01-07-2020, 10:12 PM
8
அபி அடுத்த சில வாரங்களில் அலுவலகத்தில் மிக முக்கியமான நபராக ஆனாள், எல்லோருடனும் நல்ல நட்பு, என்ன தான் நான் அவர்களோடு இயல்பாக பழகினாலும் நான் முதலாளி என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் இருந்ததை மாற்ற முடிய வில்லை, சில விசயங்களை என்னோடு கேட்க தயக்கம் இருக்கலாம், அபி அவர்களில் ஒருவர் போல என்பதால் தகவல் பரிமாற்றம் கொஞ்சம் இலகுவாக உணர்ந்தார்கள் போல.
அபி வந்த பின்னர் தான் அவளின் விருப்பப் படி அலுவலகம் முழுதும் சேர்ந்து ஒரு outing திட்டமிட்டோம். அபி வந்த பின்னர் வேலைப் பளு முழுக்க குறைந்தது உணர்ந்தேன்.
வீட்டிலும் எனது மாடி அறையை தவிர மீதம் எல்லாவற்றையும் அவள் விருப்பப் படி மாற்றி அமைத்து அழகு படுத்தினாள்.
"ஒரே அடியா எல்லாம் மாத்தாதே, எனக்கு என்னவோ வர வர இது உன் வீடு, நான் இந்த வீட்டுக்கு மாசா மாசம் வந்து போற கெஸ்ட் மாதிரி தோணுது" என்றேன் சிரித்தபடி இரண்டு மூன்று மாதங்கள் பிறகு.
அவளும் சிரித்தாள், எதுவும் உடனே சொல்ல வில்லை, சிறிது நேரம் கழித்து கேட்டாள்.
"நான் கொஞ்சம் அதிகப் படியான உரிமை எடுத்துகரேன்னு தோனுதா உங்களுக்கு??"
"ஏன் கேக்குற?"
"இல்ல, சும்மா தான் கேட்டேன்"
"ஹேய், அபி, நான் விளையாட்டுக்கு சொன்னேன், சீரியஸ் ஆக எடுத்துக் காதே"
"இல்ல, நீங்க இல்லாத போது போர் அடிக்கிறப்போ சும்மா ஏதும் செய்வமேன்னு தான் வீட்டை கொஞ்சம்"
"நான் அதை ஏதும் சொல்லல, ஜஸ்ட் கன்சிடர் அஸ் யுவர் ஓன் ஹவுஸ், என்ன வேனா செய்" சிரித்தேன்.
நிறைய பேசினோம், அரசியல், சினிமா, இலக்கியம், உலகம் என. 18வது அட்ச கோடு அவள் இன்னும் முடிக்க வில்லை, அதற்குள்ளே நிறைய கேட்டாள், பிரிவினை, மதம் என நிறைய சீரியஸ் ஆன விசயங்களைப் பற்றி பேசினோம். அவள் அந்த நாயகன் சந்திர சேகரன் பாத்திரத்துடன் கொஞ்சம் ஒன்றி இருந்தாள்.
ஒரு நாள் பேச்சு வாக்கில் கேட்டாள்.
"நீங்க ஏன் உங்க மனைவி பத்தி என் கிட்ட ஏதும் பேசினதே இல்லை??"
"இல்ல, நான் பொதுவாகவே பெர்சனல் விசயம் அதிகம் பேசவே மாட்டேன்"
"அது சரி தான், ஆனாலும் நீங்க உங்க குழந்தைகளை பத்தி, உங்க பையனைப் பத்தி நிறைய தரம் பேச்சு வாக்கில் சொல்லி இருக்கீங்க, உங்க டாட்டர் பத்தி கூட சில தரம் சொல்லி இருக்கீங்க, ஆனா உங்க மனைவி பத்தி எதுவுமே சொன்னது இல்ல?"
"சொல்ற மாதிரி எதுவும் பெருசா விசயம் இல்லைன்னு வச்சுக்கோ" என சிரித்தேன்.
அவள் என் முகத்தையே உற்றுப் பார்த்தாள். கொஞ்சம் ஆழமான பார்வை. இருவருமே வெகு நேரம் எதுவுமே பேசிக் கொள்ள வில்லை. ஒரு அபாயகரமான மௌனத்திற்கு பிறகு சொன்னேன்.
"எனக்கு மேரேஜ் ஆகிறப்போ 23 தான், நிறைய கனவுகள் இருந்துச்சு, டிப்ளோமா முடிச்சு 4 வருசம் வேலை செஞ்சு இருந்தேன், அப்பவே சொந்தமா பிசினஸ் ஆரம்பிக்க கனவு கண்டேன், அதுக்கான ஆரம்ப வேலைகளில் இருந்தேன், அப்போ தான் கல்யாண ஏற்பாடு, அவளும் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த பொண்ணு, எனக்கு அப்போ கல்யாணத்தில் பெருசா விருப்பம் இல்லாட்டியும் அது ஒரு மேரேஜ் ஆஃப் கண்வீனியன்ஸ். ஒரு வேளை பிசினஸ் ல பிரச்சினை வந்தா, திடீர் பண நெருக்கடி ஏதும் வந்தா ஒரு பேக் அப் வேணும் கிறமாதிரி ஒரு பாதுகாப்புக்கு நடந்த கல்யாணம் அது. அவளும் நல்லவள் தான் ஆனா ஒரு" கொஞ்சம் தயங்கினேன்.
"சொல்லுங்க பரவால்ல"
"சாரி, இதை சொல்ல கொஞ்சம் தயக்கம் இருக்கு, ஆனாலும் பரவால்ல, அவ நல்லவள் தான் ஆனா முட்டாள், எந்த ஒரு விடயத்திலும் அவளுக்கு பெருசா ஒரு கருத்து கூட கிடையாது, அப்பாவி, ஈசியா யார் கிட்டயும் ஏமாறக் கூடியவ, பணம் கொடுத்தா செலவு பண்ண மட்டும் தெரியுற, பணம் பத்தி மட்டும் யோசிக்கிற, கஷ்டம், வெளி உலகம் ஏதும் தெரியாத ஒரு ஆளு அவ. அவ கிட்ட மனசு விட்டு பேசக் கூட என்னால முடிஞ்ச தில்லை இது வரைக்கும்."
அபி ஏதும் பேசாமல் என்னைப் பார்த்தாள்.
"இப்போ கொஞ்சம் வருசமா லேசா மாறி இருக்கா, குழந்தைகள் வளந்துட்டாங்க, அவங்க கூட பழகி இவளுக்கும் கொஞ்சம் அறிவு வளந்துடுச்சு" என்று சிரித்தேன்.
"நான் இதுல உங்களைத் தான் குறை சொல்வேன், நீங்க அவங்களை மாத்த, சொல்லிக் கொடுக்க தயாரா இல்லை, அவங்களை குறை சொல்ல மட்டும் ரெடி ஆக இருக்கீங்க"
"இங்க பாரு, நானா அவளைப் பத்தி சொல்லல, நான் அவளுக்கு சொல்லித் தர முயற்சி பண்ணவே இல்லைன்னு நீயா முடிவு பண்ணாதே, நான் சில விசயங்களைப் பேச விரும்பலை, அவளுக்கு உலகம் தெரியாது, நல்லது கெட்டது தெரியாது, அப்பாவி அப்படின்னதும் ரொம்ப அப்பாவி நெனச்சு ஃபீல் பண்ணாதே. ஒரு நாலு வருசம் முன்ன அவ அண்ணனுக்கு உடம்பு சரியில்லை, அவசரமா கிளம்பி ஹாஸ்பிடல் போயிட்டோம், அங்க திடீர்னு ஒரு மூணு லட்சம் கட்டணும், அவ அண்ணன் குடும்பமும் வசதி தான்னாலும் அப்போ உடனே யாரும் இல்லை, நான் எப்பவும் இப்படி அவசரத்துக்கு வெளியே வரப்ப காசு எடுத்து வருவேன், அன்னைக்கு கையில கேஷ் ஆவே 5 லட்சம் எடுத்து வந்தேன், நான் கட்டலாம்னு பார்த்தா காணோம், ஒரு லட்சம் தான் இருக்கு, மீதி காணோம், இவளைப் பார்த்தேன், "நீங்க இப்படி ஏதும் பண்ணுவீங்கண்ணு தெரிஞ்சு தான் மீதியை வீட்டிலேயே வச்சிட்டு வந்தேன்" சொன்னா. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், இத்தனைக்கும் அது அவளோட அண்ணன்."
"உலகமே தெரியாதவள் தான், ஆனா பணத்தோட அருமை தெரிஞ்சு இருந்தது, தன் சொந்த அண்ணன் ஹாஸ்பிடல் ல இருக்கப்போ கூட அவளுக்கு பணத்து மேல தா கண்ணு. நல்ல வேளை, அன்னைக்கு பணம் உடனே அவங்க கட்டி அண்ணன் பிழைச்சிட்டாரு"
அவள் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
"நீ கேட்கலாம், ஏன் அவ கிட்ட பணத்தை விட உறவுகள் முக்கியம்னு புரிய வைக்க முயற்சி பண்ணலை அப்படி, நானே அன்னைக்கு ஒரு ஷாக் ல இருந்தேன், அப்ப வரைக்கும் அவ ஒரு அப்பாவி முட்டாள் அப்படி மட்டும் தான் நெனச்சேன், அப்போ தான் அவள் ஒரு காரியக் கார முட்டாள் அப்படி புரிஞ்சுது. பேசினப்போ சொன்னா, எனக்கு பாதில வந்ததால பணத்தை, பணத்தோட அருமை பத்தி தெரியல"
"எனக்கு அப்போ தான் தோணிச்சு, நானும் பணம் பணம்னு தான் ஓடுறேன் அப்படி, அதுக்குப் அப்புறம் தான் ஓட்டத்தை ஸ்டாப் பண்ணி கணக்கு பார்த்தேன், இருக்கற வீடு, நிலம், சொத்து, பிசினஸ் எல்லாம் போதும், இனி புதுசா ஏதும் வேணாம். இருக்கறது நிம்மதியா பார்ப்போம் அப்படி பார்க்க ஆரம்பிச் சேன்"
"உம்" என்றாள்.
"இப்போ தான் சில வருசமா பிடிச்சதை படிச்சு, பிடிச்சத பார்த்து, பிடிச்சது தின்னு, பிடிச்ச ஊரு சுத்தி, பிடிச்சது குடிச்சு, பிடிச்ச ..." சொல்ல முடியாமல் தயங்கினேன்.
"பரவால்ல, சொல்லுங்க"
"இல்ல, எனக்கு வருசா வருசம் டூர் போற பழக்கம் இப்போ உண்டு, தனியா ஒரு பாரின் trip. 3 வாரம் கிட்டத்தட்ட எல்லாத்தையும் மறந்து புது மனுசனா, புது உலகத்துல, புதுசா பிறந்த மாதிரி இருப்பேன். அப்படியே ரெஃபிரஷ் ஆகி திரும்ப வருவேன்"
"போன வருஷம் எங்கே"
"யுரோப் டூர், 25 days கிட்ட இருந்தேன், அதுக்கு முந்தின வருசம் யு.எஸ். முதல் வருசம் தாய்லாந்து இப்படி வருசம் ஒரு டூர், மன நிம்மதி, அமைதி, சந்தோஷத்துக்கு"
"கிடைச்சுதா?"
"என்ன?"
"நீங்க தேடின நிம்மதி, சந்தோசம் வெளிநாடு டூர்ல கிடைச்சுதா?"
சட்டென அபி ஒரு விவரம் தெரியாத பெண் என்ற எண்ணம் மறைந்து அவளை முதிர்ச்சி அடைந்த தோழியாக பார்த்தேன்.
அவள், சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்ய எண்ணிய ஒரு சிறு பெண், உறவுகளை சரியாய் தேர்ந்தெடுக்க தவறிய, இருந்த உறவுகளையும் இழந்து தனியாக வாடும் ஒரு உறவுக்கு ஏங்கும் பேதைப் பெண் என நான் நினைத்த சின்ன பெண் ஒரே வார்த்தையில் ஒரே கேள்வியில் என்னை வாய் அடைக்க வைத்ததை உணர்ந்தேன்.
அவள், அவள் தெரிந்து கேட்டாளா தெரியாமல் கேட்டாளா? ஆனால் அந்த கேள்வி என்னை ஒரு வகையில் பாதித்தது. சந்தோசத்தை ஏன் வெளியில் தேடுகிறாய் என்கிற கேள்வி அதில் மறைந்து இருந்தது என்று உணர்ந்தேன்.
உனது மகிழ்ச்சி நாடு நாடாக ஊர் சுற்றுவது, விதம் விதமாக புது வகை உணவுகளை உண்ணுவது, புது வித போதை திரவங்களை குடிப்பது, புது புது இனத்தில், புது புது நிறத்தில், புது புது பெண்களோடு உறவு கொள்வது இவற்றிலா இருக்கிறது?? என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
யோசிக்கையில் இப்போது எதோ இடறியது. கடந்த சில வருடங்களாக வெளியில் டூர் செல்கையில் ஒரு வித வெறியோடு நிறைய செய்து இருக்கிறேன், விதம் விதமான பெண்கள், விதம் விதமான பாண்டசி, இப்போது யோசிக்கையில் எனக்கே மிக ஆபாசமாக தோன்றும் எத்தனை அனுபவங்கள்.. ஒரு வித குழப்பத்தில் இருந்தேன்.
"சாரி, நான் பொதுவா கேட்டேன், நீங்க ரொம்ப சீரியஸ் ஆகிட்டீங்க, சாரி"
"இல்ல இல்ல, எதோ ஞாபகம்" என்றபடி சிரித்தேன். சிரிப்பில் உயிர் இல்லை. அவளைப் பார்த்து சொன்னேன்.
"நீ நான் நினைச்சதை விட அறிவாளி, புத்திசாலி" என்றேன்.
அவள் ஆச்சர்யமாக என்னைப் பார்த்தாள்.
"நிஜமா, என் மனசுல இருந்து சொல்றேன், நீ புத்திசாலி தான், இல்லைன்னா இப்போ கொஞ்ச நாளா புத்திசாலி ஆகிட்டே"
அவள் ஏதும் சொல்லாமல் புன்னகை செய்தாள்.