அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#49
பாகம் - 9

பானு என்னையும் அவள் படிக்கும் ஸ்கூல்லில் சேரச் சொன்னதில் இருந்து, பத்து நாளில் அவள் படித்த ஸ்கூலில் அட்மிஷன் கிடத்தது. தினமும் நாங்கள் சந்தித்துக் கொள்வோம், சிலரிடம் பெருசா பழக்கம் இல்லாட்டலும் சட்டுனு ஒட்டிக்குவோம்ல அந்தமாதிரி நான் பானுவிடம் ஒட்டிக்கொண்டேன்

ஒன்றரை மாதங்களுக்குப் பின், நான் புது ஸ்கூலில், என் கிளாசில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருதேன். ஒன்பதாம் வகுப்பு, எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, எனக்கு யாரையும் தெரியாததால், என் முன்னால் உள்ள பெஞ்சை சுரண்டிக் கொண்டிருந்தேன், இறுக்கமான எனக்கு பழக்கப் பட்ட மனநிலையில்.

பக்கத்தில் யாரோ வந்து அமர, திரும்பிப் பார்த்தால் புன்முறுவலுடன் ஸ்கூல் டிரஸ்ல் பானு. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தது விட்டு அவளது கிளாஸ்க்கு சென்றாள். அவள் பேசிச் சென்றதில் மனசு சற்று லேசா-ஆக, நிமிர்ந்தது பார்த்தால், கிளாசில் உள்ள அனைத்து பாசங்களும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள், பின்ன, ஸ்கூலின் அழகு தேவதை, ஒரு புதுப் பையனிடம் அருகில் அமர்ந்து பேசினால் எல்லாரும் அதிசியமாத்தானே பார்ப்பார்கள். புது ஸ்கூல்க்கு வெகு இயல்பாக பழகிக் கொண்டேன், உபயம் பானு. எல்லோரிடமும் என்னை அவள் தம்பி என்றே அறிமுகம் செய்தது வைத்தாள், பானுவிடம் பேச வாய்ப்பு கிடைக்கும் என்கிறே ஒரே காரணத்துக்காகவே என்னுடன் நட்பு பாராட்டினார் பலர்.

அடுத்த சில மாதங்களில் நடந்தவை - என்னை பானுவில் டெய்ல்(வால்) என்று ஸ்கூலிலும், டென்னிஸ் அக்கடமியிலும் கிண்டல் அடிக்கும் அளவுக்கு அவளுடனே ஒட்டிக் கொண்டிருந்தேன். ஸ்கூல் டென்னிஸ் டீமில் சேர்ந்திருந்தேன், டென்னிஸ் அக்கடமியில் தினம் காலை, மாலையில் பயிற்சி, பானு காலையில் மட்டும் தான் வருவாள், இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு என்பதால் மாலையில் டியூஷன் சென்று விடுவாள். உடன் பிறந்த அக்கா தம்பி போல், நெருங்கி இருந்தோம், நான் கோவை வந்த இந்த ஆறு மாதங்களில். பானு ஒரு நாள் என்னை அவள் அம்மாவிடம் அழைத்துச் சென்று 

"ஹியர் ஐ இன்ட்ரொடியூஸ் யு டூ யுவர் நியூ சன் Mr.மணி, மை அடோப்டேட் தம்பி"னு 

சொல்ற அளவுக்கு, பாசமலர் ரேஞ்ச்க்கு மிகவும் நெருக்கமானோம். என்ன தாத்தாவும், ஆச்சியும், செல்லமாக, நான் அவர்களை மறந்து விட்டதாக அலுத்துக் கொள்வார்கள்.

நான்கு மாதங்கள் கழித்து ஒருநாள் மாலை, நான் குளித்து விட்டு வரும் போது என் ஃபோன் ரிங் சத்தம் சன்னமாக வர, அதைத் தேடி, என் டென்னிஸ் கிட் பேக்கில் இருந்து கண்டு பிடித்து எடுக்குமுன் கால கட்டானது, பானு தான் அழைத்திருந்தாள். எடுத்துப் பார்த்தால், இரண்டு மிஸ்டு கால அக்கடமில இருந்து, இவளிடம் இருந்து எட்டு கால், என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே இவளுக்கு கால் செய்யும் முன் அவளே அழைத்தாள். அட்டன் செய்ய 

"பன்னி, எத்தன தடவ ஃபோன் பண்றது, அட்டன் பண்ண மாட்டியா?"னு கோபமாக கத்த, நான் குளித்து விட்டு இப்போ தான் வந்ததாக சொல்ல 

"சரி, கீழ உங்க வீட்டு ஹாலுக்கு போ, உனக்கு ஒரு சர்ப்ரைஸ்"னு சொல்ல

என்னவாக இருக்கு என்று குழம்பியவாரே, கீழே போக, "அந்த குழந்தையே நீங்க தான்ற மாறி" சர்ப்ரைஸ்-ாக அவளே அமர்ந்திருந்தாள்,, சோபாவில் அம்மாவுடன், என்னைக் கண்டவுடன் ஓடி வந்து கட்டிப் பிடித்து, டெல்லியில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நேஷனல் ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அவரவர் பிரிவில் தமிழ்நாடு டீமில் இடம் பிடித்திருந்தோம், பதினைந்து நாள் கழித்து சென்னைக்கு சிறப்பு பயிற்சிக்கு போகாணும்னு அவள் சொல்ல, நான் சந்தோஷத்தில் கத்திக் கொண்டே, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு துள்ளி குதித்தேன்

தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் ராங்கிங்கில் வரும் நான்கு டோர்ணமென்ட்களில் மூன்றில் அன்டர்-16 பிரிவில் வென்றிருந்தேன் (நான் இக்கதையில் சிறிது முன்னால் ஆடியது, அந்த வருடத்திரக்கான இரண்டாவது டோர்ணமென்ட்), ஒன்றில் கலந்து கொள்ளவில்லை, பானு, அன்டர்-18 பிரிவில் ஒன்றில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் இறுதியிலும், ஒன்றில் அரையிறுதியிலும் தோற்று போய் இருந்தாள், புள்ளிகளின் அடிப்படையில் தேர்வாகியிருந்தாள். அன்றிரவு டின்னர் எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் சென்றாள்.

சென்னை பிரேபிரேஷன் கேம்ப்க்கு சேர்ந்தே காரில் சென்றோம், சென்னையில் ஒட்டிப் பிறந்தவர்கள் போல், ஒன்றாகவே சுற்றினோம், தூங்கும் நேரம் தவிர்த்து. கேம்ப் முடிஞ்சு மூணு நாள் கழித்து சென்னையில் இருந்து டெல்லி, என் முதல் இரயில் பயணம், எனக்கு மிகவும் பிடித்த பானு அக்காவுடன். என்னையும் பானுவையும் தவிர டீமில் இருந்த அனைவரும் சென்னை பிளயர்ஸ், அவர்களில் சிலர் அவ்வப்பொது இவளிடம் வழிவதும், இவளும் அவர்களுக்கு ஈடு கொடுத்து பேசி என்னை கடுப்பேத்தினாள், அதிலும் அனிஷ்னு, இவள் வயதுடையன், இவளிடம் கடலை போட என்னையே காக்க பிடித்தான், என்னிடமே பானுவின் நம்பர் கேட்டான், குடுக்க மறுத்து விட்டேன்.

[Image: 8I3ifhd.jpg]
டிரைனிலும், டெல்லியிலும் ஏதாவது செய்தது எங்களுடனே ஒரு அட்டை போல ஒட்டிக் கொண்டிருந்தான், பானுவிடம் என்னைப் பேச விடாமல், இவனே எப்போ பார்த்தாலும் பேசிக் கொண்டிருந்தான், இவளும் அவன் என்ன சொன்னாலும் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தாள், கூடவே இருந்தாலும் அவளிடம் அன்னியப் பட்டது போல் ஒரு உணர்வு. அது தந்த வலி எனக்கு பரிச்சியமானதுதான் என்றாலும், அதற்க்கு காரணம் பானு என்பதால் அதன் அழுத்தம் கொடியதாய் இருந்தது, அவள் மீது முதல் முறையாக வெறுப்பு, இல்லை, இல்லை கோபம்

லீக் போட்டிகளும் ஆரம்பித்தது, இவர்கள் மேல் இருந்த கோபத்தை மொத்தமாக போட்டிகளில் காண்பித்தேன்.எப்பொழுதும் போல, நேர் செட் வெற்றி, லீக் போட்டிகளின் முடிவில் டோர்ணமென்ட் பிரபலம் ஆகியிருந்தேன். தமிழ்நாடு டீமில் இருந்து முதல் முறையாக அனைத்து கேட்டகிரியையும் சேர்த்து பதினொரு பேர் நாக்-அவுட் சுற்றுக்கு தேர்வாகி இருந்தோம், நானும் பானுவும் அதில் அடக்கம், மொத்த டீமும் சந்தோஷத்தில் இருக்க, நான் மட்டும் எல்லையில்லா சந்தோஷத்தில் இருந்தேன், காரணம் அனிஷ் சோகத்தில் புள்ளிகள் அடிப்படையில் எலிமினேட் ஆகி இருந்தான்

போட்டி முடிந்து ஹாஸ்டல்க்கு பஸ்சில செல்லும் பொது, என் அருகில் இருந்த பானு, அனிஷ்-ஆக வருத்தப் பாட்டு பேச, நான் இவள் மீது கடுப்பிலும், அவனை நினைத்து சந்தோஷமாகவும் இருந்தேன். எல்லா பொண்ணுங்களும் கேர்ள்ஸ் ஹாஸ்டலில் பஸ் நிக்க இறங்கினார்கள், இவளும் என்னிடம் சொல்லி விட்டு இரங்க சென்றவள், இடையில் அனிஷிடம் பேசி விட்டு, திரும்பி எனக்கு டாட்டா காட்டி விட்டு சென்றாள்

குளித்து விட்டு நான் அறையில் இருக்க, கீழே டீம் மீட்டிங் இருப்பதாக அழைப்பு வந்தது, சாம்பியன்ஷிப்பில் இருந்து எலிமினேட் ஆனவர்களை தேற்றும் விதமாக பாராட்டிப் பேசும் ஒரு சடங்கு அது. சடங்கின் முடிவில் மேலும் ஒரு சந்தோஷ செய்தி வந்தது எனக்கு, எலிமினேட் ஆன அனைவருக்கும் மறுநாள் காலை பதினொரு மணிக்கு டிரைன் என்று, இதை கேட்ட எனக்கு சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது

மீட்டிங் முடிய, பானுவிடம் இருந்து ஃபோன் வந்தது, டெல்லிக்கு டிரைன் ஏறினதுக் அப்புறம் முதல் முறையாக மனசு முழுக்க சந்தோஷத்துடன் பேசினேன் அவளிடம். அவளிடம் பேசிவிட்டு வைக்க, தாத்தாவிடம் இருந்து ஃபோன் வந்தது, நான் தாத்தாவிடம் எப்பொழுதும் போல அன்று நடந்த அனைத்தையும் கூறி முடிக்க கேட்டுக் கொண்டிருந்தவர், கடைசியில் ரெம்ப முக்கிமான மீட்டிங் இருப்பதால், தான் உறுதியாளித்த படி என் போட்டிகளுக்கு டெல்லி வர முடியாதென்றார். இறுதிப் போட்டிக்கு தேர்வானால் வருவதாக தாத்தா உறுதி அளித்திருந்தார், சிறுது வருத்தம் இருந்தாலும் அன்று இருந்த மனநிலையில் அது எனக்கு பெரிதாக தோன்றவில்லை. கொஞ்ச நேரம் உலாத்தி விட்டு ரூம்க்கு சென்றேன், சந்தோஷமாக
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 11-07-2020, 11:54 PM



Users browsing this thread: 27 Guest(s)