எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
அன்று தீபாவளி ….

நான் எழுந்து குளித்துவிட்டு துண்டுடன் பால்கனியில் நின்னேன் 

என்னால குடும்பத்தை வெறுக்க முடியுமா ? மற்றவர்கள் என்னைய வெறுப்பதால் நானும் வெறுக்கனுமா?

ஒரு வேளை அம்மா சொல்வது போல் ஏதாவது காரணம் இருக்குமே?  .இல்ல என்னைய சாமாதனம் பண்ண அம்மா அப்பிடி சொன்னாங்க ?

எனக்கு குழப்பமா இருந்தது. 

அறைக்குள் வித்யாவும் பூஜாவும் புடவையில் நுழைந்தாங்க

அண்ண சீக்கிரமா கிளம்புங்கானு. என்னைய புது ஆடைகளை போட்டு விட்டு ஹாலுக்கு கூடிட்டு போனாங்க

அப்பா இன்னிக்கு முழுவதும் அண்ண எங்க கூட தான் இருக்கும். சாயங்காலம் நானே வந்து அண்ணணை வீட்டுல விட்டுட்டு போறேன் சொல்லிட்டு என்னைய கூப்பிட்டு கிளம்பினாள் பூஜா 

நேராக கோயிலுக்கு கூடிட்டு போனாள் பூஜா.  சாமி கும்பிட்டப்பின் வித்யா எடுத்துட்டு வந்த சர்க்கரை பொங்கலை என்னிடம் கொடுத்தாள் 

நாங்க மூவரும் பொங்கலை சாப்பிட்டோம். கொஞ்ச நேர அப்பிடியே உட்காந்து பேசிட்டு இருந்தோம் 

பின் நேராக வித்யா அருகில் உள்ள தியோட்டருக்கு கூப்பிட்டு போனாள் 

அங்கே மத்தவங்களும் எங்களுக்காக காத்திருந்தாங்க 

எல்லோரும் சேர்ந்து படம் பார்த்தோம்.

பின் நேராக எல்லோரும் விசித்ரா வீட்டுக்கு போனேம். 

எல்லாருக்கும் விருந்து தயார் செய்தாள் விசித்ரா.

அனைவரும் சாப்பிட்டு முடித்தோம். 

எனக்கு தூக்கம் வர. நான் அப்பிடியே சோபாவில் சாய்ந்து தூங்கினேன்.

மாலையில் பூஜா என்னைய எழுப்பினாள்.

நான் வீட்டுக்கு கிளம்ப. பூஜா என்னுடன் வந்தாள் 

என் அப்பாவிடம் சொல்லிட்டு எல்லோரின் முன்னிலையில் என் கன்னத்துல முத்தமிட்டு கிளம்பினாள் பூஜா.

அதன் பின் வந்த நாட்களில் யாருமே என்னைய தொந்தரவு செய்யததால் அமைதியாக போனது 

அன்று எனக்கு சம்பள நாள். சம்பளம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தேன்

ஹாலில் எல்லோரும் இருந்தாங்க 

ஆனால் அம்மா பதற்றத்துடன் நின்னாங்க. அண்ணனின் முகத்தில் உச்சப்பட்ச பயம் தெரிந்தது 

அக்காவும் தங்கையும் அம்மாவை குழப்பத்துடன் பார்த்துட்டு இருந்தாங்க 

அப்பாவின் முகம் உச்சப்பட்ச கோபத்தில் இருந்தது 

நான் அமைதியா மாடிக்கு போகும் போது 

டோய் கொஞ்சம் நில்லுடா ---அப்பாவின் குரல் என்னைய தடுத்தது …
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 5 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by badboyz2017 - 03-07-2020, 09:27 AM



Users browsing this thread: 5 Guest(s)