28-02-2019, 08:23 PM
"ஸ்வதா சீக்கிரம் இன்னைக்கு வீட்டுக்கு வந்திடு உன்னை இன்னைக்கு பெண்ணு பார்க்க வராங்க," என்ற என் அம்மா எனக்கு போன் செய்தார்கள்.
"அம்மா நினைவிருக்கலா, நீயும் அப்பாவும் வற்புறுத்தியதால் தான் நான் ஒப்பு கொண்டேன்...," என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போதே அம்மா குறுக்கிட்டார்.
"தெரியும் டி, அனால் பையன் நல்ல வேளையில் இருக்கான், கை நிறைய சம்பாதிக்கிறான், குடும்பமும் நல்ல குடும்பம் நிச்சயமா உனக்கு பையனை பிடிக்கும்."
"அம்மா, நான் சொல்ல வந்ததா சொல்ல விடு, எனக்கு பையன பிடிக்கில அப்போவே அவர்கள் கிட்ட சொல்லிவிடுவேன்."
"அடியே அப்படி எதுவொம் சொல்லிவிடாதே, ரொம்ப சங்கடமா போய்விடும், உனக்கு விருப்பம் இல்லை என்றல் வேற ஜாதகமோ என்னவோ பிறகு சொல்லி சமாளிக்கலாம்."
"என்ன உளருற, ஜாதகம் பார்த்து தானே வர சொன்னிங்க."
"சரி சரி வேற சாக்கு சொல்லலாம், அனால் நான் பையன் போட்டோ பார்த்தேன். நிச்சயமா உனக்கு பையனை பிடிக்கும்."
"நீ மட்டும் அதையெல்லாம் பாரு என்னமோ உனக்கு மாப்பிளை பார்க்கிற மாதிரி, என் கிட்ட காமிக்காத."
"அடி வாங்க போற, பேசுற பேச பாரு. புரோக்கர் இடம் ஒரே போட்டோ தான் இருந்தது அத எடுத்திட்டு போய்ட்டாரு. நீ தான் நேரில் பார்க்க போறியே."
"போட்டோ கொடுப்பதில் கூட கஞ்சனை தான் எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிய?"
"நீ ஓவெற பேசாதே ஒழுங்கா சீக்கிரம் இன்னைக்கு வா."
இதை கேட்டு கொண்டிருந்த என் தோழி கவிதா கேட்டல்," இன்னைக்கு உன்னை பெண் பார்க்க வராங்கல?"
"என்ன செய்யுறது, பொம்மை போல் முன்னே சென்று நிக்கணும். எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்காது."
"அப்போ நீ எவனையாவது லவ் பண்ணி இருக்கணும், உன் பின்னால சுத்தாத ஆண்கள?"
"அனால் எவனையும் எனக்கு பிடிக்கில?"
"இந்த பையன் உனக்கு பிடித்து நீ ஓகே சொல்லிட்டா, இங்கே நெறைய ஆண்கள் ஹார்ட் பிரேக் பண்ண போகுது."
நான் அவளை பார்த்து சிரித்தேன். என் அழகை பற்றி எனக்கு தெரியும்.
"எனிவே ஆல் தி பெஸ்ட்," என்றல்.
"எனக்கு அவனை பிடிக்கினம் என்று அவனுக்கு தான் நீ ஆல் தி பெஸ்ட் சொல்லணும்," பதிலுக்கு நான் சொன்னேன்.
"ஆனாலும் உனக்கு திமிரு அதிகம் தான் டி," புன்னகைத்த படியே சொன்னால் ஆனால் அவள் வார்த்தைகளில் வன்மம் இல்லை.
அன்றைக்கு பெண் பார்ப்பதற்கு அவர் பெற்றோர், அண்ணன் அன்னான் மனைவி மற்றும் அவர்கள் பிள்ளை அவருடன் வந்து இருந்தார்கள்.
என்னை அலங்காரம் பண்ணி எல்லோருக்கும் டி கொடுக்க சொன்னார்கள். நான் அவரிடம் டி கொடுக்கும் பாத்து என்னை ஒரு சிறிய புன்முறுவலோடு பார்த்தார். ஆள் பார்க்க ஸ்மார்ட்ட தான் இருந்தார். எனக்கு அவரை பிடித்தது. அவர் குடும்பத்தில் எல்லோருக்கும் என்னை பிடித்துவிட்டது.
"எங்களுக்கு பெண்னை ரொம்ப பிடிச்சிருச்சி. ரொம்ப லட்சணமாக இருக்க, பார்க்கவும் அமைதியான பெண் போல் இருக்கு," என்றார் அவர் அம்மா, என் வருங்கால மாமியார்.
இதை கேட்டு என் அம்மாவும் அப்பாவும் சிரித்து விட பொறுங்கள் என்று பாய்ந்தேன். நானா அமைதியான பெண்.
"நீ என்ன சொல்லுற," என்று அவரை பார்த்து கேட்டார்கள்.
அவர் தன் அம்மாவிடம் எதோ கிசுகிசுத்தார். அவர்கள் பதிலுக்கு என்னமோ சொன்னாங்க. இவர் மறுபடியும் எதோ சொன்னார்.
அவர் அம்மா முகத்தில் சங்கடம் தெரிந்தது. "இவன் இன்னும் இரண்டு மூன்று நாள் டைம் கேட்கிறான்," அவர்களின் குரலில் அவர்கள் சங்கடம் தெரிந்தது.
எனக்கு கோபம் சட்டென்று வந்தது. அம்மா என் கையை இறுக்கி என்னை அமைதியாக இருக்கும் படி செய்கையில் சொன்னார்கள்.
"இவன் என்ன பெரிய இவானா, எனக்கு மேல நல்ல பொண்ணு கிடைத்திடுமோ?"
நான் தரையை பார்த்தாலும் மனதில் கோபம் கொந்தளித்து எரிந்தது. அதற்கு பிறகு யாராலும் சகஜமாக பேச முடியவில்லை.
"சரிங்க, கூடிய சீக்கிரம் தகவல் சொல்லி அனுப்புறோம் ," என்று அவர் அப்பா கூறி எல்லோரும் புறப்பட்டார்கள்.
சந்தோசமாக வந்தவர்கள் கொஞ்சம் வருத்தத்தோடு புறப்பட்டார்கள்.
அவர்கள் போன பிறகு நான் என் பெற்றோரிடம் கத்தினேன்,"இதற்கு தான் நான் இதற்கு சம்மதிக்கல."
"கோப படாத டி பொண்ணுணா பொறுத்து இருந்து தான் ஆகணும். பார்ப்போம் என்ன சொல்லுறாங்க," இது என் அம்மா.
"நிச்சையமா அவங்களுக்கு உன்னை பிடிக்கும் மா," இது என் அப்பா.
"இனி அவங்க வேணும் என்றாலும் நான் ஒத்துக்க மாட்டேன்," இது நான்.
அடுத்த நாள் ஒரு மூன்று மணி போல எனக்கு ஒரு போன் காள் வந்தது. அது நான் அறியாத நம்பர் என்பதால் நான் எடுக்கவில்லை. மறுபடியும் அந்த நம்பரில் இருந்து காள் வந்தது. சரி யார் என்று பாப்போம் நினைத்து எடுத்தேன்.
"ஹலோ ஸ்வதாவா?"
"யெஸ் ஸ்பிகிங்," என்றேன்.
"நான் மகேஷ் பேசுறேன், இப்போ தான் உங்க நம்பர் கிடைச்சது உடனே கூப்புடுறேன்," என்றார்.
மகேஷ் என்று தெரிந்தவுடன் உடனே கோபம் வந்தது.
"ஏன் என்னை கூப்புடுறீங்க, அம்மாவோ அல்லது அப்பாவிடம் பேசவேண்டியது தானே?" என்றேன் சிடு சிடுவென்று.
"உங்க கிட்ட தான் பேசணும்," என்றார்.
"என் கிட்ட என்ன இருக்கு பேச?" என்றேன்.
"நீங்க கோபமாக இருக்கீங்க என்று புரியுது, பட் ப்ளீஸ் ப்ளீஸ் ஜஸ்ட் 15 மினிட்ஸ் உங்க கிட்ட தனியாக பேசணும்."
சரி ஆம்பலைங்க உங்கள பத்தி என்ன தான் நினைத்து கிட்டு இருக்கீங்க என்று நறுக்கென்று நாலு வார்த்தை கேட்கலாம் என்று நினைத்து ஒத்துக்கொண்டேன்.
"அப்போ ஆறு மணிக்கு உங்கள் ஆஃபீஸ் வருகிறேன்," மகேஷ் கூறினார்.
நான் அம்மாவிடம் கூப்பிட்டு இந்த விஷயத்தை சொன்னேன்.
"திட்டிராத டி அவரை, பொறுமையா என்ன சொல்லுறார் என்று கேளு." "முடிந்த அளவு சீக்கிரமா என் கிட்ட நடந்ததா சொல்லு."
சரியாக 5.58 அவர் கார் என் ஆஃபீஸ் முன் பார்க் செய்தார். ஆளு ரொம்ப பங்ச்சுவால் தான். அவர் நான் எங்கே இருக்கிறேன் என்று அங்கும் இங்கும் பார்வையில் தேடினர். என் ஆஃபீஸ் வேலை செய்கிற இரண்டு பெண்கள் அவரை திரும்பி திரும்பி பார்த்து சைட் அடிச்சிக்கிட்டு போனார்கள்.
நான் அவரிடம் சென்று," ஹலோ நான் இங்கே இருக்கேன்." " சரி சொல்லுங்க என்ன விஷயம்."
அவர் என்னை பார்த்து ஒரு புன்னகைத்தார்," வாங்க ஒரு ஜூஸ் அல்லது காபி குடித்து கொண்டே பேசலாமே."
"அதுவெல்லாம் வேண்டாம், இப்படியா சொல்லுங்க."
"இல்லைங்க பர்சனல் மேட்டர் அந்த ஹோட்டல் போய் பேசுவோம்."
அருகாமையில் ஒரு 3 ஸ்டார் ஹோட்டல் இருந்தது. சரி என்று நான் சொன்னேன். அந்த ஹோட்டல் ரெஸ்ட்டோர்ரெண்ட் கூட்டம் இல்லது ஒரு இடத்தில் உட்கார்ந்தோம். வேட்டர் உடனே எங்களிடம் வந்தான்.
"என்ன சாப்புடுறீங்க?" என்று மகேஷ் என்னை கேட்டார்.
"எனக்கு ஒன்னும் வேண்டாம் நீங்க சாப்புடுங்க."
"ப்ளீஸ் ஹவ் சம்திங்." என்றார் மகேஷ்.
"ஓகே எனிதிங், அப் டூ யு." என்றேன்.
இரண்டு மாம்பழம் ஜூஸ் ஆர்டர் பண்ணினார்.
நான் அவர்ரை பார்த்தபடி இருந்தேன்.
"உங்களுக்கு நேற்று நான் ஓகே சொல்லுல என்று கோபமா?"
"நான் ஏன் கோப பாடணும் அது உங்கள் இஷ்டம்," என் குரல் கடுமையாக இருந்தது.
"உங்களை எனக்கு பிடிச்சது முக்கியம் இல்லை உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண சம்மதமா என்பது தான் முக்கியம்."
நான் அவர் முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
அவர் தொடர்ந்தார்," நான் உங்கள் போட்டோ பார்த்த உடனே ரொம்ப புடித்துவிட்டது அதற்க்கு அப்புறம் தான் பொண்ணு பார்க்க சம்மதித்தேன்."
இப்போ என் கோபம் கொஞ்சம் தணிந்தது.
"அப்போ ஏன் நேற்றே இதை சொல்லல?"
"இல்லை, நான் முதலில் உங்கள் விருப்பம் தெரிய வேண்டும் என்று நினைத்தேன். பெண் பார்க்கும் முன்னே எப்படியோ உங்களை பார்த்து கேட்கணும் என்று நினைத்தேன் அனால் உங்கள் போன் அல்லது ஆஃபீஸ் டீடெயில்ஸ் எதுவும் எனக்கு கிடைக்கில."
"ஏன் பெண் பார்பதுக்கு நான் சம்மதித்ததில் இது உங்களுக்கு தெரியாத."
"இல்லைங்க சில நேரத்தில் பெற்றோர்கள் வற்புறுத்தல் தவிர்க்க முடியாமல் பெண்கள் இதுக்கு ஒப்புக்கொள்வார்கள் அதன்.."
"அப்போ தனியாக என்னிடம் பேசுனம் என்று சொல்லி என் ஒப்பீனியன் நேற்றே கேட்டு இருக்குலமே?"
"அப்படி நான் செய்து இருந்தால் எனக்கு விருப்பம் இருக்கு என்று தான் அது காட்டும். பின்பு வேண்டாம் என்றல் உங்கள் மேல் தன சந்தேகம் வரும்."
"அப்போ உங்களுக்கு என்னை பிடித்துருக்கு."
"உங்களை பிடிக்கிலே என்று எவனும் சொல்லுவானா. நான் முட்டாள் தான் அனால் அவளோ பெரிய மடையன் கிடையாது."
அவர் சொல்லுவதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது, மனதில் சந்தோஷமும் வந்தது.
"ஒரு பெண்ணை பார்த்து அப்புராம் வேண்டாம் என்று சொன்னால் அந்த பெண் மனது எப்படி வேதனை படும் என்று தெரியும் அதனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை," என்று மேலும் சொன்னார்
அவர் பெண் உணர்வுகளுக்கு எவளோ மதிப்பு கொடுக்கிறார் நினைத்த போது அவர் மேல் மரியாதை வந்தது.
"உங்கள் போட்டோ பார்த்து எனக்கு ஓகே என்றதும் தான் பெண் பார்க்க வந்தேன்."
"சொல்லுங்க உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண சம்மதம் தானே?" "வேற யாரையும் நீங்க லவ் பண்ணவில்லையே?"
"நீங்க என்னை டெஸ்ட் பண்ணுறீங்களா, எனக்கு ஏற்கனவே பாய்பிரென்ட் இருக்க என்று?"
"அப்படி இல்லை, நீங்கள் சின்சியர்ரா ஒருத்தர் லவ் பண்ணி பிரேக் அப் ஆகியிருந்தால் தப்பு என்று நான் சொல்லுல. உங்க அழகுக்கு எத்தனை பேர் பின்னாலே அலைந்து இருப்பார்கள். நான் உங்களை அன்றைக்கு நேரில் பார்த்த போது அசந்துவிட்டேன், அப்போ மற்ற ஆண்கள் நிலை எனக்கு புரியும்."
"நீங்கள் யாரையாவது லவ் பண்ணி பிரேக் அப் ஆகிரிக்க?" பதிலுக்கு நான் கேட்டேன்.
"சில பெண்கள் மேல் கிரஷ் இருந்து இருக்கு லவ் இல்லை."
"நீங்கள் பதில் சொல்லுலேயே? சம்மதமா?" ஆவலும் பதற்றமும் அவர் குரலில் தெரிந்தது.
நான் அவர் முகத்தையே பார்த்தேன், ரொம்ப பதட்டத்தோடு இருப்பது போல் தோன்றியது. நேற்று அவர் செய்ததுக்கு இன்று பதிலுக்கு நானும் யோசிப்பது போல் அவர் முகத்தை பார்த்து கொண்டே இருந்தேன்.
"அப்படி பார்க்காதீங்க நீங்க வேண்டாம் என்று சொல்ல போறிங்களா பயமா இருக்கு. இவளோ வேகத்தில் என் இதயம் துடித்தது கிடையாது?"
"உங்களுக்கு தெரியுமா, இன்றைக்கு காலையில் எத்தனை கோயில் ஏறி இறங்கினேன் நீங்கள் ஓகே சொல்லணும் என்று."
நான் ஹா ஹா என்று வாய்விட்டு சிரித்து விட்டேன்.
"உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கு நான் பொறுப்பாக இருக்க போவதில்லை. எனக்கும் சம்மதம்."
அவர் முகத்தில் அந்த சந்தோசத்தை பார்த்த போது என் இதயத்திலும் ஆனந்தம் நிரம்பி இருந்தது.