எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
Rainbow 
மறுநாள் காலையில எழுந்து குளித்து விட்டு சாப்பிடாம கல்லூரிக்கு கிளம்பினான் ராஜா 

ராஜா நேற்று இரவு தனது எண்ணத்தை மாற்றி கொண்டான்.

இனி வீட்டில இருப்பவர்கள் தன்னிடம் அன்பு காட்ட வேண்டும் எண்ணத்தை கைவிட்டான். 

இனி வீட்டுல இருப்பவர்களுக்கு நான் யாரோ எனக்கு இவர்கள் யாரோ என நினைத்து கொண்டான். 

ஆனால் மனம் தான் ஏற்றுகொள்ள முடியல. இன்னும் ஏக்கத்துடன் அனைவரையும் பார்த்தது 

எல்லோரும் ஹாலில் உட்காந்து இருந்தாங்க

யாரையும் கவனிக்காம வீட்டை விட்டு வெளியே வந்தான் ராஜா 

ராஜா சாப்பிடாம. வெளியே போனதை கவனித்த அக்காவும் தங்கையும் எங்காவது மயக்கம் போட்டு விழட்டும் நினைத்து கொண்டாங்க 

அண்ணனே இதே மாதிரி வீட்டை விட்டு மொத்தமா போயிட்ட நல்லாருக்கும் மனசுக்குள் நினைத்தான்.

அப்பா அமைதியா இருந்தார். நேற்றிரவு நடந்தது தெரியும் என்பதால் அமைதியா இருந்தார் 

ஆனால் அம்மாவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இதுவரை எவ்வளவு வெறுப்பு இருந்தாலும் சாப்பிட்டு இருந்தான் 

இப்ப சாப்பிடாம போனதும் ஏனோ மனசு வலித்தது. இதோ போல் வீட்டை விட்டு ஒதுங்கி விட்டாள். 

அப்பறம் அண்ணனையும் தம்பியையும் எப்பிடி சாமாதனம் பண்ணி ஒரே வீட்டுல சந்தேஷமா இருப்பது 

தான் இவ்வளவு நாள் நடந்திய நாடகம் அர்த்தமில்லாம போயிவிடுவோம பயந்தாள் அம்மா 

இல்ல இல்ல. இதற்கு இன்னிக்கே முற்றுப்புள்ளி வைக்கிறேன் அம்மா நினைத்து மற்ற வேலைகளை கவனித்தாள்

அப்பா வேலைக்கு போயிட்டார். அண்ணன் ஏதோ ஒரு கம்பெனிக்கு நேர்க்காணலுக்கு போனான் 

அக்கா தோழியை பார்க்க போயிவிட. தங்கை பள்ளிக்கு கிளம்பி போனாள் 

 அவசரமா சாப்பாட்டை எடுத்து கொண்டு கல்லூரிக்கு போனாள் அம்மா 

கல்லூரிக்குள் நுழைந்து ராஜாவின் வகுப்பை விசாரித்து போகும் போது 

அதே நேரம் கல்லூரியில்  இடைவேளை மணி அடித்தது 

ராஜாவின் வகுப்பு இருக்கும் வராண்டாவில் திரும்பும் போது எதிரே ராஜாவே வந்தான் 

அம்மா உடனே ராஜாவை இழுத்து கொண்டு கேண்டீனுக்கு கூடிட்டு போனாள் 

ராஜாவுக்கு எதிர்பராம நடந்ததை ஏற்று கொள்ள முடியல. நேற்றிரவு முடிவெடுத்தது இப்பிடி போகும்னு எதிர்பார்க்கல

அம்மா ராஜாவின் கையை இழுத்துட்டு போவதை தடுக்கவே ஏன்னு கேள்வி கேட்கவே தோனலை ராஜாவுக்கு

ராஜாவின் வகுப்பை சேர்ந்தவர்கள் பார்த்தாங்க 

கேண்டீனுக்குள் நுழைந்த அம்மா ஒரு ஒரத்தில் உள்ள டேபிளில் சாப்பிட்டு பையை வைத்தாள் 

தட்டு எடுத்து சாப்பிட்டை வைத்து ராஜாவை சாப்பிட சொன்னாள் அம்மா 

ராஜா அமைதியா சாப்பிட்டான். பின் ராஜா சாப்பிட்டப்பின் அம்மாவும் அங்கயே சாப்பிட்டாள்

ராஜா இதை சற்றும் எதிர்பார்க்கல.  அம்மாவும் சாப்பிடாம இருந்தது. ஏனோ அவனையறியாமல் கண்ணில் கண்ணீர் வந்தது 

ராஜாவின் கண்ணில் கண்ணீர் வருவதை கவனித்தாள் அம்மா 

டோய் அம்மா உன்க்கிட்ட இப்பிடி நடந்து கொள்ளுவதற்க்கு காரணம் இருக்கும். நேர வரும் போது சொல்லுறேன் 

அது வரை அமைதியா இரு. எக்காரணம் கொண்டு வீட்டை விட்டு போகனும் நினைக்ககாதே அம்மா சொல்ல

ராஜாவின் தலை தானாக சரினு தலையாட்டியது 

சரி வகுப்புக்கு போ. கல்லூரி முடிந்ததும் இருவரும் சேர்ந்தே போகலாம் அம்மா சொல்ல

அதே நேரம் இடைவேளை முடிந்ததிற்க்கான மணி அடிக்க ராஜா வகுப்புக்கு போனான் 

ராஜா வகுப்புக்கு போவதை பார்த்து ரசித்தாள் அம்மா 

அதன் பின் கல்லூரி முடிந்தது கிளம்பினாங்க. நேராக ராஜா வேலை செய்யும் இடத்திற்க்கு போனாங்க 

இருவரும் குடோனுக்குள் நுழைந்ததும் விசித்ரா தான் முதலில் பார்த்தாள் 

ஆனால் பூஜா மற்ற அனைவரும் பார்த்து கோபமானாங்க 

வேகமா வந்த பூஜாவும் வித்யாவும் ராஜாவிடம் வந்தாங்க

அண்ண வாங்கனு வேகமா இழுத்துக்கிட்டு போனதை பார்த்த அம்மா சிரிச்சாங்க

ஏண்டி இவ்வளவு அவசரம் உங்களுக்கு அம்மா கேட்க

ம்ம் அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாதது பூஜா கோபமா சொல்ல

அம்மாவும் சிரிப்பு தாங்காம சிரிச்சாங்க 

சரிடி என் பிள்ளைய நல்ல பார்த்துங்ககோனு அம்மா சொல்ல

எங்க அண்ணனை பார்த்தாக்க எங்களுக்கு தெரியும் நீங்க ஒண்ணும் சொல்ல தேவையில்லை வித்யா சொல்ல

அய்யே உங்களுக்கு அவன் அண்ணன் ஆவதற்க்கு முன்னாடியே எனக்கு அவன் பிள்ளைடி அம்மா சொல்ல

எல்லோரும் சேர்ந்து அம்மாவை முறைத்தாங்க 

அப்ப அப்ப உன் தங்கைகளுக்கு கோபத்தை பாருனு கிண்டல் பண்ணிட்டு ஏய் காலையிலேயே அவன் சாப்பிடல 

ஏன்னு தெரியல. நீங்க அவனை சாப்பிட வைங்கானு அம்மா சொன்ன அடுத்த நொடி 

அண்ண வாண்ண பூஜா உட்கார வைத்துவிட்டு எல்லோரும் சாப்பிட்டை கொண்டு வந்தாங்க 

எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் ராஜாவுக்கு ஊட்டிவிட்டப்பின் ராஜா மத்தவங்களுக்கும் ஊட்டிவிட்டான் 

பின்னர் எல்லோருமே வேலைய பார்த்தாங்க 

இவனைத்தையும் பார்த்து ரசித்துட்டு ராஜாவின்  நெற்றியில் முத்தமிட்டு நைட் வெளியே சாப்பிடாம வீட்டுக்கு வந்து சாப்பிடுனு சொல்லிட்டு அம்மா போக 

ராஜாவுக்கு முத்தம் கொடுத்ததை பார்த்த அனைவரும் கோபமானாங்க.

அம்மா போன அடுத்த நொடி எல்லோரும் சேர்ந்து ராஜாவுக்கு முகம் முழுவதும் முத்தம் கொடுத்தாங்க

இதை பார்த்த விசித்ரா சிரித்தாள்.
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 3 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by badboyz2017 - 21-06-2020, 09:39 PM



Users browsing this thread: 16 Guest(s)