Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
திரை விமர்சனம் - எல்கேஜி

[Image: 1cb018bdP2012667mrjpg]

பிழைக்கத் தெரியாத’ அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் மகன் (லால்குடி கருப்பையா காந்தி - எல்கேஜி) ஆர்ஜே பாலாஜி. வார்டு கவுன் சிலராக இருக்கிறார். தன் அப்பாவைப் போல இல்லாமல், எகிடுதகிடு ஏதாவது செய்து பெரிய பதவியைப் பிடிப்பதே லட்சியமாகக் கொண்டிருக்கிறார். அந்தத் தருணத்தில் முதல்வருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோகிறார். அந்தப் பதவிக்கு ஜி.ராம்குமார் வருகிறார். இடைத்தேர் தலில் போட்டியிட விரும் பும் ஆர்ஜே பாலாஜி, தேர்
தலுக்கு ஆட்களை புரமோட் செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தை அணுகுகிறார். அவர்கள் செய்யும் தகிடுதத்தத்தால் ஆர்ஜே பாலாஜிக்கு இடைத்தேர்தலில் சீட்டு கிடைக்கிறது. ஆனால், அவ ருக்குப் போட்டியாக மக்கள் ஆதரவு பெற்ற ஜெ.கே.ரித்தீஷ் களத்தில் குதிக்கிறார். இறுதியில் யார் வெற்றி பெற்றது? ஆர்ஜே பாலாஜியின் லட்சியம் நிறைவேறியதா? இதுதான் எல்.கே.ஜி. படத்தின் கதை. நண்பர்களுடன் சேர்ந்து இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஆர்ஜே பாலாஜி.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 26-02-2019, 06:04 PM



Users browsing this thread: 13 Guest(s)