நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#14
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு

[Image: nivv.jpg]

றையை விட்டு வெளியில் வந்த மகேந்திரன் எதிர் அறையில் ஏதாவது அரவம் தெரிகிறதா என்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தக் கதவு திறந்தது.

அவள் என்ன மாதிரி மயக்கும் கோலத்தில் வந்து நிற்கப் போகிறாளோ என்ற பயத்துடன் நின்றவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.


கிருஷ்ணவேணி ஒரு எளிய கைத்தறி சுரிதார் அணிந்து கதவைத் திறந்தவாறு வெளியில் வந்தாள்.


வந்தவள் சும்மா இருந்திருக்கக் கூடாதா?



அவனைப் பார்த்து ஒரு புன்னகையை வேறு சிந்தினாள்.



சாதாரணப் புன்னகையா அது?



தடுமாறிப்போனான். அவள் இன்னமும் அவனது முகத்தையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.



அவளுக்கு பதிலுக்குப் புன்னகைக்க வேறு வேண்டுமா?



பதிலுக்கு அவனிடம் எந்த சலனமும் இல்லை. வெறித்துப்பார்த்தவன் அவள் அருகில் சென்றான்.



“இந்தப் பாரு. இந்த வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்க வேணாம். உன் மயக்குற வேலை எல்லாம் என் தம்பியோட நிறுத்திக்கோ. அவனுக்கும் இன்னும் கொஞ்சம் நாளில் உண்மையை புரிய வச்சிடுவேன். அவனுக்கும் மயக்கம் தெளிஞ்சுடும். அதற்குப் பிறகு உனக்கு இந்த வீட்டில் இடமில்லை.”



முகத்தைக் கடுகடுவென வைத்துக்கொண்டு சொன்னவன் அவசர அவசரமாக கீழே இறங்கிப்போய்விட்டான்.



கீழே வந்த பிறகு ஒரு சின்னப் பெண் தனது வீட்டில் வந்திருந்துகொண்டு தன்னையே தப்பித்து ஓட வைப்பது போல் நடக்குமாறு செய்துவிட்டாளே?



அதற்கும் அவள் மீதே குற்றம் சாட்டினான்.



அவளுக்கு என்னவோ போல் இருந்தது.



ஒரு மரியாதைக்காகதான் அவள் அவனைக் கண்டதும் சிரித்ததே.



அதற்காக எப்படி பேசிவிட்டான். அவன் மேல் எத்தனை மரியாதை வைத்திருந்தாள்.



அவனது வீட்டில் தங்கியிருக்கிறோம். அத்துடன் அவன் வீட்டைச் சார்ந்தவர்கள் எல்லாம் அவளை வேற்றாளாகப் பார்க்காததால் அவனையும் அவளால் அந்நியனாக நினைக்க முடியவில்லை.



அதுவும் யுகேந்திரனுக்கு அவனது அண்ணன் என்றால் உயிர். அவனுக்கும் அப்படித்தான் என்று யுகேந்திரன் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பான்.



அத்துடன் அவன் பேச்செடுத்தாலே தனது குடும்பம், அண்ணன் என்றுதான் இருக்கும். அவர்களை எல்லாம் பார்ப்பதற்கு முன்பே அவர்கள் மீது ஒருவித பாசம் அவளுக்கு உண்டாகியிருந்தது.



மகேந்திரன் சிறிய வயதிலேயே தொழிலில் பெரிய அளவில் சாதித்திருப்பது வேறு அவன் மேல் ஒருவித மரியாதையை உண்டு பண்ணியிருந்தது.



அவன் தன்னை அலட்சியப்படுத்தி பேசிவிட்டு சென்றது அவளுக்கு என்னவோ போலிருந்தது.



தான் அந்த வீட்டிற்கு வந்திருக்கக்கூடாதோ என்ற கவலை உண்டானது.



அவன் மீது ஏற்படும் ஒரு கசப்பு, பாசமாக இருக்கும் மற்றவர்களிடம் காட்டிவிட்டால் என்னாகும்?



வழக்கம்போல் கல்லூரி விடுதியிலேயே இருந்திருக்கலாமோ?



விரக்தியாய் நினைத்தாள்.



நினைவு தெரிந்த நாட்களிலேயே அவளுக்கு விடுதி வாசம் ஆரம்பமாகிவிட்டது. அதுதான் அவளுக்கு நிம்மதியையும் தந்தது.



மற்ற குழந்தைகள் தங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடும்போது அவளுக்கு மிகவும் ஏக்கமாக இருக்கும்.
பிறகு ஏக்கப்படுவதால் தேவையில்லாத வருத்தம்தான் ஏற்படுகிறது என்று புரிந்த பிறகு வருத்தப்படுவதை விட்டுவிட்டு அந்த நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 28-02-2019, 01:10 PM



Users browsing this thread: 4 Guest(s)