Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
கடந்த இரண்டு  ஆண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளைக் கொத்துபரோட்டாவாகப் போட்டு நையாண்டி செய்யும் துணுக்குத் தோரணம்தான் படம். தன்னை வளர்த்துக்கொள்ள நினைக்கும் அரசியல்வாதி எப்படியெல்லாம் ஏமாற்றுவார்; என்னென்ன தகிடுதத்தங்கள் செய்வார்  என்று அடுக்கிக் காட்டுகிறார் இயக்குநர் கே.ஆர்.பிரபு.  ஆனால், அதில் ‘ஸ்பூஃப்’ பாணிக்குத் தேவையான கூடுதல் கற்பனை வளம் இல்லாமல் ‘ரா’வான காமெடி ஆக்கியிருக்கிறார்கள். மருத்துவமனை யில் அமைச்சர்கள் தங்குவது, முதல்வர் இறப்பது, நள்ளிரவு பதவியேற்பு, இடைத்தேர்தல், ஆற்றில் தெர்மோகோல் விடுவது, 20 ரூபாய் டோக்கன் என சமகால அரசியல் நிகழ்வுகளைக் காட்டும்போது தியேட்டரில் சிரிப்பலைக்குப் பஞ்சம் இல்லை.
தேர்தல் வேலை செய்யும் கார்ப்பரேட்டுகள் சமூக வலைதளங்களில் செய்யும் ஜித்து வேலைகளையும் தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குநர். சமூக வலைதளங்களில் வைரலாகும் டிரெண்ட்டிங் விஷயங்களைக் கலாய்த்திருப்பதும் நேர்த்தி.
‘மீம்ஸ் கிரியேட்டர்கள் நினைத் தால் திருவள்ளுவரைக்கூட தாலிபன் ஆக்கி விடுவார்கள்’ என்றும் ‘யார் பணம் கொடுத்தாலும் கார்ப்பரேட்டுகள் வேலை செய்வார்கள்’ என்றும் வருகிற வசனங்கள் அப்படியே யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.
வெறுமனவே அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இல்லாமல் மெசேஜ் சொல்ல வேண் டும் என்பதற்காக கிளைமாக்ஸில் அறிவுரைகளை அள்ளி விடுவது சலிப்பூட்டுகிறது. காமெடி என்ற பெயரில் பில்ட்-அப் செய்யப்பட் டிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு காட்சியில் போதிய புத்தி சாலித்தனம் இல்லை.
ஊரை அடித்து உலையில் போட்டாவது பெரிய பதவிக்கு வரத் துடிக்கும் ஒரு பலே கவுன்சிலருக்கு, அவருடைய சொந்த தொகுதியிலேயே வருடக்கணக் கானக் கோலோச்சிய ஜெ.கே. ரித்தீஷைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பது எந்த ஊர் லாஜிக்கோ!
திடீர் முதல்வராகும் ஜி.ராம் குமாருக்கு தன் கட்சியையே பகைத்துக் கொண்டு ஆர்ஜே பாலாஜிக்கு ஸீட் தர வேண்டிய அவசியம் என்ன என்பதும் நம்பும்படியாக சொல்லப்பட வில்லை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்ஜே பாலாஜி முழு எனர்ஜி யுடன் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு அழகாகப் பொருந்துகிறார். டுபாகூர் அரசியல்வாதிக்கான அவரது உடல் மொழியும் கச்சிதம். அனால், ஏன் இப்படி பல இடங்களில் காது ஜவ்வைக் கிழிக்கிற மாதிரி கத்துகிறார்? அதுவும் போதாமல், கற்பனையான ஒரு நாளிதழின் தலைப்பை ‘சிலேடை’ பண்ணி அவர் சொல்கிற வார்த்தையில் காது கூசுகிறது.
நாயகியாக வரும் பிரியா ஆனந்த் தேர்தல் வேலை செய்யும் கார்ப்பரேட்டாக வருகிறார். அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக அறிமுகமாகியிருக்கும் நாஞ்சில் சம்பத் நடிக்க வாய்ப்பு குறைவு தான் என்றாலும், படத்தில் திருக் குறள் சொல்லி சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். முதல்வராக வரும் ராம்குமார் சிவாஜி, உதவியாளராக வரும் மயில்சாமி ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.
படத்துக்கு இசை லியேன் ஜேம்ஸ். ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...’ என்ற ரீமிக்ஸ் பாடல் மட்டும் மனதில் நிற்கிறது.
எத்தனைதான் ஓடி உழைத்தா லும், ஒரே ஒரு சறுக்கலை வைத்தே ஆளை காலி செய்வ தற்கு ஒரு கூட்டம் காத்திருப் பதும், அதற்கு லைக் - ஷேர் போட்டு கொண்டாடும் மக்கள் மனோபாவத்தையும் நறுக்கென சொன்ன விதத்தில் கதை, திரைக் கதை, வசனகர்த்தாவாகவும்... நடிகராகவும் ஆர்ஜே பாலாஜி ஜெயித்துவிட்டார்.
அதேசமயம், தட் ஒன் ட்வெண்டி ருப்பீஸ் டிக்கெட், பாப்கார்ன் பக்கெட், பார்க்கிங் கொள்ளை எல்லாம் சேர்த்து கொடுக்கிற காசுக்கு எல்கேஜி தகுமா என்பதை ஆர்ஜே பாலாஜிதான் சொல்ல வேண்
டும்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 26-02-2019, 06:05 PM



Users browsing this thread: 4 Guest(s)