Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு 
[Image: _105836683_gettyimages-885947112.jpg]படத்தின் காப்புரிமைARUN SANKAR
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து டி.டி.வி.தினகரன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
[Image: _105836687_gettyimages-635632302.jpg]படத்தின் காப்புரிமைARUN SANKAR/AFP/GETTY IMAGES
டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜிஎஸ் சிஸ்தானி மற்றும் சங்கீதா திந்த்ரா செகல் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
"உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது": முதலமைச்சர்
இந்தத் தீர்ப்பு குறித்து தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உண்மையான அண்ணா தி.மு.க. நாங்கள்தான் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பலர் இந்த இயக்கத்தை அழிக்கலாம் என்று நினைத்தார்கள். சிலர் அண்மையில் கட்சிக்கு வந்து இந்த இயக்கத்தைப் பிரித்துவிடலாமென்று கங்கணம் கட்டிக்கொண்டு, இடையூறு செய்தனர். அதற்கெல்லாம் நீதிமன்றத்தில் தீர்வு கிடைத்திருக்கிறது. இரட்டை இலை கிடைத்திருக்கிறது. இனி அ.தி.மு.க. வீறு நடை போடும்
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 28-02-2019, 05:43 PM



Users browsing this thread: 96 Guest(s)