Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பாகிஸ்தான் தாக்குதல்: "பதிலடி தர முடியும் என்பதை காட்டவே இந்த நடவடிக்கை" - இம்ரான் கான்| LIVE
[Image: _105817549_fighter.jpg]படத்தின் காப்புரிமைHTTP://INDIANAIRFORCE.NIC.IN
பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய வான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் வான் எல்லையில் நுழைந்த இரு இந்தியப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.
14:00 PM "நாங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், எந்த வித பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்படவில்லை. எங்கள் மீது அத்துமீறல் திணிக்கப்பட்டால் எங்களால் பதில் தாக்குதல் நடத்த முடியும் என்பதை இந்தியாவுக்கு காட்டவே இந்த நடவடிக்கை" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
"இறையாண்மையுள்ள எந்த நாடும் மற்றொரு நாடு நீதிபதியாகவும், தண்டனை அளிப்போராகவும் மாறுவதை அனுமதிக்க முடியாது. அதனால்தான், அத்துமீறல் நடந்தால் பதிலடி தருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்தியாவிடம் வலியுறுத்தினோம்." என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்
3:30 PM: நேற்று பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்தியா துரிதமாக செயல்பட்டு பதிலடி கொடுத்ததாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட மிக் 21 விமானத்தை இந்தியா இழந்ததாகவும், விமானத்தின் விமானியை காணவில்லை என்றும், பாகிஸ்தான் அவர்கள் வசம் விமானி இருப்பதாக கோருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2:30 PM: இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வடக்கே உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்திய ஆளுகையில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் லேஹ் ஆகிய இடங்களிலும், அமிர்தசரசு, சண்டிகர் மற்றும் டேராடூன் ஆகிய இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
2:00 PM: பிடிக்கப்பட்ட விமானியின் வீடியோ என்று பாகிஸ்தானால் பகிரப்பட்ட, வீடியோவில் விமானியின் பெயர் அபிநந்தன் என்று அவர் தெரிவிக்கிறார்.
அந்த வீடியோ பாகிஸ்தானால் பகிரப்பட்டுள்ளது. இந்திய அரசு இதுகுறித்து இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.அதன் உண்மைத் தன்மை குறித்து பிபிசியால் உறுதி செய்ய இயலவில்லை
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 27-02-2019, 04:49 PM



Users browsing this thread: 38 Guest(s)