Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`இந்திய விமானியை சிறைபிடித்துள்ளோம்!’ - பாகிஸ்தான் தகவல்

[Image: WhatsApp_Image_2019-02-27_at_14.04.39_14187.jpeg]
ல்வாமா தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், பால்கோட் பகுதியில் செயல்பட்டுவந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை முதலில் மறுத்த பாகிஸ்தான் அரசு, இந்தியா போர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது'' என்றது.
இந்த நிலையில், இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளாயின.  இந்தியா தரப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில், `இந்திய விமானங்களை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம். ஒரு வீரரை பிடித்துவைத்துள்ளோம்'' என்றனர். இதற்கு, இந்தியா மறுப்பு தெரிவித்ததாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்த விமானி அபினந்தன் வர்தன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். இந்தியா தரப்பில் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 27-02-2019, 04:46 PM



Users browsing this thread: 19 Guest(s)