Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இந்திய விமானப்படையின் அதிரடியில் அழிந்த பயங்கரவாத முகாமின் முக்கிய தகவல்...!

[Image: 201902261604384136_Picture-of-JeM-facili...SECVPF.gif]

இந்திய விமானப்படை பாகிஸ்தானில் அழித்த பயங்கரவாத முகாம்களில் முக்கிய முகாமான பால்கோட் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பால்கோட்டில் ஜெய்ஷ் முகாம் தகர்க்கப்பட்டதன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

[Image: 201902261604384136_jem2602201902._L_styvpf.gif]

முகாமில் அதிகளவு வெடிப்பொருட்கள் இருந்தது. 200-க்கும் அதிகமான ஏ.கே. 47 துப்பாக்கிகள் இருந்தது. கணக்கில் அடங்காத கையெறி குண்டுகள், வெடிப்பொருட்கள் இருந்தது என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது. இப்போது இவை அழிக்கப்பட்டுள்ளது. பால்கோட் பகுதியில் ஏராளமான பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் மற்றும் தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தேசியக் கொடிகள் வரையப்பட்டு இருந்தது எனவும் தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகள் மவுலானா அம்மார், மலானா தல்ஹா சாயிப் உள்ளிட்டோர் குறி வைக்கப்பட்டதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 26-02-2019, 05:48 PM



Users browsing this thread: 105 Guest(s)