27-02-2019, 05:26 PM
இன்னும் கனதூரம் நடக்க வேணுமே?" நேற்று முழுக்க karate பயிற்சி. இன்றுதான் கால் நோகத் தொடங்கி இருந்தது. சும்மா வாழ்க்கைக்குதவாத ஒன்றைப் படிக்கப் போய் வீட்டில வந்து அதுநோவுது இதுநோவுது எண்டு படுத்துக் கிடக்கிறதுதான் மிச்சம். அம்மாவின் திட்டல் நினைவுக்குவந்தது.
"இல்லை கொஞ்சத்தூரம் தான்.." சிறிது தயங்கிவிட்டுப் பின், "ஆனா அதுக்கு முதல்ல வேறை ஒரு இடத்துக்குப் போறம்"
"எங்க?"
"உனக்கு பிடிச்ச இடம் தான். போன பிறகு தெரிந்து கொள்ளுவாய் தானே.."
அதற்குமேல் ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. சிறுவயதுக் கதைகளின் சுவாரசியத்தில் மூழ்கிவிட்டிருந்தாள். அதே டீச்சர்தான் இவளது எழுத்தைக் கிண்டல் பண்ணி 'மாட்டுக்கொட்டில்' என்றதும், அதுக்கு அவள் அழுததும், பிறகு அவரே வந்து சமாதனப் படுத்தியதும். எவ்வளவு நல்ல டீச்சர் மாணவர்களுடன் தானுமொருவராய் இருந்து அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார். இதுவரை அவரிடம் படித்த யாருமே அவவை மறந்ததில்லை.
அந்த உச்சி வெயிலிலும் கடற்கரைக் காற்று சில்லென்று உடம்பில் படத்தான் எங்கு வந்திருக்கிறோம் என்று புரிந்தது. ஆனால் ஏன் இங்கு கூட்டிவந்தான் என்று தான் புரியவில்லை. ஒருவேளை சுதாவை வரச்சொல்லியிருப்பானோ? ஒரு நிமிஷம் மனசுக்குள் மத்தாப்பு. ஆனால் அடுத்த நிமிசமே, அப்படி வந்தாலுமே.. "இட்ஸ் டூ லேட்".. காரணம் இவனுக்கும் தெரியும். கண்ணீர்த்திரை கண்களை மறைத்தது.
யாரோ ஒருபெண் சிங்களத்தில் திட்டும் சத்தம் கேட்டு திரும்பியவளின் நெற்றியில் விழுந்த முடியை ஓரமாய்த் தள்ளிவிடும் அளவுக்கு, அந்த கடற்கரைக் காத்துக்கு வலிமையிருக்கவில்லை.
"டக்.. டக்.." கதவு தட்டும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் கடிகாரத்தைப் பார்த்தால் நேரம் நண்பகலைத் தாண்டியிருந்தது. எழுந்துசென்று கதவைத் திறந்தாள்.
"சாப்பாடு கொண்டந்திருக்கிரன். நீங்க மரக்கறிதானே?" ரூம் பாய் தான்.
ஓமெண்டு தலையை ஆட்டினாள்.
"முதலாளிக்கு தெரியேல்லை. அதுதான் போன் பண்ணினவர். ஆனா நீங்கள் எடுக்கேல்ல. அதான் எதுக்கும் இரண்டையும் கொண்டு வந்தனான்." என்று சொல்லிவிட்டு மேசையில் அடுக்கினான். அவளுக்குச் சாப்பிடவே மனமில்லை. ஆனால் திருப்பிக் கொண்டு போகச்சொன்னால் திரும்ப அந்த மேனேஜர் போன் பண்ணி ஏனெண்டு கேப்பான். அவள் இன்றைக்குக் காலமை இங்கை வந்ததிலிருந்து இதுவரைக்குமே ஒரு மூன்று தரம் போன் பண்ணியிருப்பான்.