Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
னைவியும் முன்னாள் விமான படை வீரர்
அபிநந்தனின் மனைவி தான்வி மர்வாவும் இந்திய விமானப்படையில் பணியாற்றிவர்தான். 2005 ஆம் ஆண்டு விமானப்படையில் பணியில் சேர்ந்தார். ஸ்குவாட்ரன் லீடராக இருந்து விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது, பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
[Image: _105836218_b7980e8b-dd23-4f9f-a07e-35c83724ab99.jpg]
மணி ரத்னம் படத்திற்கு உதவிய அபிநந்தனனின் தந்தை
இந்திய விமானப்படையில் மிக மூத்த அதிகாரியாக இருந்தவர் சிம்மகுட்டி வர்தமான். 1974ல் இந்தியா விமானப்படையில் பணியில் சேர்ந்த அவர், 2012ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய பணிக் காலத்தில் மொத்தம் ஏழு பதவி உயர்வுகளைப் பெற்று ஏர் மார்ஷலாக ஓய்வு பெற்றார். 2017ல் வெளியான இயக்குநர் மணி ரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கு ஆலோசராக செயல்பட்டுள்ளார். அபிநந்தனின் தாய் ஷோபனா வர்தமான் சென்னையில் மருத்துவம் பயின்றவர். விங் கமாண்டர் அபிநந்தனின் தாத்தா இந்திய விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்ததகாவும் கூறப்படுகிறது.
[Image: _105835714_c4711bbb-8fbb-439b-9827-7b97136cb122.jpg]படத்தின் காப்புரிமைAFP
அபிநந்தன் பிடிபட்டது எப்படி? பாகிஸ்தானில் நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?
இலியாஸ் கான், பிபிசி
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அவரை வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் எவ்வாறு பாகிஸ்தானில் தரையிறங்கினார், எப்படி அவர் இந்தியர் என்று அவர்களுக்குத்தெரிய வந்தது, அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நம்மிடம் விவரிக்கிறார், பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரின் பிம்பர் மாவட்டத்தில் உள்ள ஹொரன் கிராமத்தை சேர்ந்த மொஹமத் ரசாக் சௌத்ரி. இவருக்கு வயது 58.
அவரது வார்த்தைகளில்…
"விமானி உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்றுதான் நான் தனிப்பட்ட முறையில் எண்ணினேன். அவரது பாராசூட்டில் இந்தியக் கொடி இருந்ததை வைத்து, அவர் இந்தியர் என்பது தெரிய வந்தது. அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து, அவர் பறந்து நிலத்தை அடைவதை நான் பார்த்தேன். அவரைப் பார்த்து அங்கு விரைந்த உள்ளூர் மக்கள், அவரைத் தாக்கி விடுவார்களோ என்று அஞ்சினேன்.
அவர் தரையிரங்கிய இடத்தில் ஏற்கனவே சில இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்களிடம் தான் இந்தியாவில் இருக்கிறேனா என்று அபிநன்தன் கேட்டுள்ளார். அவர்கள் பதில் கூறியவுடன், பாராசூட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவர், இந்திய தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக முழக்கம் எழுப்பினார். அதற்கு எதிராக லாங் லிவ் பாகிஸ்தான் என்று அந்த இளைஞர்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது அவர்களை பயமுறுத்த, தன் துப்பாக்கியை எடுத்து வானத்தை பார்த்து சுட்டார் அபிநந்தன். ஆனால், அந்த இளைஞர்கள் கோபமடைந்து கல்லைத் தூக்கி எறிய ஆரம்பித்தனர். அதனால், வானத்தை பார்த்து சுட்டுக் கொண்டே அவர் ஓடத் தொடங்கினார்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஓர் ஓடையில் குதித்தார். அப்போது எனது மைத்துனர்களில் ஒருவர், அவரது காலில் சுட்டார். அபிநந்தனை பார்த்து அவரது துப்பாக்கியை கீழே போடும்படி அவர் சொல்ல, அபிநந்தனும் அதை செய்தார்.
அப்போது ஓர் இளைஞர், அபிநந்தனை பிடித்தார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த சில காகிதங்களை எடுத்து அபிநந்தன் கிழித்ததோடு, சிலவற்றை அவரது வாய்க்குள் அடைத்துக் கொண்டார். ஆனால், அந்த இளைஞர்கள், சில காகிதங்களை அவரிடம் இருந்து பறித்து, பின்பு அதனை ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
எங்கள் இளைஞர்கள் கோபமாக இருந்தனர். அவரை அடித்தும், அறையவும் அவர் அருகில் சென்றனர். சிலர் அதனை தடுக்க முயன்றனர். நானும், அவரை தாக்க வேண்டாம் என்றும் ராணுவம் வரும்வரை அவரை தனியாக வைக்கவும் கூறினேன்" என்றார்.
[Image: _105832746_68d5fb97-44ae-42c4-b8e3-b185d2292bb8.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பேயுடன் கைகுலுக்கும் குரூப் கேப்டன் கம்பம்படி நசிகேதா. அருகில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
அபிநந்தனுக்கு முன்பே கார்கில் போரின்போது பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானி
முன்னதாக, அபிநந்தன் கைது செய்யப்பட்டது போன்ற சம்பவம் கார்கில் போரின் போதும் நடந்துள்ளதாகவும், அவர் விடுவிக்கப்பட்டதுபோல அபிநந்தனும் விடுவிக்கப்படுவார் என்று இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ. ஒய். டிப்னிஸ் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
பிபிசியிடம் பேசிய அவர், "கார்கில் போரின் போதும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அபோதும்கூட விமானி நசிகேதா, விமானத்திலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. எதிரியின் நடவடிக்கையால் அவர் வெளியேறவில்லை. அவரது விமான என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் அவர் வெளியேற நேர்ந்தது. பாகிஸ்தான்வசம் பிடிப்பட்ட அவர், சிறிது காலம் அங்கு வைக்கப்பட்டப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டார். எனவே அதே முன்மாதிரி அடிப்படையில் தற்போது பாகிஸ்தான் பிடித்துவைத்துள்ள இந்திய விமானியும், சம்பவம் உண்மையாக இருக்குமானால், விடுவிக்கப்படுவார் என்றே நம்புகிறேன்," என்றார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 01-03-2019, 05:23 PM



Users browsing this thread: 100 Guest(s)