Romance அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
#24
4

அவள் சுய நினைவின்றி படுத்து இருந்தாள், அவளை இரண்டு வருடம் கழித்து இப்போது தான் பார்க்கிறேன், விபத்தாலோ, அல்லது வேறு எதனாலோ முற்றிலும் தளர்ந்து இருந்தாள். நிறைய மாறி இருந்தாள், நான் அவளை எப்போதும் சிறு பெண்ணாகவே எண்ணி இருந்தேன், அன்று ஸ்டேஷனில் அவள் பேசிய விதம் புதிது என்றால் இன்று அவள் ஆளே புதியவளாக, வேறு ஒரு பெண்ணாக தெரிந்தாள். காலமும் அனுபவங்களும் ஆளை மாற்றும் என்பது உண்மை தான்.


ஒரு காலில் மட்டும் கட்டு முட்டி வரை, அதே போல ஒரு கையில் மட்டும் கட்டு, சில சிராய்ப்புகள், வேறு எதுவும் காயம் தெரியவில்லை. எழுந்து வெளியே அமர்ந்து இருந்தவனிடம் நன்றி சொன்னேன்.

"பரவால்ல சார், இதுல என்ன இருக்கு, actually  நான் கொஞ்சம் பயந்துட்டேன், அந்த பொண்ணு மயக்கத்தில் இருக்கு, போன் பண்ணினா யாரும் எடுக்கவே இல்லை, எடுத்தவங்க கேட்டுட்டு கட் பண்றாங்க, என்ன பண்றது ஒன்னும் புரியல" என்றவன் தொடர்ந்து "நீங்க என்ன சார் வேணும்"

"நான் அந்த பொண்ணுக்கு uncle" 

"ஆனா சார் அந்த பொண்ணு போன் ல அப்பா, அம்மா நம்பர் க்கு எல்லாம் பண்ணினேன் சார், அப்பா எடுக்கலை, அம்மா எடுத்து இந்த மாதிரி சொல்லும் போது கட் பண்ணிட்டாங்க" 

"உம், சின்ன ஃபேமிலி பிராப்ளம், சரி எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு?" பேச்சை மாற்றினேன்.

"கார்ல அடி பட்டுடுச்சு, லேசான காயம் தான், ஆனா இன்னொன்னு சார்?" என தயங்கினான்.

"அந்த பொண்ணு அடி பட்டது என் வண்டி ல தான். என் தப்பு ஏதும் இல்லை, ஆக்ஸிடென்ட் ஆன உடனே கொண்டு வந்து சேர்த்துட்டென், இங்க ஹாஸ்பிடல் ல தான் தெரியும், பொண்ணு ஆக்சிடென்ட் ஆரதுக்கு முன்ன தூக்க மாத்திரை எடுத்து இருக்கு "

"என்னது" அதிர்ந்து போய் கேட்டேன்.

"சார், பதட்டப் படாதீங்க, இப்ப எல்லாம் fine. அந்த பொண்ணு எதோ சிக்கல்ல கஷ்டத்துல இருக்கு, கொஞ்சம் பார்த்துக்கங்க சார்"

நான் இன்னும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க அவன் திரும்ப சொன்னான்.

"சார், அவங்க அப்பா அம்மாக்கு தகவல் சொல்லுங்க சார், அவங்க வந்தா அந்த பொண்ணுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும், பாவம் இந்த வயசுல தற்கொலை எண்ணம் வரது எவ்ளோ கொடுமை சார்"

"நான் பார்த்துக்கறேன் பா, ரொம்ப தேங்க்ஸ் உன் உதவிக்கு" 
திடீர் என யோசனை வர கேட்டேன், "இல்லை அவ சூசைடு டிரை பண்ணது ஏதும் கேஸ்" என திணறினேன்.

"சார், அது ஏதும் பிரச்சினை இல்லை, எனக்கு தெரிஞ்ச கிளினிக் தான் இது. இது மைனர் ஆக்சிடென்ட் கேஸ் மட்டும் தான் official ஆ" என்றான்.

"ரொம்ப தேங்க்ஸ் பா, உண்மையாவே நீ நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கே" நெகிழ்ந்து சொன்னேன். 

"இதுல என்ன சார் இருக்கு, பார்த்துக்குங்க சார், நான் நாளைக்கு பார்க்கிறேன்"  என கிளம்பினான்.

என்ன நினைத்தானோ, "சார், வாங்க, கீழே டாக்டரை ஒரு தரம் பார்த்துடலாம், உங்களுக்கும் ஒரு தெளிவா இருக்கும்"

கீழே போனோம், ஒரு பத்து நிமிடம் காத்திருந்து டாக்டரை பார்த்தோம். டாக்டர் அவனுக்கு தெரிந்தவர் போல சிரித்த படி தலை அசைத்தார்.

"சார், இவரு அந்த ஆக்சிடென்ட் ஆன பொண்ணுக்கு uncle. உங்களை பார்க்க கூட்டி வந்தேன்"

"அடி ஏதும் பலமா இல்லை, கொஞ்சம் செக் எல்லாம் பண்ணிட்டு நாளைக்கு சாயந்திரம் அல்லது ஒரு நாள் கழிச்சு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்"

"பொண்ணு மாத்திரை சாப்பிட்டது சொன்னாரா?" டாக்டர் என்னைப் பார்த்து கேட்டார்.

நான் தலை அசைத்தேன். "பொண்ணு என்ன பிரச்சினை தெரியல, லக்கிலி ரொம்ப எடுக்கல, நீங்க அவங்க பேரன்ட்ஸ் க்கு தகவல் சொல்லுங்க, நான் கேஸ் ஹிஸ்டரி ல ஏதும் இதைப் பத்தி எழுதல, நீங்க விரும்பினால் நான் டாக்டர் ரெஃபர் பண்றேன் கவுன்சிலிங் பண்ண."

"உம், நான் பொண்ணு கிட்ட பேசிப் பார்த்திட்டு சொல்றேன் சார்" என்றேன்.


"சரி, காலைல பார்க்கலாம், ரூம்ல கூட ஒருத்தர் தங்கலாம், காலைல கொஞ்சம் எக்ஸ்ரே பாத்துட்டு சாயந்திரம் கூட வேணும்னா டிஸ்சார்ஜ் பண்ணிடலாம், இல்லை நாளன்னிக்கு பகல்ல பண்ணிடலாம் சார்" 

"ஓகே சார்"

அவனும் நாளை வருவதாக சொல்லி கிளம்பினான். அவனின் போன் நம்பர் கொடுத்து சென்றான். 

"ஏதாச்சும் வேணும்னா கீழே கால் பண்ணுங்க, ரூம்ல போன் கீழே எல்லா நம்பரும் இருக்கு, நைட் ஃபுல்லா அட்டெண்ட் பண்ணுவாங்க, அவங்களே செக் ரெகுலரா டைம் க்கு பண்ணுவாங்க"

ரூமில் சென்று அமர்ந்து அவளையே பார்த்தேன். சுமதியின் சாயல் அப்படியே இவளுக்கு உண்டு, அவளை விட கொஞ்சம் உயரம், நிறமும் கூட. ஏன் இந்த வயதில் தற்கொலை எண்ணம்?? 20 வயதில் ஓடிப் போய் கல்யாணம் செய்ய தைரியம் கொண்ட பெண், அத்தனை வருட குடும்ப உறவுகளை உதற துணிச்சல் கொண்ட பெண், என்ன ஆயிற்று இந்த 2 வருடங்களில்??

அப்பா, அம்மா இன்னும் கோபத்தில் இருக்கிறார்கள் சரி, அவன் எங்கே?? இவளைத் திருமணம் செய்தவன்?? அவன் பெயர் கூட தெரிந்து கொள்ள வில்லையே?? இங்கே திருப்பூரில் என்ன செய்கிறாள் இவள்?? 

தூங் கும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தேன், அப்படியே தூங்கிப் போனேன். நடுவில் நர்ஸ் வழக்கமாக வந்து செக் செய்து போனது எல்லாம் கண் மூடி இருந்தும் உணர்ந்தேன்.

காலையில் ஒரு ஐந்தரை அளவில் எழுந்து முகம் கழுவி வாயைக் கொப்பளித்து பின் கீழே வாசல் அருகேயே இருந்த ஹோட்டலில் ஒரு காபி, உண்மையாகவே அற்புதமாக இருந்தது. சாலை அமைதியாக இருக்க மேலே சென்றேன்.

அவள் விழித்து இருந்தாள், அப்போது தான் விழித்தாள் போல, எங்கே எப்படி என்னும் குழப்பம் இருந்தது, நான் உள்ளே நுழைய
ஆச்சர்யமாக என்னைப் பார்த்த உடன் புன்னகைத்து எழ முயற்சித்தாள். முடிய வில்லை.

"வாங்க, எப்போ வந்தீங்க?" என கேட்டாள், அன்று ஸ்டேஷனிலும் கூட என்னைக் கண்டு அவள் கேட்ட முதல் கேள்வி.

"நான் நேத்து நைட்டே இங்க வந்துட்டேன்" லேசாக சிரித்தேன்.

"சாரி, என்னால எல்லாருக்கும் கஷ்டம், உங்களுக்கும்"

"அது விடு, என்னம்மா இதுலாம்" என்றேன்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக என்னைப் பார்த்தாள், பின் உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள்.
[+] 4 users Like nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - by nathan19 - 16-06-2020, 03:49 PM



Users browsing this thread: 7 Guest(s)