Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
முதல் டி-20: தோனி செய்த மோசமான சாதனை... ரசிகர்கள் அதிருப்தி...!
#MSDhoni scripts an unwanted record first T20I v Australia | உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தோனியின் மந்தமான ஆட்டம் இந்திய அணிக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. #INDvAUS

[Image: msd-1.jpg]

இரு அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி நேற்று (பிப்.24) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. அடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

[Image: Australia-Team-ICC.jpg]ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி. (ICC)



இந்தியா சார்பில் அதிகபட்சமாக, தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக, தோனி 37 பந்துகளைச் சந்தித்து 29 ரன்கள் எடுத்திருந்தார். அதில், ஒரே ஒரு சிக்சர் அடித்திருந்தார். அவர் ஸ்ட்ரைக் ரேட் 78.38.

தோனியின் மந்தமான ஆட்டத்தால் ரன்களை அதிக அளவு குவிக்க முடியவில்லை. விக்கெட்டுகள் சரிந்தாலும், ஆடுகளம் மோசமாக இருந்தாலும் அவர் பந்துகளை அடித்து ஆடாமல் விட்டது அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 26-02-2019, 05:56 PM



Users browsing this thread: 103 Guest(s)