Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அபிநந்தனை விடுதலை செய்வதன் மூலம் போர்ப் பதற்றம் தணியும் என்றால் அவரை விடுதலை செய்யத் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அறிவித்தார். இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான்.
அமைதியின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் இம்ரான் கான் கூறியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆர்ப்பரித்தனர்.
மகனை வரவேற்க சென்னையில் இருந்து வரவேற்க புறப்பட்டார் தந்தை
சென்னையில் அபிநந்தன் வீடு இருக்கும் பகுதியில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த பகுதி மக்கள் இனிப்பு வழங்கி அபிநந்தன் விடுதலையாவதை கொண்டாடினர்.
விடுதலை செய்தி மகிழ்ச்சி தருவதாக மக்கள் தெரிவித்தனர்.இந்த சூழலில் அபிநந்தனை வரவேறக் அவரது தந்தை சிம்மக்குட்டி வர்தமான் நேற்று டெல்லிக்கு புறப்பட்டார்.
செய்தியாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார்.முன்னதாக பல அரசியல் கட்சி தலைவர்கள், காவல் படை அதிகாரிகள் அபிநந்தனின் தந்தயை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினர்.
[Image: _105838426_bbd28e57-8555-4ec9-b759-61357b2e17f4.jpg]படத்தின் காப்புரிமைDD
நேற்று மாலை பத்தரிகையாளர்களை இந்திய முப்படை தளபதிகள் சந்தித்தனர்
வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானி அபிநந்தனை அமைதி நிமித்தம் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதை அவர்கள் தவிர்த்தனர்.
அபிநந்தன் திரும்புவது பற்றி கேட்டபோது, இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர் "மகிழ்ச்சி" அடைவதாக கூறினார். ஆனால், அமைதிக்கான நல்லெண்ண நடவடிக்கையாக அவரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளதுபற்றி கேட்டபோது, அவர், "ஜெனிவா ஒப்பந்தத்தின்படியே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்".
பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை வழங்கியது. முதலில் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தினோம், மூன்று பேரை கைது செய்தோம் என்றது. பின் இரண்டு பேர் என்றது. இறுதியில் ஒரு விமானி மட்டுமே தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்தது என்றார் அவர்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 01-03-2019, 05:24 PM



Users browsing this thread: 2 Guest(s)