04-07-2020, 08:46 AM
9
உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்??
"ஏன் திடீர்னு இப்படி ஒரு கேள்வி??"
"சொல்லுங்க"
"என் குழந்தைகள் ரெண்டு பேரும்"
"அப்போ உங்க பேரண்ட்ஸ்? ஒய்ப் லாம்??"
"அப்பா அம்மா ரெண்டு பேரும் இல்ல இப்போ, தெரியுமே உனக்கு??"
"ஏன் இல்லாதவங்க மேல அன்பு வைக்க கூடாதா??"
நான் பதில் சொல்லாமல் சிரிக்க அவளே கேட்டாள்.
"சரி அப்பா அம்மா இல்ல, ஒய்ஃப் தான் இருக்காங்க இல்ல?"
"அபி, உனக்கு என்ன வேணும்??"
"பதில்!"
"உண்மையான பதில் வேணுமா இல்ல பொய்யா ஒரு பதில் வேணுமா?"
"உண்மை தான்"
"எனக்கு என் குழந்தைகள் ரெண்டு பேரும் தான் ரொம்ப பிடிக்கும் இப்போதைக்கு, போதுமா"
"சரி, அவங்க ரெண்டு பேருல யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?"
"இந்த கேள்வி வேணாமே அபி"
"நான் ஏதும் நினைக்க மாட்டேன், சும்மா சொல்லுங்க"
"நான் உண்மையான பதில் சொன்னா நீ அதை ஆண் ஆதிக்கம் அப்படி நினைப்ப, பழைய மெண்டாலிடி கொண்ட ஆளுன்னு கூட நினைக்கலாம்"
"சோ உங்களுக்கு உங்க பையன் தான் ரொம்ப பிடிக்கும்?"
தலை அசைத்தேன், கிளாஸில் இருந்த மதுவை வாயில் அப்படியே சாய்த்துக் கொண்டு அவளைப் பார்த்தேன். இப்போது எல்லாம் அவள் முன் தயக்கம் இன்றி மது அருந்த தொடங்கி இருந்தேன். அபி ஆம்லெட், ஸ்நாக்ஸ் கொண்டு வைத்து, எதிரில் அமர்ந்து ஏதேனும் ஜுஸ் குடித்தபடி எனக்கு பேசி கம்பனி தரப் பழகி இருந்தாள்.
நான் மதுவில் இருக்கையில் அவள் என்னிடம் இன்னும் இயல்பாக பழகுவதை, சற்று அதிகப் படியான தோழமையுடன் இருப்பதை உணர ஆரம்பித்தேன். நான் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவள் திரும்ப கேட்டாள்.

"உம்"
"ஏன்?"
"காரணம் சொல்லனும்னா அவன் அப்படியே என்னைப் போலவே இருக்கான், என்னோட நீட்சி அவன், அவனோட பேச்சுல, அவனோட டேஸ்ட் ல, அவனோட ஒவ்வொரு ஆக்டிவிடில நான் என்னைத் தான் பார்க்கிறேன். ஓபனாக சொல்லனும்னா என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தனும் அவனைத் தான் ரொம்ப நேசிப்பான், நானும் தான், எனக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும், அ டுத்து என் மகன் அவனை, எனக்கு என் சின்ன வயசுல நிறைய கனவு இருந்தது."
"விதம் விதமாக கனவு, இந்த பிசினஸ் எல்லாம் இருவது வயசு ஆசை, அதுக்கு முன்னாடி முதல் முதல்ல சினிமா ஆசை, எழுத்தாளர் ஆக ஆசை, பத்திரிக்கை சொந்தமா நடத்த ஆசை, நிறைய இருக்கு என்னோட ஆசைகள், அதை நிறைவேத்திக்க வாய்ப்பு அப்போ கிடைக்கல, பொருளாதாரமும் தேவை இல்லையா, அது எல்லாம் சரி பண்ணக் குள்ள வயசு, குடும்பம், குழந்தை ஆச்சு. இன்னும் உள்ள அந்த ஆசைகள் இருக்கு"
அபி என்னை பார்த்தாள், நான் தொடர்ந்தேன்.
"நம்ப முடியுமா உன்னால, என் மகனுக்கும் அவனோட இந்த 10, 11 வயசுல என்னைப் போலவே கனவுகள், என் கனவுகளை நான் அவன் மேல தினிக்கலை, அவனுக்கே அதே மாதிரி கனவுகள், எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி ரசனை கூட"
"முன்ன எல்லாம் அவன் கிட்ட ஒரு சினிமா பார்க்குறப்போ அதுல இருக்க details, நுணுக்கம், கேமரா, music அது இதுன்னு நிறைய சொல்வேன் அவனுக்கு, இப்போ அது கூட சொல்ல மாட்டேன் அவனுக்கு, நல்ல நல்ல சினிமாக்கள் அவனுக்கு பார்க்க வாய்ப்பு தரது மட்டும் தான், என்னோட விருப்பங்களை, கமென்ட் களை அவனுக்கு சொல்லி அவனை ஒரு வட்டத்தில் வைக்க எனக்கு விருப்பம் இல்லை"
"ஐ லவ் மை சன், அதே சமயம் என் பொண்ணு மேலயும் எனக்கு அன்பு நிறையவே உண்டு, அவ என்னை மாதிரியா, இல்ல அவ அம்மா மாதிரி யா, சொல்ல முடியாது, ரெண்டுக்கும் நடுவே"
"எல்லாம் சரி, உனக்கு யாரைப் பிடிக்கும் ரொம்ப?"
"தெரியலை!"
"என்னது?"
"நிஜமாவே எனக்கு தெரியல, எனக்கு சின்ன வயசுல அப்பா அம்மா ரெண்டு பேரும் பிடிக்கும், ஒரு பத்து வயசுல அப்பா ரொம்ப பிடிக்கும், அப்புறம் தங்கச்சி அவளை ரொம்ப பிடிக்கும், 14, 15 வயசுல விஜயை ரொம்ப பிடிக்கும், என் ப்ரெண்ட் ஒருத்தி இலக்கியா அவளைப் பிடிக்கும், ஏன் உங்களை கூட ரொம்ப பிடிக்கும் அந்த வயசுல, அப்புறம்"
அவள் பேசுகையில் குறுக்கிட்டேன். "என்னது?"
"உம்?"
"என்னைப் பத்தி என்ன சொன்னே?"
"எனக்கு உங்களையும் பிடிக்கும் சொன்னேன்"
"ஏன்?"
"இதுக்கு என்ன காரணம் சொல்ல, நம்ம ஊரு ஆளுங்களிலே நீங்க தான் முதல் ஆளு படிச்சு, வெளியே மெட்ராஸ் லாம் போயி செட்டிலான, சக்ஸஸ் ஆன பிசினஸ் மேன், என் அப்பா, அம்மா கூட உங்களைப் பத்தி எப்ப பேசினாலும் பெருமையா தான் பேசுவாங்க, அப்புறம் நீங்க எப்போ ஊருக்கு வந்தாலும் எங்க வீட்டுக்கு தான் வருவீங்க, என் கிட்டயும் பாப்பா கிட்டயும் ஃபிரண்ட் மாதிரி தான் பேசுவீங்க அப்பவே, ஒரு வார்த்தை கூட தப்பா பேசாம, தேவையில்லாம பேசாம நான் பார்த்த முதல் பெர்பெக்ட் ஆம்பள நீங்க தான் நம்ம ஊருல"
"உம், உனக்கு யார் யாரை எப்போ எப்போ பிடிச்சது அப்படி கேக்கலை, உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் கேட்டேன்?"
"அதை சொல்ல தெரியாம தான் இத்தனையும் சொல்றேன்"
"சரி சொல்லு"
"ஒரு 18, 19 வயசு இருக்கும், அப்போ தான் அவன் நம்ம வீட்ல தறி ஓட்டிக் கிட்டு இருந்தான், கரஸ்ல டிகிரி பண்ணிக் கிட்டு இருந்தான், ரொம்ப இயல்பா இருப்பான், திடீர்னு தான் அதை ஃபீல் பண்ணினேன், அவன் என்னை எப்பயும் ஒரு லவ் ஃபீல் ஓட தான் பார்க்கிறான் அப்படி"
"உம்"
"அதை எப்படி சொல்றது தெரியல, லவ் பண்றது ஒரு பேசிக் ஆன விசயமா, முக்கியமா தோணிச்சு, உங்களுக்கு நான் சொல்ல வரது புரியுதா தெரியல, அப்போ எனக்கு தெரிஞ்ச என் ப்ரெண்ட் எல்லாரும் லவ் பண்ணிட்டு தான் இருந்தாங்க, நான் மட்டும் தான் சிங்கிலா இருந்தேன், அப்போ லவ் பண்ணியே ஆகணும் போல ஒரு ஃபீலிங், உங்களுக்கு புரிஞ்சுக்க முடியும்"
"சொல்லு"
"சோ நானும் அவனை லவ் பண்ணினேன், அல்லது லவ் பண்ணினதா நினைச்சேன், ஒரு ஒண்ணு ஒன்றரை வருசம் லவ் பண்ணினோம், அப்போ தான் என் ஃபிரண்ட் இலக்கியா அவ லவெரொட ஓடிப் போய் பிரச்சினை ஆச்சு"
"யாரு அந்த பொண்ணு?"
"நம்ம ஊரு இல்ல, பக்கத்துல, அவ ஓடிப் போன அன்னைக்கே அவளை பிடிச்சு அந்த பையனையும் அடிச்சு உதைச்சு பிரிச்சு விட்டாங்க, அந்த பையன் மேல வேற ஏதோ கேஸ் போட்டு, ரெண்டு நாளில் அவளுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு"
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் ஏதேதோ பேசினாள், நானும் அவளை இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டு இருந்தேன்.
"அம்மா அவளுக்கு எப்படியோ சந்தேகம் வந்துச்சு, என் கிட்ட ஜாடை மாடையா சொன்னா, கண்டவங்க கூட பழகாதே, மீறி பழகினாலும் அளவா இரு, பேரைக் கெடுத்துடாதே, வரன் பார்க்கவும் சொல்லி வச்சா,அவன் கிட்ட சொன்னேன், அவன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம் சொன்னான், எனக்கு பயமா இருந்தது, கூட கொஞ்சம் ஆர்வமா இருந்தது, வேற வழி இல்லாமல் நானும் சரி சொன்னேன்."
"உம்"
"எனக்கு அவனைப் பிடிச்சு இருந்தது, ஆனா மத்த எல்லாரையும் விட்டு, ஊரை விட்டு ஓடிப் போய் கல்யாணம் பன்ற அளவு பிடிச்சு இருந்ததா? உண்மையா அப்போ தெரியல, ஏன் இப்போ கூட தெரியல" அவள் குரல் கொஞ்சம் கம்மி இருந்தது.
நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன், அவள் தலையில் ஆறுதலாக தட்டிக் கொடுத்தேன். அவள் எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தாள். சிறிது நேரம் கழித்து அவளிடம் கேட்டேன்.
"நீ இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லை"
அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
"உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?"
"அதை சொல்ல தெரியல எனக்கு, எனக்கே தெரியல போல" பலகீனமாக சிரித்தாள்.
"அது எப்படி?"
"நிஜமா எனக்கு தெரியல, நீங்க தப்பா நினைக்கலை அப்படின்னா ஒண்ணு சொல்வேன்"
"உம்"
"இப்போ எனக்கு உங்களைத் தான் ரொம்ப பிடிச்சு இருக்கு, உங்க கூட இருக்கப் பிடிச்சு இருக்கு, பேச பிடிச்சு இருக்கு"
நான் எந்த மாதிரி ரியாக்ட் செய்வது என தெரியாமல் விழித்தேன்.
"நிஜமா நான் தப்பா எதுவும் மீன் பண்ணி சொல்லல, என் வாழ்க்கைல நான் சந்திச்ச நேசிச்ச ஆளுங்கள்ள நீங்க மட்டும் தான் என்னை அதிகாரம் செய்யாம, கண்ட்ரோல் பண்ணாம, அதே சமயம் எனக்கு என்ன தேவையோ, என்ன நல்லதோ அதை செஞ்சு இருக்கீங்க, என் வயசு பொண்ணுங்க ப்ரெண்ட் தவிர என் கிட்ட சமமா மரியாதையா பேசுற ஒரே ஆளு நீங்க தான்"
"நான் நிஜமாவே இப்போ இங்க ரொம்ப சந்தோசமா இருக்கேன், எனக்கே நான் நாலு மாசம் முன்ன தற்கொலை பண்ண try பண்ணினதே சிரிப்பா இருக்கு"