26-02-2019, 06:28 PM
ண்டு வந்துவிட்டேன். காயத்திரி பத்திரிகையில் போடவேண்டய் பயர்களைச் சொன்னதும், பத்திரிக்கையை பிரிண்டிங்குக்கு கொடுத்து ப்ரூப் ரெடி ஆனதுதும் போன் பண்ணச் சொல்லிவிட்டு வந்தேன். அங்கே இருந்து போன் வந்ததும் அதனை எடுத்துக்கொண்டு நானும் சரசுவும் CEO வீட்டுக்கு இரவு 7 மணிக்கு போய் அதனைக் காண்பித்தேன். அதைப் பார்த்ததும், எப்படி அவங்க பெயர் எல்லாம் போட்டிருக்கீங்க அவங்களும் வராங்களா? என ஆச்சரியத்துடன் கேட்டார். நானும் சரசுவும் நாம அங்கே போன் போட்டு பேசியதைக் கூறியதும், ஆமா காயத்திரி சொன்னா எல்லோரும் கேட்பாங்க அதுவும் சரிதான். ரொம்ப சந்தோசம் என்றார். அவரிடம் விடை பெறும்போது ஐயா பத்திரிகை ரெடி ஆனதும் அதனை கோயிலுக்கு கொண்டு போய் பூஜை பண்ணிட்டு, அப்படியே டிரெஸ் எல்லாம் எடுக்கணும் அதற்கு நீங்களும் அம்மாவும் அவசியம் வரணும் என்று கூப்பிட்டோம். ஞாயிற்றுக் கிழமை என்றால் சௌகரியமாக இருக்கும் என்றார். அப்படியே வர ஞாயிற்றுக் கிழமை போவோம் என்று சொல்லிவிட்டு வந்தோம்.
ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே அவங்க வீட்டுக்கு போய் எல்லோரும் கோயிலுக்கு போய் பத்திரிக்கையை பூஜை பண்ணி எடுத்திட்டு, அப்படியே டிரெஸ் எடுக்க போனோம். CEO தான் கல்யாணத்தை நடத்திவைப்பவர் என்பதால், அவருக்கும் அவர் சம்சாரத்துக்கும் மகளுக்கு, டிரெஸ் எடுத்துக்கொண்டோம் அவர் மகளும் கூட வந்திருப்பதால் அவங்களுக்கு பிடித்த டிரஸ்ஸையே எடுத்தோம். மேலும் கல்யாணப் பொன்னுக்கும், அவள் தாயாருக்கும், எனக்கும் வேண்டிய டிரெஸ், நகைகளையும் எடுத்துக்கொண்டு மாலைதான் வீடு திரும்பினோம். அப்போதே நானும் சரசுவும் ஐசுவுடன் CEO மற்றும் அவர் மனைவி, மகளுக்கு எடுத்துக்கொண்ட டிரஸ்களையும் எடுத்துக்கொண்டு CEO வீட்டுக்கு போய், அவங்களுக்கு பத்திரிகை வைத்து கல்யாணத்தை சிறப்பாக நடத்திக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டு அழைத்தோம். அவங்களும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு ஐசுவின் அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டு என் மகளின் கல்யாணத்தை நடத்திவைத்தார். அந்த நன்றிக்காவது நான் இதனை நான்றாக நடத்திவைப்பேன். என்றார். அப்போது அவர் மாப்பிள்ளையும் கல்யாணத்து சமயம் இங்கே வரப்போகிறார் என்றார். அப்படி என்றால், அவர் பெற்றோருக்கும் பத்திரிக்கைவைத்து அழைக்கனும்ம்னு சொன்னேன். அதற்கு அடுத்த சண்டே போய் அழைப்போம் என்றார். அவர் மகளிடம், "அப்படி என்றால், நாளை நீ எங்களுடன் வந்து மாப்பிள்ளைக்கும் ஒரு செட் டிரஸ் எடுக்க நீதான் செலக்ட் பண்ணனும்என்றேன். அவளும் ஒத்துக்கொண்டாள்
.அடுத்த சனிக்கிழமை சரசுவுக்கு லீவு என்பதால், அன்றே செங்கல்பட்டுக்கு போவோம் என்றேன். இந்த விஷயத்தை காயத்திரிக்கும் போன் செய்து சொல்லிவிட்டு, அங்கே, ஒரு 15பேருக்கு வேஷ்டி சேலை ஜோடி தரவேண்டியிருக்குமா என்று கேட்டதற்கு, அவள் அப்படி எல்லாம் வாங்கிகொண்டு வரவேண்டாம், அதற்கு பதில் கொஞ்சம் பணத்தை பத்திரிக்கையுடன் வைத்துக்கொடுத்தால் போதும் என்றாள். அப்படி என்றால் நாங்க வர சனிக்கிழமை அங்கே வருகிறோம் என்று சொல்லிட்டு போனை வைத்தேன். இப்போ எல்லாம் நான்தான் அதிகம் காயத்திரியிடம் பேசுறேன், சரசு கொஞ்சமாவே பேசுவாள். அதனால், காயத்திரி நான் பேசினால் ரொம்ப சந்தோஷ அடைபவளாகவும் இருந்தாள். பிறகு, சம்பந்தியிடம் பேசி, அவர் மண்டபத்துக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் மற்ற நாதஸ்வரம், சாப்பாடு, வரவேற்பிற்கு வேண்டிய பலகாரங்கள், மாலைகள், பூக்கள் முதலியவற்றை நாங்க கவனித்துக் கொள்ளனும் என்று தீர்மானித்து, இவைகளை ஏற்பாடு செய்யும் காண்டிராட்டுகளை தேடி பிடித்து அவர்களிடம் தொகையை பேசி முடித்து அட்வான்சும் கொடுத்து முடித்தேன். பிறகு ஐசுவிடம் சொல்லி அவளுக்கு வேண்டிய டிரஸ், நகைகளைஎடுத்துக்கொள்ளச்சொன்னேன். அவளும் டெய்லி மாலை வந்ததும் நானும் ஐசுவும் போய் அவளுக்கு வேண்டிய சாமான்களைவாங்கிக்கொண்டுவந்தோம்.அப்படிப்போகும் போது ஒருநாள் CEO வின் மகளும் கூட வந்து அவளது கணவனுக்கும் டிரஸ் செலக்ட் பண்ணினாள்.
சனிக்கிழமை காலையிலேயே நானும் சரசுவும் ஒரு கால்டாக்ஸ்ஸியில் செங்கல்பட்டுக்கு போனோம். முன்னரே சொல்லியிருந்ததால் எங்களுக்காக எதிர்பார்த்து காத்திருந்தனர். நேர காயத்திரியின் வீட்டுக்கே போனோம். வழியில் எங்கள் காரைப் பார்த்தது நாங்க வந்துகொண்டிருக்கும் விஷயத்தை எப்படியோ முன்னாலே சென்று சிலர் காயத்திரியிடம் சொல்லியிருந்தனர். எனவே நாங்க போனது சிறப்பான வரவேற்பு இருந்தது. ஊரே கூடினாப்போல அவள் வீட்டில் காத்திருந்தனர். சென்றதும் எங்களுக்கு கைகால்கள் கழவ தண்ணீர் மொண்டு காயத்திரியே சேவை செய்தாள். நாம் எல்லோருக்கும் வணக்கம் கூறினோம் பெரியவர்கள் எங்களை வாழ்த்தினார்கள். அப்போ காயத்திரி சரசுவுக்கு ஏற்பட்ட விபத்தைப்பற்றியும் கூறி, அதற்கு நான் செய்த தொண்டினையும்கூறி எங்களை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினாள் பிறகு மதியசாப்பாடுநேரம்வந்து விட்டதால் எங்களுக்கு கரிக்கொளம்புடன், தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்திருந்தாள் சாப்பிட்டுமுடிந்ததும், அவளுக்கு முதலில்பத்திரிகை வைத்தோம்பத்திரிக்கையுடன் ரூ.5000 /- யும்கொடுத்தோம்அவளும் ரொம்ப சந்தோஷத்துடன் வாங்கிக்கொண்டாள். அதுபோலவே, அவள் கொழுந்தனார்கள் இருவருக்கும் பத்திரிகை தனித்தனியாக வைத்தோம், அதற்கு என் இப்படி நாங்க ஒரே குடும்பமாக இருக்கிறோம் ஒரு பத்திரிக்கையே போதும் என்றாள். ஆனால் நாங்க இருந்தாலும் தனித்தனியாக கூபிடுவதுதான் முறை என்று நான் கூறியதும் எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். அவர்களிடம் பாத்துக்கோங்க, அவங்க எங்களுக்கு தனித்தனியாக பத்திரிக்கையை வைத்துள்ளார்கள். அதுபோல நாமும் அவங்களுக்கு பண்ணனும் தெரிந்ததா? என்று அவர்களிடம் கூறினாள்.
பிறகு அவளே சொன்னால் இங்கே கூப்பிடவேண்டியவங்க கொஞ்ச நேரத்தில் இங்கேயே வந்துவிடுவார்கள் எல்லோருக்கும் இங்கேயே பத்திரிக்கையை கொடுத்துவிடலாம் என்றாள். அது சரிப்படாது. நாங்க நேரில் அவங்க அவங்க வீட்டுக்கு சென்று அழைப்பதுதான் முறை என்று சொல்லிட்டு ஒவ்வொருவர் வீட்டுக்கும் போனோம். அவங்க வீடுகளை காண்பிக்க காயத்திரியின் ரெண்டு கொழுந்தங்களும் உதவி செய்தனர். இப்படி எல்லோருக்கும் பத்த்ரிக்கை யுடன் ரூ.5000 /= வைத்து அழைத்தோம் பத்திரிகை கொடுத்து முடிய மாலை 6மணி வரை ஆகிவிட்டது. பின்னர், கயத்திரியிடம் ரெண்டு நாளுக்கு முன்னாடியே வந்துவிடுடி என்று கூறி நாம் சென்னைக்கு திரும்பினோம்.