Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
4:00 PM:இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்க இந்தியாவின் எல்லைப்பகுதியான அட்டாரியில் காத்திருக்கும் மக்கள்.
[Image: _105852775_13d9983b-1521-40db-839c-a83fe7a512aa.jpg][Image: _105852776_49d0d8bb-92d4-4bbf-b355-bb47807cdba0.jpg]
3.40 PM: இந்தியத் தரப்பில் வாகா-அட்டாரி எல்லையில் இருந்து அரை கி.மீ. முன்பாகவே நிறுத்தப்பட்டன ஊடகங்கள். தினமும் இந்த எல்லை வாயிலை மூடும் நிகழ்வையும் அணி வகுப்பையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். இன்று அணி வகுப்பு ரத்து செய்யப்பட்டாலும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிக்க உள்ள நிலையில் அங்கு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர்.
[Image: _105851935_24435800-3770-4501-952a-e0061a425f18.jpg]Image captionகொண்டாட்ட மன நிலையோடு அபிநந்தனை வரவேற்க காத்திருக்கும் ஓர் இந்தியர்.
3.25 PM:அட்டாரி - வாகா எல்லை வாயிலை மாலையில் மூடும்போது தினசரி இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும். இந்தியத் தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை நடத்தும் இந்த தினசரி நிகழ்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் துணை கமிஷனர் ஷிவ் கில்லார் சிங் இதனைத் தெரிவித்தார்.
[Image: _105851934_ae6e43f9-c8da-4572-951c-4170fe7f257e.jpg]
3.10 PM: அபிநந்தனை விடுவிக்கக் கூடாது என்று கோரி தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 01-03-2019, 05:19 PM



Users browsing this thread: 91 Guest(s)