Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
நரேந்திர மோதி கூறியது போல உண்மையாகவே கங்கையில் மாசு குறைந்துள்ளதா? #BBCRealityCheck

[Image: _105667998_gettyimages-1064554424.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்திய பிரதமராக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி பதிவியேற்ற போது ஒரு வாக்குறதியை அளித்தார். அதாவது இந்தியாவில் மிகவும் மாசுப்பட்ட நதியான கங்கை சுத்தம் செய்யப்படும் என்பதுதான் அது.
பாஜக அரசாங்கம் கங்கை நதியை சுத்தம் செய்ய ஐந்தாண்டு செயல்திட்டத்தை வடிவமைத்து, அதனை செயல்படுத்துவதற்காக மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான பணத்தை ஒதுக்கியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பேசிய நரேந்திர மோதி கங்கையில் மாசு அளவை குறைப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் மோதி சிறப்பாக செயல்படவில்லை. எந்த விளைவுகளையும் அவர் ஏற்படுத்தவில்லை என்றனர்.
[Image: _105667538_gettyimages-452249190.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
உண்மைதான் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.
அதற்காக அதிகளவிலான பணம் செலவு செய்யப்பட்டிருந்தாலும், 2020ஆம் ஆண்டுக்குள் 1568 மைல் நீளமுள்ள கங்கை நதி முழுமையாக சுத்தம் செய்வது சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.
ஏன் கங்கை நதி அசுத்தமாக இருக்கிறது?
இந்துக்களின் புனித நதியாக கங்கை நதி கருதப்படுகிறது. இமயமலையில் உருவாகும் இந்த நதி வங்கக்கடலில் கலக்கிறது.
இந்த நதியின் இரு கரைகளிலும் நூற்றுக்கணக்கான நகரங்களும் ஆயிரகணக்கான கிராமங்களும் உள்ளன.
ஏறத்தாழ 450 மில்லியன் மக்கள் இந்த நதியில்தான் குப்பையைக் கொட்டுகிறார்கள்.
  • இந்த நதியில் தொழிற்சாலை ராசாயன கழிவுகளை கலக்கிறார்கள்.
  • வீட்டு கழிவுகள் இங்கே கொட்டப்படுகின்றன.
  • பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
தாமதமும், எட்டப்படாத இலக்கும்
முந்தைய இந்திய அரசுகளும் கங்கை நதியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால் வெற்றி கிட்டவில்லை.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 01-03-2019, 05:25 PM



Users browsing this thread: 1 Guest(s)