Romance அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
#57
7


நான் சென்னை சென்ற பின்னும் தினமுமே அபி உடன் ஃபோனில் பேசினேன், நலம் விசாரித்தேன், பொதுவாக நான் யாரிடமும் தினம் பேசும்,  சாப்பிட்டியா, என்ன பண்ற மாதிரி கேள்விகள் கேட்கும் நபர் இல்லை, எனது குழந்தைகளிடம் கோவையில் இருக்கையில் அடிக்கடி ஃபோனில் பேசுவேன் என்றாலும் இந்த மாதிரி கேள்விகள் எப்போதாவது தான் இருக்கும், அதும் பெரியவள் என்னிடம் நான் சாப்பிட்டேனா என்பது மாதிரி கேட்கையில் பதிலுக்கு கேட்டு இருக்கிறேன் தவிர பொதுவாக வெறும் ஃபார்மல் ஆன கேள்விகள் குறைவாக இருக்கும்.

மகனுடன் ஆன உரையாடல் தான் எப்போதும் எனக்கு பிடித்தமானவை, அவனுடன் எனது உரையாடல்கள் எல்லாம் எனக்கு நேரிலும் சரி போனிலும் சரி எனது ரசனைக்கு ஏற்ப இருக்கும், அவனின் ரசனைகள் இந்த பத்து வயதிலேயே எனக்கு பிடித்தபடி இருந்தது. அவனை எனது நீட்சியாக, திருத்திய வடிவமாக பார்த்தேன். எனது இளம் வயது ஆசைகள், லட்சியங்கள் அனைத்தும் நான் அவனிடம் தினிக்காமலே இயல்பாக அவனிடம் இருந்தது, என்னை விட ஆர்வமாக, எதிலும் ஈடுபாட்டுடன் இருந்தான். எனது 18 வயதில், 20 வயதில் எனக்கு தோனாத என் கற்பனைக்கு அப்பாற்பட்ட எல்லாம் அவனுக்கு 10 வயதில் இருந்தது. 

கிட்டத்தட்ட என் மகனுக்கு அடுத்த படியாக எனக்கு அபி உடனான உரையாடல்கள் பிடித்து இருந்தது, தினமும் அவளே போன் செய்வாள், ஆபீஸ் வேலை குறித்த ரிபோர்ட் போல ஆரம்பித்து பின் மற்ற கதைகள், வேலு, வேலுவின் மனைவி, ஆபீஸ் தோழிகள், சமையல், சினிமா, புத்தகம் என எல்லாம் பேசுவாள். 

"எவ்ளோ தூரம் இருக்கு 18வது அட்சக்கோடு" 

"உம், பாதிய தாண்டிட்டென், இப்போ கொஞ்சம் வேகமா போகுது, ஒரு கதை மாதிரியே இல்ல, ரொம்ப இயல்பா போகுது, ஆனா இன்னும் எனக்கு ஒண்ணு புரியல, இது அவ்ளோ பெஸ்ட் நாவல், சாகித்ய அகாடமி அவார்டு வொர்த் ஆன நாவல் ஆக எனக்கு தோணல?"

சிரித்தேன். "முழுக்க படி, ஒரு படத்தை முழுசா பார்க்காம ரிவ்யூ சொல்ல கூடாது, படத்துக்கு ஆவது ஒரு சில ஃப்ரேம் லையே making quality தெரியும், நாவல் ல இன்னும் நிறைய கஷ்டம். நீ படிச்ச வரைக்கும் உனக்கு பிடிக்கலையா?"

"இல்ல இல்ல, பிடிச்சு இருக்கு, நல்லா இருக்கு, பட் இந்தியா அளவுல அவார்டு வாங்குற அளவு என்ன இருக்குன்னு புரியல"

"இதை நாவல் முழுசா படிச்சிட்டு அப்பயும் இதே கேள்வி வந்தா கேளு, அப்போ சொல்றேன்"

என்று சொன்னேன் சிரிப்புடன், அவளும் சிரித்தாள்.

அவள் திருப்பூர் ரூம் மேட்க்கு பெங்களூரில் எதோ வேலை கிடைத்துள்ளது எனவும் அவள் அடுத்த மாதம் காலி செய்வதாக சொன்னாள். 

நான் சென்னை வந்து இரண்டு வாரம் ஆகி இருந்தது. நான் அடுத்த வாரம் ஞாயிறு இரவு மீண்டும் கோவை செல்ல வேண்டும், அபி இடம் சொன்னேன், "நான் ஞாயிறு early morning கிளம்பி திருப்பூர் வரேன், நீயும் கிளம்பி திருப்பூர் வா, உன் திங்ஸ் எல்லாம் கார்லயே கோவை எடுத்துப் போலாம்" 

"உம், உங்களுக்கு எதுக்கு சிரமம்"

"இதுல என்ன சிரமம், நைட் டிராவல் பண்ணி வரதுக்கு பதிலா காலைல வரேன், அவ்ளோ தான்"

"அப்போ சரி" என்றாள் உற்சாகமாக.

கிளம்பும் போதே அபிக்காக இங்கிருந்து சில ஜெயகாந்தன் எளிதான நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், அவள் ரப்பர் படிக்க கஷ்டமாக இருப்பதாக சொன்னது நினைவுக்கு வர ஜெயமோகனின் கன்னியாகுமரி எடுத்தேன், இதில் ஒரு மலையாள இயக்குனர் பற்றிய கதை என்றாலும் மலையாள வசனங்கள் குறைச்சல் தான். என்னிடம் இருந்த எஸ்.ராமகிருஷ்ணன் நாவல் எல்லாம் பெரிய பெரிய புக் ஆக இருக்க அதை விட்டு சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி என படிக்க ஈஸி ஆன புத்தகங்கள் எடுத்து காரில் வைத்தேன். 

ஞாயி்றுக்கிழமை மதியம் தான் திருப்பூர் சென்றேன். அபி முன்பே வந்து ரூமில் இருந்தாள். சிறிய வசதிக் குறைவான அறை தான் என்றாலும் மோசம் இல்லை. அபியின் தோழி 25 வயது அல்லது இன்னும் கொஞ்சம் கூட இருக்கும். அபியை விட கொஞ்சம் matured ஆக இருந்தாள். அபியை நிறைய கலாய்த்தாள். சின்ன பெண்ணை, தங்கையை அக்கா கலாய்ப்பது போல உரிமையுடன் அபியை கலாய்த்தாள்.

மிக கேசுவல் ஆக பேசினாள், பழகினாள். சிரித்த முகத்துடன் இருந்தாள்.

பேச்சு வாக்கில் சொன்னாள், "எனக்கு முதல்ல இவளை இந்த ஊரை விட்டு போக மனசே இல்ல, இவ பிரச்சினை எல்லாம் குறையுற வரைக்கும் இவ கூட இருக்கணும்னு நினைச்சேன்" நான் ஏதும் பேசாமல் அவளைப் பார்த்தேன், அவளே தொடர்ந்தாள்.

"லக்கிலி நீங்க இவளுக்கு நல்ல வேலை, தங்க வீடு எல்லாம் அரேஞ்ச் பண்ணி இருக்கீங்க, அவளை நான் இவளோ சந்தோசமா பார்த்ததே இல்ல" உண்மையான மகிழ்ச்சியுடன் சிரித்தாள். 

மதியம் அவர்களுடன் தான் உணவு, ஒரு இரண்டு மூன்று மணி நேரம் திருப்பூரில் கொஞ்சம் சுற்றினோம், ஏதேதோ வாங்கி, கொடுத்து, சிலரை சந்தித்து விடை பெற்று நேரம் போனது.

அபி யாரையோ  சந்திக்க போன இடைவெளியில் அவள் கேட்டாள்.

"சார், உங்களுக்கு marriage ஆயிடுச்சா?"

"வாட், என்னை பார்த்தா உனக்கு எப்படி தோணுது, எனக்கு எவ்ளோ வயசு இருக்கும்? நீ நினைக்கிறே?"

"ஒரு 32,  33 இருக்குமா?"

"எனக்கு 15 வயசுல பொண்ணு இருக்கு!"

"வாட், என்னால நம்பவே முடியல, நிஜமாவா??" வியப்புடன் கேட்டாள்.

"இதுல எதுக்கு பொய்?? எனக்கு வயசு 40" என்றேன் சிரித்தபடி.

"நிஜமாவே 40 வயசு போல தெரில, நான் உங்களை கிண்டல் பண்ண கேட்கலை, நிஜமா நீங்க ஹேன்ட் சம்மா 32 வயசு போல தான் இருக்கீங்க" என்றாள்.

"Anyway thanks. உங்க ஊருல 30 வயசுல தான் ஹேன்ட் ஸம்மா இருக்கணும், 40 வயசுல இருக்கக் கூடாதா?" என்று வாய் விட்டு சிரித்தேன்.

அவளும் பெரிதாக சிரித்தாள், அபி அவள் தோழி யாரையோ சந்தித்து விட்டு வெளியே வந்தவள் எங்களின் சிரிப்பையே ஒரு வித அதீத ஆர்வத்துடன், அல்லது லேசான பொறாமையுடன் பார்த்தது போல தோணியது. வந்த உடனேயே கேட்டாள்.

"என்ன ஜோக் சொன்னா நானும் சிரிப்பேன்" என்றாள்.

"இது பெரியவங்க ஜோக்கு, உனக்கு வேணாம்" என்றாள் அவள்.

"என்னது?" என அபி அவளை முறைத்தாள்.

"அதான் சொன்னேனே பாப்பா, அது அடல்ட் ஜோக்கு, சின்ன பொண்ணுளாம் கேக்க கூடாது" 

அபி இன்னும் கடுப்பானாள் என்பது முகத்திலேயே தெரிந்தது. பின்னர் ஒரு 6 மணி அளவில் கிளம்பினோம் அவளிடம் விடை பெற்று.

எனக்கென்னவோ அபிக்கு அவள் மீதான அன்பை விட அவள் அபி மீது நிரம்ப அன்பை காட்டியதாக தோணியது. இவளைப் பிரிவது குறித்து உண்மையாகவே அவள் வருந்தினாள். 

"உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேண்டி"

"நானும் தான், டேக் கேர்,  பெங்களூர் போயி புது ப்ரெண்ட்ஸ் கிடைச்சா என்னை மறந்துடாதே"

"நீ தான் என்னை மறப்பே, நான் மறக்க மாட்டேன்"

நானும் ஒரு பார்மலிட்டிக்கு சொன்னேன். 

"பாரு, பெங்களூர் வேலை செட் ஆவுதான்னு, இல்லைன்னா ஒரே ஒரு போன் அடி அபிக்கு, கோயம்புத்தூர் கிளம்பி வா" என்றேன். 

அபி பெரிதாக எதுவும் சொல்ல வில்லை. அவளிடம் விடை பெற்று கிளம்பினோம்.

"அவ உங்க கிட்ட என்ன ஜோக்கு சொன்னா?"

"ஜோக்கா, எப்போ ??"

"நான் வரப்போ சிரிச்சுட்டு இருந்தீங்கலே, அப்போ, எதோ ஏ ஜோக்கு சொன்னேன் அப்படினாளே "

"அதுவா, எந்த ஜோக்கும் இல்ல, என் வயசு கேட்டு ஷாக் ஆகி சிரிச்சா"

"அதுல சிரிக்க என்ன இருக்கு?" கேள்வியாக வினவினாள்.

"என் வயசு 40 அப்படி சொன்னேன், அவ நம்பவே முடியல, 32 வயசு மாதிரி ஹேன்ட் சம்மா இருக்கீங்க சொன்னா, நான் ஏன் 40 வயசுல ஹேன்ட் சம்மா இருக்கக் கூடாதா கேட்டேன், அதுக்கு தான் சிரிச்சுட்டு இருந்தோம்" 

"ஏன் உனக்கு இதுல இத்தனை கேள்வி?" அவளின் அதீத ஆர்வம் கண்டு கேட்டேன்.

"இல்ல, சும்மா தான், அவ நிறைய ஜோக்கு சொல்வா பொதுவா அது தான் ஆர்வமா கேட்டேன்"

"அப்டியா, அப்ப அதுல ஏதும் சொல்லு"

அவள் இதை எதிர்பார்க்க வில்லை, 

"இல்ல, அவ அதிகம் அந்த மாதிரி ஜோக்கு தான் சொல்வா, எனக்கு சட்டுனு வரல" என்றாள் தயங்கி. 

நான் பதில் சொல்லாமல் புன்னகை செய்தேன், வண்டி விரைந்து கொண்டிருந்தது.
[+] 4 users Like nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - by nathan19 - 27-06-2020, 11:54 AM



Users browsing this thread: 4 Guest(s)