியும் என்னைச் சீண்ட "ச்சீ"னு நான் சொல்ல, எங்கள் பேச்சின் எல்லைகள் இன்னும் கொஞ்சம் விரிவடைந்தது. இது நடந்தது நான் பத்தாவது படிக்கும் போது.

------------------------------

நான் டிவெல்த் வகுப்பு படிக்கும் போது 

ஜினாலி ஜெய்ன், விளையாடிக் கொண்டிருக்க, நான் எப்போதும் போல் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன், பானு என்னை நோக்கி வந்தாள், வந்தவள் டென்னிஸ் ராக்கெட்டால் என் முகத்தில் வலிக்காதவாறு அடித்தவள்

ச்சீ,, அசிங்கமா இல்ல,, இப்படி ஜொள்ளு வாடிய பாக்குறதுக்கு?”னு என்னை முறைத்தவாரே கேக்க 

இதெல்லாம் வாலிப வயசு, அசிங்கமே படமாட்டோம், தம்பி சைட் அடிக்கும் போது, ஒரு நல்ல அக்கானா அப்படியே கண்டுக்காத மாதிரி போகணும், இப்படி அட்வைஸ் பன்னி அறுக்கக் கூடாது"னு நான் நக்கலாக கூற

இந்த முறை கொஞ்சம் வலிக்கும் படியாகவே தலையில் அடித்தால்

,,,வலிக்குது கா"னு மறுபடியும் அடிக்க வந்தவளை, எழுந்து தடுக்க, மறுபடியும் அடித்தாள், இந்த முறை டிக்கியில் பலமாக 

எத்தன தடவ சொல்றது, அக்கானு கூப்பிடாதனு?” என்று சொல்லி,

ஆமா, இப்போ கொஞ்ச நாள இப்படித்தான்

நான் லேவென்த் லீவு முடிஞ்சு வரும் போது, அவளை விட கொஞ்சம் உயரமாக வளர்ந்திருந்தேன், திடீர் வளர்ச்சி, அதில இருந்து இவள் கேட்டு கொண்டு, இல்ல,, இல்ல,, கெஞ்சிக் கொண்டு இருக்கிறாள்

"அக்கானு கூப்பிடாத! பேர் சொல்லிக் கூப்பிடுனு!”, நான் அக்கானு கூப்ட்டா, சுத்தி இருக்கவங்க எல்லாம் அவளுக்கு ஏதோ அதிக வயசுனு நெனப்பாங்கனு ஒரு எண்ணம் அவளுக்கு 

பேர் சோல்லிலாம் கூப்பிட முடியாது, அக்கானு தான் கூப்பிடுவேன்"இந்த முறை நானும் அவளை போன்றே முருக்கிக் கொண்டு 

டேய்,, பிளீஸ் டா, அக்கானு கூப்டாதே"னு பாவமாக கெஞ்ச, கொஞ்சம் இறங்கினேன்,

ஓகே,, இனிமே அக்கானு கூப்பிடல"னு சொல்ல, முகம் மலர்ந்து என் கன்னத்தை கிள்ள அவள் கை நீட்ட, நக்கலாக சிரித்து 

அதுக்காக பானுனு எல்லாம் கூப்பிட முடியாது, வேணும்னா ஆண்ட்டினு கூப்பிடுறேன்"னு சொல்லி நான் ஓட்டம் எடுக்க, என்னை அடிக்க தூரத்தினாள் 

------------------------------

இன்னொருநாள் 

டேய் அந்த சுமேஷ் பையன் இருக்கான்ல, திடீர்னு வந்து “I love you” ங்குறான்!"னு அவள் சொல்ல 

நீ என்ன சொன்ன?”னு கூலா நான் கேட்க 

என்ன சொல்லிறுப்பேன்னு சொல்லு?”அவள் கேட்க

கொஞ்சம் பதறி விட்டேன், ஒரு வேலை ஓகே சொல்லிறுப்பலோ என்று, என்னதான் எனக்கு அப்பொழுது கொஞ்சம் மெச்சூரிட்டி வந்திருந்தாலும், அவள் வாழ்க்கையில் முதன்மையான ஆண் என்ற இடத்தை இன்னொருத்தனுக்கு விட்டுத்தர தயாராகி இருக்கவில்லை. கொஞ்சம் காலவரமான மனதுடன் 

என்ன சொன்ன மது?” 

முடியாதுணு சொன்னேன்!" சொல்லி சிரித்தாள், நான் முறைக்க, என் கன்னத்தை கிள்ளியவள் 

"நீ இன்னும் மாறவே இல்ல, அதே பொறாமை!, கவலைப்படாத உனட்ட சொல்லாம, உனக்கு பிடிக்காதே யாரைக்கும் லவ் பண்ண மாட்டேன்"னு சொல்ல, பூரித்துப் போனேன். 
------------------------------
மற்றொருநாள்

மதுவா?, வேண்டாம் நீ பானுனே கூப்பிடு!”. நான் அவளை பேர் சொல்லி முதல்முறையாக அழைத்தபோது அவள் கூறிய வார்த்தைகள்.

ஏன்"

என்ன யாருமே அப்படிக் கூப்பிட்டதில்லை! நீ அப்படி கூப்பிடா கூட திரும்ப மாட்டேனோ என்னவோ!”

ஓகே,,, உன் இஷ்டம்,,,, மது வேண்டாம்னா, அக்கானு தான் கூப்பிடுவேன்"னு சொல்லி நான் முரண்டு பிடிக்க, கை எடுத்து கும்பிட்டாள்

நீ மதுனே கூப்பிடு,,,,, நான் பழகிக்கிறேன்"னு சொல்ல,

அது"னு நான் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்.

ஸ்கூல் ஃபைனலியர்யின் பொது நடந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் வெளியேறினேன், என் டென்னிஸ் வாழ்க்கையின் முதல் சறுக்கல், காயம், ஹம்ஸ்ட்ரிங் லிக்மெண்ட் கிழிந்திருந்தது. குணமடைந்ததும், கடும் பயிற்சி, மறுபடியும் காயம், இந்த முறை பேக் ஸ்ட்ரெஸ், இரண்டு மாதங்கள் கழித்து நடந்த டோர்ணமென்ட் வென்றபோது, கால்களில் சிறு வலி, சோதித்துப் பார்த்ததில், ஷின் ஸ்ட்ரெஸ்.

அடுத்தடுத்து காயங்களால், கொஞ்சம் பதறிய தாத்தாவின் வற்புறுத்தலால், லண்டன் சென்றேன் மருத்துவ பரிசோதனைக்கு. பரிசோதித்த மருத்துவ குழு, சொன்னது, நான் என் உடலை அளவுக்கதிகமாக வருத்திக் கொண்டேன், டென்னிஸ் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க வேண்டும் இன்னும் குறைந்தது ஒரு வருடமாவது அவர்கள் சொல்லும் பயிற்சிகளை தொடரவேண்டும், கோர் ஸ்ட்ரெந்த் இம்ப்ரூவ் பண்ண வேண்டும் என்று, இல்லாவிட்டால் டென்னிஸ் வாழ்க்கையை மறந்திட வேண்டும் என்று. முதலில் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் வேறு வழியில்லாமல் உடலை வலிமையாக்க அவர்கள் சொன்னதையும் விட அதிகமாக பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்

என் காயங்கள் காரணமா? இல்லை உண்மையான மகன் மீது கொண்ட அக்கரையானு தெரியல, அம்மா என்னிடம் கொஞ்சம் உரிமை, நிறைய அக்கறையோடு பழகினாள். தினமும் சிறிதாவது கதை அடிக்கும் அளவுக்கு

------------------------------

காலேஜ் முதல் வருடம்

கோவை GCTயில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்திருந்தேன், தாத்தா வெளிநாடு சென்று படிக்க சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்திருந்தேன்.

இன்னும் டென்னிஸ் பயிற்சி முழு வீச்சில் ஆரம்பிக்க வில்லை, டெக்னிக் இமப்ரவவேமெண்ட், கோர் உறுதியாக்க ஜிம், ஜூனியர் பசங்களுக்கு அக்கடமில பயிற்சி, அப்புறம் சும்மா தினமும் யாருடனாவது ரெண்டு கேம் ஃப்ரெண்ட்லியா

காலேஜ் சேர்ந்த சில தினங்கள் கழித்து எனக்கும், பானுவுக்கும் சாட்டிங்கில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி 

"ஏண்டா, இங்க மொக்க காலேஜ்ல இன்ஜினியரிங் சேர்ந்த?”

ஹலோ, GCT ஒண்ணும் மொகக்க காலேஜ் இல்ல"

ஒரு வரத்துலேயே காலேஜ் மேல பாசம் பொங்குது!”

ஆமா, எம்பிபிஎஸ்கக்கு கோயம்புத்தூர்ல உங்க காலேஜ்னா, இன்ஜினியரிங்க்கு எங்க காலேஜ்"

ஓகே, ரெம்ப பீத்தாத, நான் அத கேக்கலா, ஆப்ராட் போய் இருக்கலாமே?”

நீயும் தான் சென்னை போய் இருக்கலாம், நீ என் போல?, அது மாதிரி தான்"

எனக்காகவா?”

இல்ல"

அப்புறம்”

என் பாப்பாவுக்காக"

பாப்பாவா யாரு அது"

அது ஒரு லூசு, என் கூட இப்போ சேட் பண்ணிக்கிட்டு இருக்கு"

ஒரு கோவ ஸ்மைலி அவளிடம் இருந்து 

சாரி அக்கா"

மறுபாடியும் நிறைய கோவ ஸ்மைலி

சாரி பாப்பா"

“luv u, நீ தான் என் பாப்பா"

உனக்கு நான் பாப்பானா, எனக்கு நீயும் பாப்பாதான்"

“luv u" 

“me too”

இப்படி மது எனக்கு பாப்பாவானாள்

--------------------------------------------------

டேய் இப்போ நீ வரியா? இல்ல நான் போகவா?” எரிச்சலில் கத்தினாள் மது, வரலனு கை காட்டிட்டு, ஆடுவதிலேயே குறியாய் இருந்தேன், பத்து நிமிடம், கேம் முடிந்தது

திஸ் இஸ் நாட் ஃபேர் மணி, யு ஷுட் கோ பிட் சாஃப்ட் ஆண் மீ!” னு பார்க்கிங் நோக்கி நடக்கும் போது குழைந்தாள்,,, ஜினாலி ஜெய்ன், அவளுடன் தான் ஆடி ஜெய்த்திருந்தேன்

நோ வே!, டோன்ட் எக்ஸ்பெக்ட் மீ டூ கோ சாஃப்ட் வித் அ ப்யூடிஃபுல் கேர்ள் லைக் யு"னு நானும் வழிய 

ச்சீ நாட்டி" என்னை செல்லமாக அடித்தாள், மதுவை பார்த்ததும் என்னிடம் "பாய்" சொல்லிவிட்டு சென்றாள்

நீ அப்போவே போறேன்னு சொன்ன"னு நான் நக்கலாக அவளப் பார்த்து கேக்க, எதுவும் சொல்லாமல் முறைத்தபடி அவள் வேஸ்பா-வை ஸ்டார்ட் செய்தாள், எதுவும் சொல்லாமல் ஏறி அமர்ந்தேன்.

--------------------------------------------------

என்னை முறைத்துக் கொடிருந்தாள் மது

பிளீஸ் மது! ஏதாவது ஐடியா குடென்?”னு ஜினாலி ஜெய்ன்ன மடக்க இவளிடம் ஐடியா கேட்டதுதான் காரணம்

பிளீஸ் மது"னு நான் மறுபடியும் கெஞ்ச, முறைத்தவள் 

என்ன படம் பாக்க விடு, கடுப்படிக்காத"னு அவள் சூடாக சொல்ல, நான் அமைதியானேன்

ஆம் இப்பொழுதெல்லாம் ஜினாலி ஜெய்ன் மீது ஒரு சிறு மையல்,,, எனக்கு. நைட் ஷோ படம் முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது இடையில் நிறுத்தி டீக்குடித்துக் கொண்டிருந்தோம்

அவ எல்லாம் ஒரு ஃபிகர்-, நல்ல மைதா மாவு மாதிரி"னு, மது காரினுள் அமரந்தவாரே கூற, கதவருகே வெளியே நின்ற நான், அவளை லேசாக சிரித்துக் கொண்டு 

கரெக்டா சொன்ன மது, எனக்கு மைதா மாவுதான் புடிக்கும்"னு நாக்கல சொல்ல

முறைத்தவாரே டீயை குடித்து முடித்தவள், கிலாசை என்னிடம் நீட்டினாள், நான் என் டீயை குடித்தவாறே கிலாசையும், காசையும் குடுத்து விட்டு வந்து கார் கதவை திறக்க, அது உள்ளிருந்து லாக் செய்ய பட்டிருந்தது. டிரைவர் சீட்டில் இருந்த மது, என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தாள். நான் அவளை முறைக்க, அவள் காரை எடுத்தாள், எடுத்தவள் ஒரு பத்தடி சென்று நிறுத்தினாள். நான் என் இடுப்பில் இருகைகளையும் ஊன்றி காரை முறைத்தேன், கார் ரிவர்ஸில் வந்தது, என் அருகே நின்றது, நான் அசையாமல் நின்றேன். கண்ணாடியை இறக்கியவள் 

இப்போ வாரிய? இல்ல கிளம்பட்டுமா?”னு அவள் முறைக்க, நானும் முறைத்துக் கொண்டு 

கிளம்பு, கிளம்பு, உங்க தயவு ஒண்ணும் தேவை இல்ல, இப்போ ஃபோன் பண்ண, என் மைதா மாவு பறந்து வருவா,, பாக்குறியா?”னு கேக்க, என்னை எரிப்பது போல் பார்த்தாள், கொஞ்சம் ஓவரா போய்டோம்னு எனக்கு தோண, அமைதியாக காரில் ஏறி அமர்ந்தேன், நான் டோர் அடைக்கும் முன் வண்டி பறக்க, அந்த விசையில் நான் தள்ளாடினேன், பதறி சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு அவளப் பார்த்தால்

[Image: LBkaxzF.jpg]

அவள் என்னை முறைப்பதை நிருத்தவில்லை.

--------------------------------------------------

டேய், அது ஒரு மொக்க ஃபிகர்!!,,, அவகிட்ட போய் விழிஞ்சுக்கிட்டு இருக்க?”, ஜினாலி ஜெய்னிடம் கடலைப் போட்டுக் கொண்டிருந்த என்னை, கையை பிடிச்சு இழுத்துக் கொண்டு போகும் போது சொன்னாள் மது, நான் அவளை செல்லமாக முறைத்து

இங்க பாரு!,, உனக்கு வேணா அவள பிடிக்கமா இருக்கலாம்!,,,அதுக்காக மோக்க ஃபிகர்னு எல்லாம் சொல்லாத, அவ ஒரு குமத்தா!”னு சொல்ல, நின்றவள், என்னை கேவலமா பாத்து

ஏண்டா?,,,,, உன் டேஸ்ட் இவ்வளவு கேவலமா இருக்கு? வேற நல்ல அழகான பொண்ணே கிடைக்கலையா உனக்கு?”னு சொல்ல

முதல்ல உன் சகவாசத்த கட் பண்ணனும், இல்ல உன் கண்ண செக் பண்ணனும், இவள விட அழகான பொண்ணு எனக்கு தெரிஞ்சு இல்ல!”னு சிரிப்பு கலந்த கோபத்துடன் சொல்ல,

பண்ணி, இவ உன்னவிட மூணு வயசு பெரிய பொண்ணு!”னு சொல்லியவள்

வயசெல்லாம் ஒரு ப்ராப்ளமா!”னு நான் கேக்க 

ஒரு ஃப்ரீ அட்வைஸ் சொல்றேன் கேளு, வயசு அதிகமான பொண்ணுங்னா ரெம்ப டாமினேட் பண்ணுவாளுக, உனக்கு ஓகேவா?” அவள் கேக்க, நான் சிரித்தவாரே தலையாட்ட, என் தலையில் தட்டியவள்

"உன் வயசுல, இல்ல உன்னவிட சின்ன பொண்ண பாத்து சைட் அடி!” அவ சீரியஸா அட்வைஸ் பண்ண, நான் கை எடுத்து கும்பிட்டு

போதும்,,,, வண்டிய எடு, என்னால முடியல!”சொல்ல, சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினோம், நான் என் வீட்டில் இறங்கிய பின்பும் உம்மென்று இருக்க, “ஓய்" என்று அழைத்தாள், நான் நிமிர்ந்து பாக்க,

எனக்கு தெரிஞ்சு ஒரு அழகான பொண்ணு இருக்கா!, எங்க காலேஜ்ல, இன்ட்ரோ கொடுக்கட்டா?!”, அவள் கேக்க, நான் ஈ-னு இளித்தவாறு தலையாட்ட

அய்யயே, தொடச்சுக்கோ, பொண்ணுனா ஏன்டா இப்படி அலையுரிங்க?”னு நாக்கலாக கேட்க

அதெல்லாம் யூத் மேட்டர், உன்ன மாதிரி ஆண்ட்டிக்கெல்லாம் புரியாது!”நானும் திரும்பி நாக்கலாக சொல்ல, முறைத்தவாரே வண்டியை எடுத்தாள், நான் கூறுக்க சென்று தடுத்து

எப்போ இன்ட்ரோ கொடுப்ப?” அசடு வழிந்து கேக்க, இப்பொழுது அவள் நாக்கலாக என்னைப் பார்த்து சிரித்து

கொஞ்ச நாள் உன் வாலை சுருட்டிக்கிட்டு,,,, நல்ல பிள்ளையா இருந்தா,,, யோசிக்கிறேன்"னு சொல்லி அவள் வண்டியை திருக்க

நீ பண்ண அட்வைஸ்ல திருந்திட்டேன், இப்போ இருந்தே நான் நல்ல பிள்ளைதான்" அவள் முதுகைப் பார்த்து நான் கத்த, அவள் டா,,,டா, காட்டி விட்டுச் சென்றாள்.

--------------------------------------------------

ஏய் மது! பிளீஸ் நானும் வர்றேன்!”னு கெஞ்சிக் கொண்டிருக்க, கண்டுகொள்ளாமல் மேக்கப் பண்ணிக் கொண்டிருந்தாள் 

பிளீஸ், எவ்வளோ நாலா கேக்குறன்" திரும்பி பார்த்தவள்

நீ சின்னப் பையன் டா! அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டே!" நக்கலாக சிரித்தவாரே சொன்னாள், உண்மையான கோபத்தில் முறைத்தேன்

டேய், உனக்கு இன்னும் 18 வயசு ஆகல, கண்டு பிடிச்சா ப்ராப்ளம் ஆகும்!, பூரிஞ்சுக்க சும்மா சின்ன பிள்ள மாதிரி முஞ்ச தூக்கி வச்சுகக்காதே, பக்க சகிக்கலா!”

நான் அமைதியாக இருக்க, என் கன்னத்தை தடவியவள்

நீ வளந்து பெரியவன் ஆனதும், நானே உண்ண கூட்டிடு போவேணாம். இப்போ நல்ல பிள்ளையா வந்து என்ன டிராப் பணனுவியாம்!”னு நக்கலாக கொஞ்ச 

வண்டி ஓட்டும் போது மட்டும் நான் சின்னப் பிள்ளை இல்லயா? எனக்கு லைசென்சு கூட இல்ல"னு இன்னும் அதே முறுக்கக்கோடு சொல்ல, என் பதிலை எதிர்பாராமல் அவள் பாட்டுக்கு வெளியே சென்றாள், வேறு வழி இல்லாததால் நானும் அவளைத் பின் தொடர்ந்தேன்

சிறிது நேரத்திற்கு பிறகு, கோவையில் இருக்கும் ஒரே பப், இப்பொழுதெல்லாம் காலேஜ் gang கூட சேந்து அடிக்கடி போகிறாள், அதன் முன்னாள் பைக்கை நிறுத்தி இறங்கிக்கொள்ள, நான் முன் நகர்ந்து ஹாண்டில் பார் பிடித்துக் கொண்டு அவளை முறைத்தேன்

ஹாய் பானு"னு கோரஸா ஒரு சத்தம், அருகில் வந்தனர், இவளின் காலேஜ் gang 

பிரதீப்,,,, ரெம்ப ஆசப்படுறான்டா,,, இவனையும் கூட்டிடு போலாமா"னு என்னை காட்டி பானு கேக்க 

இந்த பிரதீப்பைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை, ரெம்ப ஸீன் போடுவான், என்ன ஏதோ ரெம்ப சின்னப் பையன் போல நடத்துவான், அரசியல்வாதி ஒருத்தாரோட பையன்.

இல்ல பானு, இது மெம்பர்ஸ் ஒன்லி பப், தெரிஞ்ச என் மெம்பர்ஷிப் கேன்ஸல் பன்னி, மொத்தமா பார் பன்னிருவங்க, சாரிப்பா"னு இவளைப் பார்த்து இளித்துக் கொண்டே, பிரதீப் கூற

சாரி டா, நீயே கேட்டேல!,, இவன் கூட சொல்லுறான் அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டேனு!” அவள் சொல்ல மொத்த கும்பலும் என்னை பார்த்து சிரிக்க, நான் அவளைப் பார்வையால் எரித்து விட்டு வண்டியை திருக்கினேன், நான் கிளம்ப அவள் ஏதோ கத்தினாள், என் காதில் எதுவும் விழவில்லை.
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 13-07-2020, 09:06 PM



Users browsing this thread: 5 Guest(s)