Romance அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
#39
5

"அது விடு, என்னம்மா இதுலாம்" என்றேன்.


அவள் எதுவும் பேசாமல் அமைதியாக என்னைப் பார்த்தாள், பின் உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள்.

"அழாதே, சொல்லு, என்ன ஆச்சு?"

என்னை உற்றுநோக்கினாள், பின் "இல்ல, சின்ன அடி தான், இப்ப வலியே ரொம்ப இல்ல, நாளைக்கே நடப்பென் பாருங்க"

"நான் ஆக்சிடென்ட் பத்தி கேக்கல"

அவள் மாத்திரை எடுத்தது எனக்கு தெரியும் என அவள் உணர்ந்தாள், சங்கடமான சிரிப்புடன் சொன்னாள்.

"இல்ல, திடீர்னு கொஞ்ச நாளாவே எதுக்கு இருக்கோம்னு தோண ஆரம்பிச்சுது, ப்ரெண்ட் அவ ஒரு வாரமா ஊருல இல்லையா, தனியா தினம் டிப்ரசனா இருந்துது, நாலு நாள் முன்னேயே வாங்கினேன், சாப்பிட தைரியம் வரல, நேத்து சாயந்திரம் திடீர்னு தோணி ச்சு, ஆனா மாத்திரை போட்ட பத்து நிமிசத்தில் இது பைத்தியக் கார தனம்னு புரிஞ்சுது, உண்மையாவே நான் நேத்து ஹாஸ்பிடல் தான் வந்துட்டு இருந்தேன், அப்போ தான் அடிபட்டது"

"மாத்திரை போடறதுக்கு முன்ன அப்பா அம்மா மத்தவங்க யார் பத்தியும் ஞாபகம் வரலையா, யார் கிட்டயாவது மனசு விட்டு பேசி இருக்கலாமே?"

"எனக்கு தான் யாருமே இல்லையே" என விரக்தியாக சொல்லி சிரித்தாள், அந்த சிரிப்பு என்னை உள்ளுக்குள் மிகவும் பாதித்தது.

அவளே தொடர்ந்தாள்.
"அம்மா கிட்ட பேசினேன் நேத்து, ஒரு நாலஞ்சு பேரு கிட்ட கடைசியாக பேசலாம் அப்படி நினைச்சேன், உங்க கிட்ட கூட ஒரு தரம் பேசலாம் அப்படி நினைச்சேன், அம்மா கிட்ட பேசினதுல மனசு நெரஞ்சிடுச்சு, வேற யாரு கிட்டயும் பேசல" என்றாள் விரக்தியுடன்.

"அம்மா திட்டினாளா?"

"இல்ல, இல்ல, திட்டலாம் இல்ல. இன்னுமா நீ செத்து தொலையல அப்படி தான் கேட்டாங்க" புன்னகைத்தாள்.

"அவங்கள விடு, என்ன ஆச்சு உன் கல்யாணம்??  எங்க அவன்?"

"போயிட்டான், நான் ஒன்றரை வர்சமா இங்க  திருப்பூர்ல வேலை பார்த்துட்டே ப்ரெண்ட் கூட ரூம் எடுத்து தங்கி இருக்கேன்"

"ஏன்?"

"என்ன சொல்றது, அன்னைக்கு ஸ்டேஷன்ல இருந்து பெங்களூர் அவன் ப்ரெண்ட் வீட்டுக்கு போயி ஒரு மாசம் இருந்தோம், அப்பவே கொஞ்சம் பிரச்சினை, நம்ம ஆளுங்க ஊருல அவன் வீட்டை, அப்பா அம்மா எல்லாம் அடிச்சு நொருக்கிட்டாங்க, அது கொஞ்சம் பிரச்சினை போலீஸ் கேஸ் எல்லாம் ஊர்ல ஆச்சு, இவன் டிப்ளமோ முடிச்சவன் தான், வேலை, சம்பளம், வீடு எல்லாம் சிரமமா இருந்துச்சு, லேசா குடி பழக்கம் கூட உண்டு"

அவள் நிறுத்தி கொஞ்சம் ஓய்வெடுத்து சொன்னாள்.

"அவன் ப்ரெண்ட்ஸ் அவங்க பேச்சு பழக்க வழக்கம் எல்லாமே கொஞ்சம் சரியா இல்லை, இவன் கிட்ட சொன்னாலும் புரிஞ்சுக்க லை, அடிக்கடி சண்டை போட்டோம், அப்புறம் திருப்பூரில் வேலைக்கு வந்தோம், தனியா ஒரு மூணு நாலு மாசம் இருந்தோம், இங்க சண்டை தினம் தினம் ஆச்சு, குடியும் அதிகம், ஒரு நாள் சண்டை போது நான் எதோ சொல்ல உன் ஜாதித் திமிரை காட்டுறியா அப்படி கேட்டான், என்னால அதை ஏத்துக்கவே முடில, அது இதுன்னு நிறைய பேசி பெரிய சண்டை ஆச்சு, தினம் தினம் பெரிய சண்டை, அடிச்சு கூட இருக்கான்"

அவள் நிறுத்தினாள், மேலே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள், கன்னத்தில் கண்ணீர் வழிய அதை துடைக்காமல் அவளும், என்ன செய்வது என்று புரியாமல் நானும் இருந்தோம்.

அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நின்றேன், அவளே தொடர்ந்தாள்.

"அப்புறம் ஒரு நாள் ப்ரெண்ட்ஸ் பார்க்க பெங்களூர் போனான், அப்புறம் வரவே இல்ல. ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணி சொன்னான் "நமக்கு இனி செட் ஆவாது, உன் வழிய நீ பாரு, என் வழிய நான் பாக்குறேன்" அவ்ளோ தான், அப்புறம் நான் இங்க தனியா இருந்தேன், அப்புறம் ப்ரெண்ட் ஒருத்தி கூட இப்போ"

"நடுவுல கொஞ்சம் வீட்ல அப்பா அம்மா கூட பேச முயற்சி பண்ணினேன், முடியல, அம்மா ரொம்ப அசிங்கமா திட்டினா. அவ்ளோ ஏன் வெக்கம் விட்டு அவன் கூடவும் திரும்ப பேசினேன், ஏதும் சரியா வரல"

"சரி, ஏன் திடீர்னு இப்படி ஒரு எண்ணம்?"

அவள் தயங்கினாள், "உங்களுக்கு புரியும், தனியா ஒரு வயசுப் பொண்ணு, அதும் கல்யாணம் ஆகி புருசன் விட்டு பிரிந்து இருக்க பொண்ணுக்கு என்ன என்ன பிரச்சினை வரும்னு"

"உம்"

அவள் நிறைய பேசினாள், புலம்பினாள், சில சமயம் அழுகை வர பேச்சை மாற்றினாள், அழாமல் இருக்க முடிந்த வரை முயற்சி செய்தாள். அவளின் துயரங்கள் புரிய, மனம் வலித்தது. 23 வயதுக்குள் இத்தனை அனுபவங்கள், வலிகள், ரணங்கள், தற்கொலைக்கு தூண்டும் அளவு. எழுந்து அவள் அருகில் சென்றேன். கட்டிலில் அமர்ந்தவாறு இருந்த அவள் அருகே நான் நிற்க என் மீது சாய்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள், அவளைத் தடுக்காமல் அழ விட்டேன். 


எனக்கு நன்கு நினைவு இருக்கிறது, என் டிப்ளமோ நாட்களில் இவள் குழந்தையாக என் தோள் மீது இருக்க நான் கோவில் அருகே அமர்ந்து படித்துக் கொண்டு இருப்பேன், சுமதி வேலையாக இருக்கும் போது எல்லாம் இவள் என்னோடு தான் இருப்பாள். நான் தூக்கி வளர்த்தவள் இப்படி குமுறி அழுகையில் என்னால் தாள வில்லை.  அவள் ஒரு ஐந்து நிமிடம் நன்கு சோகம் தீர அழுது இருந்தாள்.அவளின் தலையை வருடியவாறு சொன்னேன்.

"சிட்டு, இனி எதுக்கும் வருத்தப் பட கூடாது, எவ்ளோ அழனும்னாலும் இன்னைக்கே அழுதுடு, நான் சுமதி கிட்ட பேசுரன், நான் பார்த்துக்கிறேன் எல்லாத்தையும், நீ எதுக்கும் கவலைப் படாதே"

காலை உணவு முடிந்து, அவளுக்கு எக்ஸ்ரே இன்னும் சில செக் செய்ய அழைத்து சென்ற கேப்பில் சுமதிக்கு போன் செய்தேன்.

"சுந்தர், எப்படி இருக்கே, ரொம்ப நாள் ஆச்சேப்பா நீ போன் பண்ணி, எல்லாம் நல்லா இருக்காங்களா?"

"நல்லா இருக்கேன், சிட்டுக்கு ஆக்சிடென்ட் அப்படி போன் வந்தது"

நான் இங்கே திருப்பூரில் அவள் அருகே ஹாஸ்பிடல் இருப்பதை சொல்ல வில்லை. 

"சிட்டா, அப்படி யாரும் எனக்கு தெரியாது"

"ஏய், என்னக்கா, அவ உன் பொண்ணுக்கா"

"சுந்தர், நிஜமா சொல்றேன், எனக்கு ஒரே புள்ளை தான், அவ இங்க என் கூட இருக்கா, இன்னொருத்தி இருந்தா, இப்போ அவ செத்துப் போயிட்டா, அவ்ளோ தான், நீ அவள பத்தி ஏதும் என் கிட்ட பேசாதே, தயவு செஞ்சு"

மேலே எதுவும் பேச வில்லை நான். அவள் மனைவி குழந்தைகள் பற்றி கேட்டது எல்லாம் இயந்திரம் போல பதில் சொல்லி வைத்தேன்.

டெஸ்ட் முடிந்து வந்தவளிடம் வேலை, தங்குமிடம், உடன் இருக்கும் தோழி எல்லாம் கேட்டேன். இங்கு திருப்பூரில் உடன் வசிக்கும் தோழி பிகாம் முடித்த பெண், ஒரே கம்பனி, இப்போது இருக்கும் வேலை சம்பளம் பிடிக்காமல் வேறு ஒரு இன்டர்வியூ சென்னை சென்று இருக்கிறாள். அவளுக்கு பெரிதாக ஒன்றும் இங்கு இல்லை,  எல்லாமே மிக சுமாராக அல்லது அதற்கும் கீழே.

மாலையே டிஸ்சார்ஜ். முடிந்து அவளின் வீட்டுக்கு சென்று அவளின் டிரஸ் மட்டும் சில நாளுக்கு எடுத்து கிளம்பினோம். அவள் மிக தயங்கினாள், எதுக்கு உங்களுக்கு சிரமம் என. "உன் ப்ரெண்ட் வர வரைக்கும் தனியா இருக்க வேண்டாம், என் கூட வா" விடா பிடியாக அழைத்து சென்றேன்.
[+] 6 users Like nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - by nathan19 - 20-06-2020, 11:49 PM



Users browsing this thread: 9 Guest(s)