26-02-2019, 10:33 AM
மான்சி முதலில் திமிறினாலும் பிறகு தன்னை அணைத்தது சத்யன் என்றதும் ... அவன் மார்பில் இருந்த தன் முகத்தை நிமிர்த்தி சத்யனை பார்த்து கண்ணீருடன் " ரொம்ப வலிக்குது" என்று சொல்ல
சத்யனுக்கு என்ன சொல்வது என்ன செய்வது என்று புரியாமல் நர்ஸ்ஸிடம் " என்ன மேடம் அப்படி தையல் போடுறீங்க ரொம்ப வலிக்குமே ... மயக்க மருந்து ஏதாவது குடுத்துட்டு பண்ணகூடாதா " என்று கோபமாக கேட்க
" என்ன சார் என்னா ஊர்லயிருந்து வந்திருக்கீங்க இதுக்குப்போய் மயக்கம் குடுப்பாங்களா.... சும்மா ஒரு எட்டு தையல்தான் சார் இன்னும் கொஞ்சநேரத்தில் ஆயிடும்" என்று சொன்ன நர்ஸ் தனது வேலையில் மும்முரமாக இருக்க
சத்யன் மான்சியை பார்த்தான் ... அவள் பல்லை கடித்து வலியை பொறுத்தாள்... அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துபடியே இருக்க ...
சத்யன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து அவள் கண்ணீரை துடைத்துவிட்டு... தையல் போடுவதை அவள் பார்க்காதவாறு முகத்தை திருப்பி தன் மார்போடு அணைத்து பிடித்துக்கொண்டு அவள் உச்சந்தலையில் தனது தாடையை வைத்துக்கொண்டான்
மான்சியி் வலது உள்ளங்கையின் நடுவில் காயம் நல்ல ஆழமாக பிளந்து கொண்டு இருந்தது ... நர்ஸ் உள்ளங்கையின் இரண்டு பக்க சதையையும் இழுத்து வைத்து தையல் போட... மான்சியின் ரத்தம் தரையில் சொட்டியது
அதை பார்த்த சத்யனுக்கு கண்களில் கண்ணீர் வந்தது அவள் தலையில் தன் முகத்தை வைத்துக்கொண்டு சத்யன் கண்ணீர் விட ..
மான்சி தன் தலையில் பட்ட ஈரத்தால் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் ... அவள் நிமிர்ந்த வேகத்தில் சத்யனின் கண்ணீர் அவள் கன்னத்தில் விழுந்து வழிந்தது ...
மான்சி எதுவும் சொல்லத் தோனாமல் அவன் முகத்தையோ பார்த்தாள் ... சத்யனின் கண்ணீரை பார்த்ததும் அவளுக்கு தன் வலி மறந்துவிட்டது
சத்யனின் கண்ணீரை காணப் பொறுக்காமல் அந்த வானமும் கண்ணீர் வடித்தது
சத்யன் அணைப்பில் தன் வலியை மறந்த மான்சி அதன்பின்னர் அமைதியாக தையலை போட்டுக்கொண்டு பெஞ்சில் இருந்து இறங்கினாள்
சத்யன் அவளை விலக்கி நிறுத்திவிட்டு தன் முகத்தை கர்சீப்பால் துடைத்துக்கொண்டு ... மான்சியின் கையை பிடித்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வரவும் பவானியம்மாள் அவள் கணவனுடன் வரவும் சரியாக இருந்தது
" என்னடி மான்சி என்னாச்சு" என்று பரபரப்புடன் விசாரித்த பவானியிடம் மான்சியை ஒப்படைத்துவிட்டு சத்யன் அந்த போலீஸ்காரருடன் போனான்
அவருக்கு வேண்டிய தகவல்களை சொல்லிவிட்டு கொஞ்சம் பணத்தை அவர் கைகளில் தினித்த சத்யன் தனது செல் நம்பரை அவரிடம் கொடுத்து எதுவானாலும் இனிமேல் இந்த நம்பரில் தொடர்பு கொள்ள சொல்லிவிட்டு மான்சியிடம் வந்தான்
மான்சி கட்டியிருந்த நீலநிற புடவையெல்லாம் ரத்தம் கறையாக காய்ந்து போயிருந்தது...
மான்சியை பவானியுடன் ஆட்டோவில் ஏற்றிவிட்டு சத்யன் தனது பைக்கில் அந்த ஆட்டோவை தொடர்ந்தான்
அப்பார்ட்மெண்ட்க்கு வந்ததும் மான்சியை மெதுவாக லிப்டில் அழைத்து சென்ற சத்யன் தனது வீட்டின் கதவை திறந்துவிட்டு எதுவுமே பேசாமல் அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க்க
மான்சியும் எதுவுமே பேசாமல் சத்யன் வீட்டுக்குள் போனாள் ....
அவள் பின்னாலேயே வந்த பவானி " என்ன சத்யா மான்சியோட கைப்பையில் தான் வீட்டு சாவி, அவ செல்போன், இந்த மாசத்து சம்பளப்பணம் எல்லாமே இருந்ததாமே ... வரும்போது ஆட்டோவில் சொன்னா ... இப்போ என்ன செய்றது .. என்கிட்டயும் மாத்து சாவி இல்லை ... இவளை என்வீட்டில் தங்கிக்கடின்னா வேனாம்ங்கற ... அதோட என் பொண்ணுக்கு வேற பிரசவம் ஆகியிருக்கு ... இப்போ என்ன செய்றது சத்யா" என்று பவானி வருத்தமாக கேட்க
சத்யன் மான்சியை சோபாவில் உட்காரவைத்து விட்டு " பரவாயில்லை ஆன்ட்டி இங்கேதான் இரண்டு ரூம் இருக்கில்ல... மான்சி அதுல ஒன்னுல தங்கட்டும் .. நான் பார்த்துக்கிறேன்" என்று சத்யன் கூறியதும்
" அப்பாடா எனக்கு இப்போதான் நிம்மதியாச்சு சத்யா.. நீ இவளை பார்த்துக்க நான் காலையில வர்றேன்" என்று வாசலை நோக்கி பவானி போக ... சத்யன் அவளை அனுப்பிவிட்டு கதவை மூட பின்னாடியே போனான்