26-02-2019, 10:34 AM
கதவருகில் நின்று உள்ளே எட்டி பார்த்த பவானி " சத்யா நீ மான்சியை விரும்பறே அப்படின்னு எனக்கு தெரியும் ... நானும் கொஞ்ச நாளா உன்னையும் அவளையும் கவனிச்சுகிட்டு தான் இருக்கேன் ... இதுதான் சத்யா உனக்கு சந்தர்ப்பம் உன் மனசை அவளுக்கு புரியவை ... நான் காலையில வந்து பார்க்கிறேன்" என்று ரகசியமாக பவானி சொல்லிவிட்டு போக
சத்யன் முகத்தில் மகிழ்ச்சியும் உதட்டில் சிரிப்புமாக கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தான் ... நான் என்ன மான்சியை காதலிக்கிறேன் என்று நெற்றியில் எழுதியா ஒட்டி வைத்துள்ளேன் ... இந்தம்மா இவ்வளவு எளிதாக கண்டுபிடித்து விட்டாளே என்று நினைத்தான்
கதவை அடைத்து விட்டு உள்ளே வந்த சத்யன் மான்சியின் எதிர் சோபாவில் அமர்ந்து அவளையே சிறிதுநேரம் பார்த்தான்
மான்சி தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.... அவள் புடவையில் இருந்த ரத்த கறைகள காய்ந்து போயிருக்க ... ரொம்பவும் களைத்து சோர்ந்து போயிருந்தாள்
“மான்சி ” என்று சத்யன் அழைக்க அவளிடமிருந்து சிறிதுநேரம் கழித்தே “ம்” என்ற ஒரு வார்த்தை பதிலாக வந்தது
“ அந்த பையை தூக்கி பிடுங்க வந்தவன் முகத்தில் வீசியடிச்சிருக்கலாம்ல... அதை விட்டுட்டு என்ன மான்சி இதெல்லாம்” என சத்யன் மென்மையான குரலில் கேட்க
“ அதுலதான் நேத்து என் சம்பளம்... வீட்டு சாவி ... என் மொபைல் போன் எல்லாம் இருந்தது... அதான் அதை அவனுக்கு குடுக்க கூடாதுன்னு எவ்வளவோ போராடினேன் கடைசியில இப்படி ஆயிருச்சு” என்று தன் கையை அவன் முன் நீட்டி காண்பித்து மெதுவாக பேசினாள் மான்சி
சத்யன் நீட்டிய அவளின் கட்டு போட்டிருந்த கையின் விரல்நுனியை பற்றியவாறு “நீ சுலபமா சொல்லிட்ட மான்சி ஆனா வேற ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்றது... போலீஸ்காரர் போன் பண்ணப்போ என் உயிரே என்கிட்டே இல்லை மான்சி” என்று சத்யன் கூற
“நானும் அவன் கேட்டவுடனே பேக்கை குடுத்துடலாம்ன்னு தான் நெனைச்சேன்.... ஆனா ஏற்கனேவே எல்லாரும் என்னை பயந்தவன்னு சொல்லுவாங்க அப்புறமா இதுவேற வெளிய தெரிஞ்சா இன்னும் அதிகமா கிண்டல் பண்ணுவாங்க... அதனாலதான் பேக்கை கொடுக்காம போராடினேன்” என்றாள் மான்சி
சத்யனுக்கு அதை கேட்டதும் சிரிப்பு வந்தது... தன் கையில் இருந்த அவள் விரல்களை வருடியபடியே “பரவாயில்லை ரொம்ப வீரமான போராட்டம் தான் .... ஏன்னா உள்ளங்கையில் காயம் பட்டுருக்கே அதான் சொன்னேன்” சத்யன் மெல்லிய புன்னகையுடன் சொல்ல
“ அவன் கத்தியால குத்த வந்தப்போ நான் முன்னாடி கையை நீட்டி தடுத்தேன் அதான் கையில கிழிச்சிட்டான் “ என மான்சி சொன்னதும்
இதை கேட்டதும் சத்யனிடம் அதுவரை இருந்த சிரிப்பு போன இடம் தெரியவில்லை.... அந்த போராட்டத்தில் கத்தி வேறெங்காவது பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கும் போதே சத்யனுக்கு இதயம் அதன் இடத்தில் இருந்து நழுவி இடமாறுவது போல் இருக்க மான்சியின் விரல்களை அழுத்தமாக பற்றிக்கொண்டான்
அங்கே இருவரின் மவுனத்தால் சூழ்நிலை இறுக்கமாவது போல் இருக்க சத்யன் அதை கலைக்கும் முயற்ச்சியாக “ எல்லாம் சரி என்னோட போன் நம்பர் எப்படி போலீஸ்க்கு தெரிஞ்சது” என கேட்க
“ஏன் நான்தான் சொன்னேன்” என்றாள் மான்சி
“ உனக்கு எப்படி தெரியும்... உன் செல் வேற பேக்லயே மிஸ் ஆயிருச்சு அப்புறமா எப்படி என் நம்பரை போலீஸ் கிட்ட சொன்ன” என்று சத்யன் அவள் கண்களை பார்த்துக்கொண்டே கேட்டான்
இதற்கு அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை ...மான்சி சட்டெனத் தலையை கவிழ்ந்து கொண்டாள்
“ சொல்லு மான்சி,.. என் நம்பரை மனப்பாடம் பண்ணி வச்சிருந்தயா... ஏன் ” என்றான் சத்யன் விடாமல்
மான்சி அவனை நிமிர்ந்து பார்த்து “ எனக்கு கை வலிக்குது வேற டிரஸ் மாத்திகிட்டு தூங்கனும்” என்று மான்சி சம்மந்தமில்லாமல் பதில் சொன்னாள்