28-02-2019, 05:47 PM
![[Image: _105760156_25ff3c92-34d9-4836-84ae-c93d848ccbc7.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/FE52/production/_105760156_25ff3c92-34d9-4836-84ae-c93d848ccbc7.jpg)
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் அதனைக் கேலிசெய்வதற்கும் விமர்சிப்பதற்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. இந்தப் படமும் அப்படித்தான் துவங்குகிறது.
முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது, அமைச்சர்கள் மருத்துவமனையிலேயே தங்குவது, பேட்டி கொடுப்பது என நகர்ந்தாலும், அவற்றில் கேலியோ, விமர்சனமோ இன்றி, நடந்த சம்பவங்களையே திரும்பவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இந்தக் காட்சிகள் சிறிய புன்னகையை வரவழைக்கின்றனவே தவிர, பெரிய சுவாரஸ்யம் எதையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு காட்சியில் கதாநாயகனும் வில்லனும் பேசிக்கொள்கிறார்கள்.
"கதாநாயகன்: 1967ல் காமராஜரையே தோற்கடிச்ச ஊரு சார் இது..
வில்லன்: காமராஜரைத் தோற்கடிச்ச எம்.எல்.ஏ பேரைச் சொல்லு.. தெரியலை?. ஆனா, காமராஜர் பேர் இன்னைக்கும் இருக்கு."
![[Image: _105760157_a3568d2f-f674-4756-b4fb-7ccd57604d45.jpg]](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/12562/production/_105760157_a3568d2f-f674-4756-b4fb-7ccd57604d45.jpg)
இந்தக் காட்சியில் இருக்கும் அரசியல் புரிதலும் தொனியும்தான் படத்தின் அடிப்படையான தொனி. 'காமராஜர் நல்லவர்; அவரைத் தோற்கடித்துவிட்டார்கள்', 'மக்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுகிறார்கள்; அதுவே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்', 'சமூகவலைதளங்களின் மூலம் மக்களின் மனதை மாற்றிவிடலாம்', 'பகுத்தறிவு பேசுபவர்கள் வெளியில் பெரியார் படத்தை வைத்துக்கொண்டிருப்பார்கள், ஆனால், வீட்டிற்குள் கடவுளை வணங்குவார்கள்'