60லும் ஆசை வந்தது!!!(completed)
#37
அடுத்து கல்யாணப் பத்திரிக்கை மாடலை வாத்தியாரைக்கொண்டு எழதி       வாங்கிக்கொள்ளலாம் என்று தீர்மானித்து அதற்கு மறுநாளே வாத்தியாரைப் போய்       பார்ப்பது என முடிவு பண்ணினோம். எல்லாம் நல்லபடியாக முடிந்து சம்மந்தி       வீட்டாரும் CEO குடும்பமும் சந்தோஷத்துடனே போனார்கள். அவர்கள் சென்ற பின்       சரசுவிடம் பெண் வீட்டார் அழைப்பிதழை யார் பேரில் போடுவது என்றதற்குசரசு       சொன்னாள்பார்க்கப்போனால் எங்க குடும்பத்தின் ரெண்டு வகையிலும் இப்போதுள்ள       பெரியவர் CEO தான் என்றாள் அப்போ அவர் பெயரையே போட்டுவிடுவோம் என்றேன்.       மேலும் அவள் சொன்னாள்தனக்கு சொந்தமான பெரியம்மா மாமா வகையில்       செங்கல்பட்டில் நிறைய உறவினர்கள் இருப்பதாகவும், CEO வின் பெண்ணுக்கு       கல்யாணத்திற்கு முன்னாள் ஒரு விசேஷத்தில்நடந்த சண்டையில் CEO அந்த பெரியாம்மா மற்றும் மாமா குடும்பத்தாரைப் பற்றி தவறாகக் கூறஅப்போ வெளிநடப்பு செய்தவங்க அவரது மகளின் கல்யாணத்திற்கும் அவங்க வரவில்லைஎன் அவளது கணவன் இறந்த பொது கூட அந்த பெரியம்மா மகள் மட்டும்வந்தாள்வேறு யாரும் வரவில்லை என்றாள்.
      அதற்கு நான் சொன்னேன்இப்போ அவங்களை எப்படியாவது சமாதானம் பண்ணி வரவழைத்து விடவேண்டும் என்றேன். அவளுக்கும் விருப்பந்தான் ஆனால் வருவார்களா என்பதே சந்தேகம் என்றாள்.
     அப்போ நான் கேட்டேன்அவளது கணவன் இறந்தபோது அவள் பெரியம்மாவின் பெண் வந்ததாகச் சொன்னியே அவள் மூலம் நாம இப்போ இதற்கே ஏதாவது செய்யலாமே என்றேன். ஆமாங்கஅவள் எனது ஆருயிர் தோழியும் கூட என்றாள். சரி அப்போ அவளுக்கு தொடர்புகொண்டு பேசிப்பாரு என்றேன். அவளது போன் நம்பரைத் தேடி கண்டுபிடித்து போன் செய்தாள். அவளுக்கும் ஒரே ஆச்சரியம். இவ்வளவு நாள் இந்த தொடர்பும் இல்லாமல் இருந்தும்இப்போ நினைத்துக்கொண்டு போன் செய்கிறாளே என்று ரொம்ப மகிழ்ச்சி என்றாள். மேலும் சரசுவுக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றியும் கேட்டாள். எப்படி அக்கா உங்களுக்கு தெரியும் என்றதற்குஉன்ஆபீசில் வேலைபாக்கும் ஒரு பியூன் மூலம் தெரிந்து கொண்டதாகச் சொன்னாள். அப்போ என் உயிர் போயிரக்கனும்டி எதோ நான் செய்த புண்ணியத்தால்ஒருவர்      தெய்வாதீனமாகவந்து காப்பாத்தி விட்டாரடிமேலும் அவர்தான் எனக்கு சகலமும்       உதவியாயிருந்து இதுவரை காப்பாத்தி வராரடி என்றாள். அப்படியா சந்தோஷமாக       இருக்குடிஉன்னைக் காப்பாற்றியவரை பார்க்கணும் போல இருக்குடி அவரைப்       பார்த்து நானறி சொல்லன்னும்டி என்றாள். அவர் இப்போது இங்கேயே இருக்கிறார்       என்று சொல்ல என்னிடம் போன் கொடுக்கும்படி கூறினாள். அதன்படி நான் போனில்       தொடரஅவளும் எனக்கு நன்றி கூறினாள். அப்போ நான் கூறினேன்,"இப்போ போன்       செய்வதற்கான காரணத்தைக் கூறிஇந்த கல்யாணத்தை நீங்க தான் முன்னிருந்து       நடத்தி வைக்கணும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அவள் அந்த CEO தான்       இப்போதுள்ள பெரியார். கல்யாணப்பத்ரிக்கையில் அவர் பேர் தான் வரவேண்டும்       என்றாள். அது சரிதான் ஆனால் அவர் பெயரை மட்டும் போட்டால் நீங்க அங்கே உள்ள       மற்ற உறவினர்கள் எல்லோரும் வருவீங்களா என்று கேட்டேன். அதற்கு அவள்       சங்கடம்தான் என்றாள். அதற்கு நான் சொன்னேன்பத்திரிகையில்பெரியப்பா      சித்தப்பாமாமான்கள் பெயர் எல்லாம் போடும் பழக்கம் உண்டல்லவாஅப்படி அங்கே       உள்ள உறவினர்களின் பயறையும் போட்டு அவங்களும் இதில் இந்த அழைப்பில்       பங்குகொள்கிறார்கள் என்று போட்டு அச்சடித்தால் அவங்களும் வருவார்கள் அல்லவா      என்று கேட்டேன். ஆமாங்க அப்படி போட்டால் அவசியம் எல்லோரும் வரவங்க என்றாள்.
      நான் சொன்னேன்சரசுக்கு நீ தான் நெருங்கிய தோழிமேலும்அக்கனுரையில்       உள்ளவள். எனவே நீ சரசுவின் பேரில் அங்கே எல்லோரிடமும்பேசிஇப்போ கணவனில்லாத உன் தோழியின் சார்பில் நீயே இப்போ இருந்து இந்த கல்யாணத்தை நடத்தி தரனும் என்றேன். ஐயாநீங்களே இவ்வளவு தூரம் கேட்கும் போது நான் செய்யமாட்டேனாசெய்யுறேன் ஐயாஒரு ரெண்டு நாள் டயம்கொடுங்க இங்கே எல்லோரிடமும் எப்படி பேசணுமோ அப்படி பேசி இவங்களை சம்மதிக்க வைத்துவிட்டு நானே சொல்லுறேன் பிறகு மற்றபடி பேசிக்கொள்வோம் என்றாள். "எல்லாம் இப்போ உன் கையில்தான் இருக்குமேலும் நீதான் அங்கே உன் மாமாவுக்குப் பிறகு எல்லாத்தையும் கவனித்துக்கொள்பவள்நீ சொன்னாள் யாரும் தட்ட மாட்டாங்க எனவேநீ போடும் உத்தரவு அவங்களுக்கு சம்மதம் சொல்ல வைக்கணும் என்று கூறி போனை வைத்தேன்

      பிறகு சரசுவிடம் அவள் தோழியைப் பற்றி விசாரித்தேன். அவள் பெரியம்மாவுக்கு ஒரே பெண்பெயர் காயத்திரி. இவளுக்கு அவளுக்கும் 5வயதுதான் அவள் பெரியவள் என்பதால்அவங்க மாமனுக்கு பிறந்த பெரிய பையனைக் கட்டி வைத்தாங்க. அவங்க பாட்டிஅதாவது மாமாவின் அம்மா சாகக்கிடைக்கையில் அந்த திருமணத்தையும் பார்த்துவிடவேண்டும் என்றதால்அவளுக்கு, 14 வயதாகும் பொதுஅவள் மாமன் பையனுக்கு 16 வயதுதான் இருவருக்கும் கல்யாணம் நடந்ததுபாட்டியின் தொந்தரவின் பெயரில் ஆனால் ஜோசியர் இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் செய்ய 6மாதம் போக வேண்டும் என்றதால்கல்யாணம் நடந்தும் கன்னியாக இருந்தாள். ஒரு மாதம் போனதும் அந்த ஊரில் நடந்த ஒரு திருவிழாவின் போது நடந்த வெடி விபத்தில்அந்த பையன் மீது விழுந்த ஒரு மின்சாரக் கம்பியினால்அவன் மீது மின்சாரம் பாய்ந்து உடனே அவன் இறந்து விட்டான். அன்றிலிருந்து இவள் கைம்பெண்ணாகவே இருந்து வருகிறாள். அவள் கணவன் இறந்த பின்னும் வேறே திருமணத்தை யாரும் செய்து வைக்கவும் இல்லை. சீதனமாக இவரது அப்பா தன்னிடம் இருந்த ஏக்கர் நிலத்தையும் அவங்களுக்கே கொடுத்துவிட்டார். கணவன் இறந்தபின் இவளேதன் மாமாவுக்கு மூத்த பையனாக இருந்தந்து நிலபுலன்களையும் கவனித்துக்கொண்டு அடுத்து இருந்த ரெண்டு கொழுந்தனார்களையும் திருமணம் செய்து வைத்து அவங்களுக்கு பிறந்த குழந்தைகளையே தன் குழந்தைகளாக பாவித்தி வளர்த்து வருகிறாள். இதுதான் காயத்திரியின் கதை என்றாள்
      ரெண்டு நாளுக்கு பிறகுகாயத்திரியே போன் செய்தாள்எல்லோரும்       சம்மதித்துவிட்டனர் என்றாள். அப்போ சரிபத்திரிகையில் யார் பெயர் போடுறது       என்று கேட்டதற்குஎல்லா பெயர்களையும் சொல்ல நான் குறித்துக்கொண்டு "சரி      பத்திரிக்கையை அடித்து முடிந்த பிறகு அங்கே நேரில் வந்து அழைக்கிறோம் என்று       கூறி போனை வைத்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: 60லும் ஆசை வந்தது!!! - by johnypowas - 26-02-2019, 06:27 PM



Users browsing this thread: 6 Guest(s)