02-03-2019, 12:06 PM
திரும்பி வந்த ரோஷன் நித்து நவீனுக்கு சிகிச்சைக்காக மருந்துகள் குடுத்து இருக்கிறார்கள் அவனை தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும் இந்த சிகிச்சை முடிய ரெண்டு நாட்கள் ஆகும் அதன் பிறகு நவீனிடம் பேசலாம்னு சொல்லறாங்க என்ன பார்க்க போகலாமா என்றான். நானும் சரி அவர்கள் சொல்லும்படியே தூர இருந்து பார்க்கலாம் என்று அவனோடு நடந்தேன். ஒரு அரை கிலோமீட்டர் நடந்த பிறகே ஒரு கட்டிடம் கண்ணுக்கு தெரிந்தது. வெளியே மரங்கள் நிறைந்து இருந்தது போல உள்ளே எங்கு பார்த்தாலும் செடிகள் பூந்தொட்டிகள் இருந்தன. கட்டிடத்தின் உள்ளே கொஞ்சம் நடந்து சென்றதும் ஒரு பெரிய மர கதவு மூடி இருந்தது. நாங்க சென்றதும் அங்கே இருந்த ஒரு நர்ஸ் போன்ற பெண். கதவை திறக்க மீண்டும் ஒரு வழி சென்றது அதில் நடந்து சென்றதும் ஜெயில் போல சிறு சிறு அறைகள் இருந்தன.
ஒரு அறையின் முன்னே நின்ற நர்ஸ் கதவின் மேல் பகுதியில் இருந்த ஒரு சிறிய ஜன்னலை திறந்து விட ரோஷன் முதலில் பார்த்தான் பிறகு என்னை பார்த்து நித்து நீ பார்த்தா வருத்தப்படுவே என்று சொல்ல நான் இல்லை பரவாயில்லை என்று அவனை தள்ளி விட்டு அந்த ஜன்னல் வழியே பார்த்தேன். ஒரு மரக்கட்டிலில் இடுப்பில் ஒரு சிறு துணி மட்டுமே இருக்க மூன்று நாட்களுக்கு முன் பார்த்ததற்கு இப்போ பாதியை இளைத்து ஷேவ் செய்யப்படாத முகம் நவீனை அப்படி பார்த்ததும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று அவரிடம் பேச வேண்டும் என்று தான் தோன்றியது. ஜன்னல் வழியே நவீன் என்று கூப்பிட்டு பார்த்தேன். அவர் பதில் சொல்லவில்லை ஏன் கூப்பிட்டது கூட அவருக்கு கேட்டதா என்று தெரியவில்லை. நவீனின் நிலைமையை பார்த்து கொண்டே நிண்டிருந்த என் கண்களில் நீர் வழிய அதை துடைக்க கூட மனம் இல்லாமல் பார்த்து கொண்டிருந்தேன். பக்கத்தில் நின்று கொண்டிருந்த நர்ஸ் மேடம் உங்க பெயர் என்ன என்றாள் நான் நித்தியா என்று சொல்ல அவள் இந்த பெயர் தான் மேடம் நவீன் சார் நினைவோடு இருக்கும் போதெல்லாம் சொல்லுகிற ஒரு வார்த்தை நீங்க அவருக்கு என்ன உறவு என்று கேட்க எனக்கு நெஞ்சில் ஆயிரம் ஊசிகள் ஒரே சமயத்தில் குத்துவது போன்று இருந்தது அந்த கேள்வி பதில் சொல்லாமல் இருக்க அவளே உங்க அண்ணனா நவீன் சார் என்று மறுபடியும் கேட்க எனக்கு ஒரு வேளை ரோஷன் நவீன் மணமானவர் என்பதை பதியவில்லையோ என்று தோன்றியது. இப்போ நான் அவர் மனைவி என்று சொல்லி அதனால் எதாவது சங்கடங்கள் வந்து விடுமோ ரோஷனிடம் பேசாமல் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்து பதில் சொல்லாமல் கண்களை மட்டும் துடைத்து கொண்டு நர்ஸிடம் சிஸ்டர் அவரை நல்ல படியா கவனித்து கொள்ளுங்க சீக்கிரம் குணம் அடைய எல்லா உதவியும் செய்யுங்க என்று பேசி கொண்டிருக்கும் போதே ரோஷன் என் தோளில் கை வைத்து நித்து டாக்டர் கிட்டே பேசலாமா என்றான். என் தோள் மீது அவன் கை உரிமையுடன் இருப்பதை பார்த்த நர்ஸ் கண்டிப்பா நான் ரோஷனின் மனைவி என்றே முடிவு செய்து இருப்பாள்.
நவீனை பார்த்த பிறகு என் கவலை எல்லாம் அவரை பற்றியே இருந்தது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் ரோஷன் என்ன செய்கிறான் என்பதெல்லாம் யோசிக்க கூட இல்லை. ரோஷன் சரி வா நித்து டாக்டரை பார்த்து பேசலாம்னு கூப்பிட கடைசியாக ஒரு முறை அந்த சிறு ஜன்னல் வழியாக நவீனை பார்த்து விட்டு ரோஷனை பின் தொடர்ந்தேன். மீண்டும் கொஞ்ச தூரம் சில கதவுகள் கடந்து ஒரு அறைக்குள் ரோஷன் நுழைய நானும் சென்றேன். டாக்டர் கம்ப்யுட்டரில் ஏதோ செய்து கொண்டிருந்தார். ரோஷன் வணக்கம் சொல்ல நானும் டாக்டருக்கு வணக்கம் சொல்ல அவர் தலையை நிமிர்த்தி பார்த்து ஹலோ வாங்க ரோஷன் நான் உங்களை ரெண்டு நாள் கழித்து தானே வர சொன்னேன். இன்னைக்கு கண்டிப்பாக நவீனை சந்திக்க முடியாது என்று சொல்ல ரோஷன் அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து இவங்க ரொம்ப வருபுறுத்தியதால் தான் வந்தேன் நவீன் அறைக்கு சென்று விட்டு தான் வந்தோம் அவனை ஜன்னல் வழியாக தான் பார்த்தாங்க என்று சொல்ல நானும் ஆம் என்று தலை ஆட்டினேன். டாக்டர் நித்தியா நல்ல வேளை உங்க கணவருக்கு ரோஷன் போன்ற ஒரு நண்பர் கிடைத்தது ரோஷன் மட்டும் முயற்சி எடுத்து உங்க கணவரை இங்கே கொண்டு வரவில்லை என்றால் நவீன் குணமாவதில் சிக்கல் ஏற்ப்பட்டிருக்கும் என்று சொல்ல எனக்கு பின் மண்டையில் ஒரு கேள்வி எழுந்தது. ரோஷன் என்னிடம் சொன்னது நவீனை அவன் நண்பன் மூலமாகத்தானே ஹாஸ்பிடலில் சேர்த்ததாக டாக்டர் சொல்லுவது வேறு விதமாக இருக்கிறதே என்று. இப்போ அவனை கேட்க முடியாது பிறகு கேட்டு கொள்ளலாம்னு டாக்டரிடம் டாக்டர் நவீனுக்கு என்ன பிரச்சனை என்று ஒன்றும் தெரியாதது போல கேட்க அவர் பிரச்சனை பெருசு இல்ல நித்தியா அவர் கொஞ்சம் குடிக்கு அடிமை ஆகி கொண்டிருந்தார். பொதுவா இப்படி அடிமை ஆகிறவர்கள் மெதுவாக தான் அதில் சிக்குவார்கள் ஆனால் நவீன் பொருத்தவரை அவர் திடீரென்று அதிக அளவில் குடிக்க ஆரம்பித்து இருப்பது தான் பெரிய சிக்கல் என்றார். எனக்கு ரெண்டாவது கேள்வி அப்போ நவீன் சமீபத்தில் தான் குடிக்க ஆரம்பித்து இருக்கிறார் ரோஷன் சொன்னது போல கல்யாணத்திற்கு முன்பு குடி பழக்கம் இல்லாது இருந்திருக்கலாம். அப்போ நான் தான் நவீனை பற்றி தவறாக நினைத்து இருக்கிறேனா என்று. டாக்டர் என்ன சிகிச்சை செய்கிறார் என்றும் எவ்வளவு நாள் இதை தொடரனும்னு சொல்ல நானும் கவனமாக கேட்டு கொண்டேன்.