Romance அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
#15
3

நான் வந்ததில் இருந்தே செல்வராஜ், சுமதி மற்றும் கூட இருந்த ஊர் உறவினர்கள் அவர்கள் பேச்சில் ஒரு கலவரம் ஏற்படும் சூழல் உணர்ந்தேன். சுமதியும் சரி, உடன் இருந்த இரு பெண் உறவினர்களும் மிக உக்கிரமாக இருந்தார்கள், பெண் ஓடிப் போனதும், வேறு ஜாதியும், அவர்களை முற்றிலும் நான் அறியா நபர்களாய் மாற்றிக் காட்டியது. 


நான் சிறு வயது முதல் பார்த்த சுமதியா இது என்று தோணியது. எனக்கென்னவோ போலீஸ் ஸ்டேஷன் என்று கூட பார்க்காமல் அடிதடி ஏதும் நடக்குமோ என்று தோணியது, அதே தான் என் நண்பனுக்கு கூட. நான்கு மணி வாக்கில் அவர்கள் பழனியில் இருந்து அழைத்து வரப் பட்டு கொண்டு இருந்தபோது என்னிடம் தனியாக சொன்னான், "சுந்தர், உங்க ஆளுங்க பேசுறது, கும்பலா இருக்கறது கொஞ்சம் சரியா படலை, பொண்ணு வந்ததும் எதும் தகராறு ஆகப் போவுது, அப்புறம் எல்லாருக்கும் பிரச்சினை"

"புரியுது, நான் அவங்க கிட்ட பேசுறேன்"

செல்வராஜ் இடம் பக்குவமாக சொல்லி மொத்தம் 20 பேருக்கு மேலே இருந்த கும்பலை கலைத்து அனுப்பினோம். மொத்தம் ஆறு பேர் மட்டுமே இருந்தோம் என்னை சேர்த்து. 

ஆறு, ஆறரை மணிக்கு அவர்கள் வந்தார்கள். சிட்டு இவர்கள் பக்கமே பார்க்க வில்லை, தான் அவனை விரும்புவதாக, அவனை திருமணம் செய்து கொண்டதாக, தான் அவனோடு தான் வாழ விரும்புவதாக, போலீஸ் தான் தங்களை எந்த வித தொல்லையும் இல்லாமல் காக்க வேண்டும் என்று அவள் சொன்னாள். 

அவள் அவளின் பெற்றோரிடம் பேசவே மறுத்தாள். இரு தரப்பு உடன் இருந்த நபர்களின் பேச்சுக்கள் கொஞ்சம் தடிக்க ஆரம்பித்தது, போலீஸ் அவளையும், அவள் காதலனையும் உள்ளே அறையில் அமர வைத்தனர். 

"பொண்ணு ரொம்ப ஸ்ட்ராங் ஆக இருக்கா, கல்யாணமும் ஆச்சு, சோ வேற வழி இல்ல, விட்டுடுங்க" எங்களிடம் என் நண்பன் சொன்னான். 

"ஓடுகாலி முண்ட, இப்படி மானத்த வாங்கிட்டாளே" சுமதி இன்னும் ஆபாசமாக கோபமாக திட்டினாள்.

"என்ன பண்ண இனி, ஆனது ஆச்சு, நாம தான் பெரியவங்களா மன்னிச்சு ஏத்துக்கணும்" என்றேன் அவளிடம். செல்வராஜ் அப்படியே எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சுமதி தான் மீண்டும் கத்தினாள்.

"அந்த நார முண்டைய நாம மன்னிக்கணுமா, வந்தவ நம்மள பார்க்க கூட இல்லை, அவளுக்கு நாம ஒரு பொருட்டா இருந்தா வந்து பேசி இருக்க மாட்டா?? தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சி டுங்க அப்படி காலில விழுந்து இருக்க மாட்டா??"

"சரி, இப்போ அவங்க வந்து கால்ல விழுந்தா ஆசிர்வாதம் பண்ண, மன்னிக்க ரெடி யா சொல்லு?"

அவள் எதுவும் பேசாமல் இருந்தாள். நான் உள்ளே அவர்களைப் பார்க்க சென்றேன்.

ஆச்சர்யமாக என்னைப் பார்த்த உடன் புன்னகைத்து எழுந்தாள்.

"வாங்க, எப்போ வந்தீங்க?" என எதோ வீட்டுக்கு வந்த விருந்தாளியை போல விசாரித்தாள். எனக்கும் ஆச்சர்யம். கொஞ்ச நேரம் முன்பு அப்பா அம்மா, உறவினர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஸ்டேஷன் உள்ளே வந்த, தன் அப்பா அம்மா வேண்டாம், காதல் கணவன் தான் வேண்டும் என்று சத்தமாக சொன்னவள் இவள் தானா என்று தோணியது.

"நான் மதியமே இங்க வந்துட்டேன்" லேசாக சிரித்தேன்.

"நான் உள்ள வரப்ப கவனிக்கலை உங்களை, சாரி, என்னால எல்லாருக்கும் கஷ்டம், உங்களுக்கு கூட"

"சரி, விடு, என்னம்மா இதுலாம்" என்றேன்.

அவள் என் கேள்வியில் லேசாக கண் கலங்கினாள், பின் எதுவும் பேசாமல் பக்கத்தில் எங்களை அலட்சியமாக பார்ப்பது போல ஆனால் பார்த்த படி இருந்த அவனை எழும்ப செய்து

"இவர் தான் எங்க மாமா, சென்னைல இருக்காரு, சொந்தமா இண்டஸ்ட்ரி வச்சு இருக்காரு, நான் சொல்லி இருக்கேனே உன் கிட்ட" என்றாள். 

அவனுக்கு அது ஞாபகம் இல்லை போல, என்னிடம் ஒரு செயற்கை சிரிப்பை காட்ட, நானும் அதே செய்தேன். அவன் என்னிடம் எதுவும் பேச வில்லை, நானும்.

நான் சிட்டுவைப் பார்த்து ஏதும் பேச வாய் திறக்கும் முன்னே அவள் என்னிடம்

"நீங்களும் ஏதும் அப்பா அம்மா மாதிரி பேசிடாதீங்க, பிளீஸ்" என்றாள். அவள் என்னை எப்போதும் மாமா என நேரில் அழைத்தது இல்லை.

"இல்லம்மா, சரி கல்யாணம் ஆச்சு, வேற என்ன பிளான் வச்சு இருக்கீங்க? ஐ மீன் நீங்க கொஞ்ச நாள் ஊரு பக்கம் போக முடியாது, எங்க தங்க போறீங்க, வேலை அப்படி கேக்குறேன்"

அவன் வேகமாக குறுக்கிட்டான்.

"சார், அது எல்லாம் நாங்க பார்த்துக்கரோம், நீங்க கவலைப் படாதீங்க" அவனின் பேசும் தொனி எனக்குப் பிடிக்கவில்லை.

சிட்டு குறுக்கே அவனைத் தடுத்து "ஏய், கம்முனு இரு, என்று என்னிடம் "இல்லை, இவரு ப்ரெண்ட் கொஞ்ச பேரு இருக்காங்க, தங்க வீடு எல்லாம் பார்த்தாச்சு, வேலையும் ஏற்பாடு பண்ணி ட்டாங்க, ஏதும் பிரச்சினை இல்லை" என லேசாக சிரித்தாள்.

அவள் என்னை மதித்து பதில் சொன்ன போதும், எங்கே வீடு, வேலை என எதுவும் சொல்லாமல் தவிர்த்த நாசுக்கு எனக்கு புரிந்தது. நானும் எதுவும் கேட்டு சங்கடப் பட, படுத்த விரும்ப வில்லை. இனி பேச, கேட்க ஏதும் இல்லை.

"நான் வரெண்மா, பார்க்கலாம்" சொல்லி நகர்ந்தேன்.

"கொஞ்ச நாள் ஊருப் பக்கம் போக வேணாம், எல்லாருக்கும் அது தான் நல்லது" என்று திரும்பி சொன்னேன்..


அவன் என்னிடம் எதோ கோபமாக சொல்ல முயற்சிக்க அவள் அவனை அடக்கினாள்.

"சரிங்க, நீங்க அவங்களை கொஞ்சம் ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அனுப்புங்க, அப்பாவை சாப்பிட வைச்சு அனுப்புங்க பிளீஸ்" என்றாள் அவள் அப்பா அம்மா பற்றி.

அவளையே ஒரு சில நொடிகள் வெறித்துப் பார்த்தேன், ஏதும் பேசாமல் தலையை அசைத்து திரும்பினேன்.

மிகுந்த கனத்துடன் தான் அன்று கிளம்பினேன், அதன் பின்னர் அடுத்த சில வாரங்களில் ஊருக்கு போன் செய்து பேசிய போது அவர்கள் ஈரோட்டில் நண்பர் வீட்டில் இருப்பதாக, பெங்களூர் சென்றதாக, ஊருக்கு கூட ஒரு முறை வந்து போனதாக ஒவ்வொரு விதமாக தகவல்கள் சொன்னார்கள். உண்மையா பொய்யா என்று கூட தெரியாது.

அதன் பின்னர் அவளை இந்த இரு வருடங்கள், பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை, எதுவும் கேள்வி படவும் இல்லை. மறந்தே போய் இருந்தேன். 

திருப்பூரை அடைந்தேன், ஹாஸ்பிடல் நோக்கி காரை செலுத்தினேன்.
[+] 4 users Like nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - by nathan19 - 15-06-2020, 09:58 AM



Users browsing this thread: 4 Guest(s)