நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#10
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 03 - ராசு

[Image: nivv.jpg]

ன்று தன்னால் வேலை பார்க்க முடியும் என்று மகேந்திரனுக்குத் தோன்றவில்லை. வீட்டில் தம்பி என்ன சிறுபிள்ளைத்தனம் செய்து வைத்திருக்கிறானோ என்று அதே யோசனையாக இருந்தது.

உண்மையில் தம்பியைக் கண்காணிக்கத்தான் தான் வீட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ? இல்லை அதற்கு வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா? என்று தன்னைத்தானே சந்தேகம் கொண்டான்




அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை.


அவன் மனம் என்ன நினைக்கிறது என்று அவனுக்கேப் புரியாதபோது அவன் மற்றவர்களிடம் என்ன கூற முடியும்?



அந்த கிருஷ்ணவேணியின் சிரிப்பைக் கண்டு தானே கதிகலங்கிப்போயிருக்கையில் உலகம் புரியாத தம்பி என்ன செய்வான். சிரித்து சிரித்தே மயக்கிவிடுவாள்.



அம்மாதான் கூட இருக்கிறாரே என்ற தைரியம் வரவில்லை.



அவரோ தம்பிக்கு மேல் அவளைக் கண்டு மயங்கிக்கிடக்கிறார்.



அவருக்கு எப்போதுமே தனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டு. அவனே சிறு வயதில் கண்டிருக்கிறான்.



அவனுக்கு அடுத்து உருவான குழந்தை குறை பிரசவத்தில் பிறந்து இறந்துவிட்டது. அதுவும் ஆசைப்பட்ட மாதிரி பெண் குழந்தை. அப்போதே அவருடைய உடல்நிலை மிகவும் சீர்கேடானது. அத்துடன் அவர் மனம் தேறி வரவும் நீண்ட நாட்களானது.



அதன் பிறகு யுகேந்திரன் உண்டானதற்கு வனிதாமணியின் பிடிவாதம்தான் காரணம்.



அப்போதும் பெண் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவரது மனதில் இருந்து மறையவில்லை.



அதனால்தான் அந்த கிருஷ்ணவேணியைக் கண்டதும் அவரது மனம் இளகிவிட்டதோ?



அப்படியே பார்த்தாலும் இந்த சாருமதி பெரும்பாலும் நமது வீட்டிலேயேதானே குடியிருக்கிறாள்.



அவள் மீது அப்படி ஒரு பாசம் இருந்த மாதிரி தெரியலையே?



கண்டிப்பாக அவளது நடத்தையைக் கண்ட பிறகு தன் அன்னைக்கு அவள் மீது பாசம் பிறக்க வாய்ப்பில்லை என்று அவனுக்கு நிச்சயமாய் தோன்றியது.



உடனே வீட்டிற்குப் போக வேண்டும் என்று எண்ணினான்.



இருந்தும் அன்றைய வேலைப்பளு அவனை நகரவிடவில்லை. இதில் அந்த சாருலதா வேறு தொதொணத்தபடியே இருந்தாள்.



தங்கள் வீட்டில் என்ன நடந்தால் அவளுக்கு என்ன என்று கூட கோபத்தில் அவனுக்கு எரிச்சலாய் வந்தது.



ஏதோ வேலையில் கொஞ்சம் சூட்டிகையாய் இருக்கிறாள் என்று கூடவே வைத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. இல்லை என்றால் அவளுக்கு எல்லாம் வேலை கொடுக்க முடியுமா?



சொந்தக்காரி என்பதற்காக வேண்டுமானால் முக்கியமான இந்த வேலையைத் தவிர வேறு ஏதாவது வேலை கொடுத்திருக்க முடியும்.



தான் இப்போது வீட்டிற்கு கிளம்பினால் அவளும் தன்னுடன் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

ஏனோ இன்று அவன் வீட்டிற்கு போகும்போது அவளை அழைத்துச் செல்ல மனம் வரவில்லை. அதனால் முடிக்க வேண்டிய வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்



அத்துடன் எத்தனை நாட்கள்தான் தானே தம்பியைக் கூடவே இருந்து காப்பாற்ற முடியும்? அவனும் வளர்ந்துகொண்டுதானே வருகிறான்.



தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் தைரியம் வரவேண்டும். வந்துதான் தீரவேண்டும்.



இத்தனை நாட்கள் சாருமதி செய்தது எல்லாம் தப்பாக தெரியாத போது இப்போது மட்டும் ஏன் அவள் தப்பாகத் தோன்றுகிறாள்?



இந்த கிருஷ்ணா வந்து என்னையும் மாற்றிவிட்டாளா?



அதன் பிறகு அவன் வீட்டைப் பற்றி அவன் யோசிக்கவில்லை. யோசிக்கவும் நேரமில்லை.



கேந்திரன் மாலை வீட்டிற்கு வரும்போது வீடே அமைதியாய் இருந்தது. அவனுக்கு ஆச்சர்யம் தாளவில்லை.



அவனோடே ரவிச்சந்திரனும் வந்துவிட்டார்.



“வாங்க. என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டீங்க? கொஞ்சம் இருங்க. குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்.”



அவர்களை வரவேற்ற வனிதாமணி சமையல் அறைக்குள் சென்றார்.



சொன்ன மாதிரியே சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் தேநீர் கொண்டு வந்துகொடுத்தார்.



மகேந்திரன் பார்வை இங்கும் அங்கும் அலைபாய்ந்தது.



வீட்டில் தம்பியும் அந்தப் பொண்ணும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்கிற மாதிரி தெரியவில்லை.



வந்த அன்றே ஊர் சுற்ற அழைத்துச் சென்றுவிட்டாளா?







இனி அவன் உருப்பட்ட மாதிரிதான்.



“எங்கே அவங்க ரெண்டு பேரும்?”



அவன் கேட்க நினைத்ததை தந்தை கேட்டதும் தாய் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் கவனிக்க ஆரம்பித்தான்.




“பின்னாடி நீச்சல் குளத்தருகே இருக்காங்க.”
சிரித்தவாறே சொல்லிக்கொண்டு தனது வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 27-02-2019, 05:30 PM



Users browsing this thread: 22 Guest(s)