Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அபிநந்தன் ஒப்படைப்பு: எல்லா கண்களும் அட்டாரி எல்லையை நோக்கி - முழு விவரம் | LIVE
[Image: _105852780_gettyimages-1128217568.jpg]படத்தின் காப்புரிமைNARINDER NANU
பாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
5:00 PM: இந்திய எல்லையான அட்டாரியில் விங் கமாண்டர் அபிநந்தன் நுழைந்தவுடன் அவரது உடல்நிலையை பரிசோதிப்பதற்காக மருத்துவ வாகனங்கள் இந்தியாவின் எல்லைப்பகுதியை வந்தடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
4:40 PM: பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் வாகனங்கள் வாகா எல்லையை வந்தடைந்துள்ளன. இருப்பினும், அதில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளாரா என்று தெரியவில்லை.
[Image: _105852777_0181f6a1-c5ee-412e-9acd-3aee032faab3.jpg]
4:20 PM: கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில நகரங்களிலுள்ள விமான நிலையங்களை தவிர்த்து மற்றனைத்து பாகிஸ்தானின் வான் மார்கங்களிலும் வரும் மார்ச் 4ஆம் தேதி வரை விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்து அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
[Image: _105851313_whatsappimage2019-03-01at10.57.07am.jpg]
4:15 PM: "இந்தியர்களை பெருமையடைய வைத்திருக்கும் துணிவுமிக்க இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனும், நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை எண்ணி பெருமையடைகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 01-03-2019, 05:19 PM



Users browsing this thread: 99 Guest(s)