Romance அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
#14
2

காரில் போகையில் தான் யோசித்தேன், எப்படி எனக்கு அபிராமி என்ற பெயர் கேட்டதும் இவளின் நினைவே வராமல் போனது?? இவளை, ஈங்கூரை, செல்வராஜ், சுமதி என எதையுமே நான் நினைத்தே வெகு நாட்கள் ஆனது. 


அபிராமி, இவளுக்கு இந்த பெயரை வைத்ததே நான் தான். என்னை விட 16 வருடம் இளையவள், எனது சொந்த ஊர், என் வீட்டுக்கு மூன்று வீடு தள்ளி இவள் அம்மா சுமதி வீடு, அவள் என்னை விட ஒரு மூன்று வயது பெரியவள். எதோ ஒரு தூரத்து உறவு வகையில் அக்கா, என்ன கொடுமை எனில் சுமதி கணவர் செல்வராஜ் அவரும் எனக்கு தூரத்து சொந்தம், அண்ணன் முறை. ஆனால் அவர்களுக்குள் திருமணம் செய்யும் உறவு முறை இருந்தது. கொடுமை.

இன்னும் உண்மையாக சொன்னால் சுமதி தான் நான் சைட் அடித்த முதல் பெண். சிறு வயதில் அவளோடு தான் வளர்ந்தேன். நான் பத்து முடித்து டிப்ளமோ சேரும் விடுமுறை சமயத்தில் அவளுக்கு திருமணம், இரண்டு பெண்கள், மூத்தவள் இவள், அங்காள பரமேஸ்வரி என பெயர் வைக்க, பள்ளி சேர்க்கையின் போது நானும் உடன் இருந்த சமயம், பள்ளிக்கு அபிராமி ஆனது. குணா வெளியானதன் அடுத்த வருடம், குணா பார்த்த நினைவில், அ வரிசையில் அபிராமி தவிர வேறு பெயர் தோண வில்லை.

சுமதி அக்காவும் சரி, செல்வராஜ் அண்ணாவும் சரி, நான் அவர்களை அக்கா, அண்ணன் முறை வைத்து தான் அழைத்தேன், மாற்ற வில்லை. என் மீது நிரம்ப மரியாதை, அன்பும் கூட கொண்டவர்கள். என் ஊரின் முதல் படித்த, பார்ட் டைம் என்றாலும் முதல் பொறியியல் பட்டதாரி ஆன, நல்ல பணியில் இருந்த, பின் சுய தொழில் தொடங்கி பெரும் செல்வாக்கோடு, சென்னை, கோவையில் வீடுகள், நிறுவனங்கள் என இருந்தவன், அதனாலேயே ஊரில் மூத்தவர்கள் கூட மரியாதை கொடுப்பார்கள், கருத்து கேட்பார்கள். அது எல்லாம் இப்போது தேவை இல்லாதது. நான் எப்படி அபிராமி என்ற பெயர் கூட மறந்தேன்??

வேறு ஊர் திருப்பூர் சரி, ஒரு சின்ன சந்தேகம் கூட தோண வில்லையே, அவளை கடைசியாக பார்த்து ஒரு இரண்டு வருடம் இருக்குமா?? பார்த்த சமயம் ஒரு இரண்டு நாட்கள் அடிக்கடி எண்ணி எண்ணி வருந்தினேன். அதன் பின்னர் சுத்தமாக மறந்தே போனேன். அதன் பின்னர் ஒரே தரம் தான் ஊருக்கு போனது. ஊருக்கும் கடைசியாக போய் ஒன்றரை வருடம் இருக்கலாம். 

அந்த கடைசி சந்திப்பு நினைவில் வந்தது. இதே போல அன்றும் கோவையில் இருந்தேன், ஒரு வெள்ளிக் கிழமை, கோவை வந்து வேலைகள் முடிந்து அன்று மாலை காரில் சென்னை திரும்ப வேண்டும். கம்பனியில் இருந்தேன். காலை சுமார் 11 இருக்கும், செல்வராஜ் அண்ணன் பண்ணி இருந்தார். 

"சுந்தரு, நான் செல்வராஜ் பேசுறேண்"

"சொல்லுங்க அண்ணா"

"தம்பி, ஒரு உதவி" குரலில் ஒரு நடுக்கம் இருந்தது.

"சொல்லுங்க அண்ணா"

"நம்ம சிட்டுவ காலைல இருந்து காணோம், என்ன பண்றது ஒன்னும் புரியல, ஒன் ப்ரெண்ட் பெருந்துறை ல போலீஸ்ல இருக்காப்புடில, அவர் கிட்ட கொஞ்சம்" சிட்டு என்பது தான் அபிராமி அவளின் வீட்டு செல்லப் பெயர்.

நான் இடைமறித்தேன்.
" என்ன அண்ணே, சொல்றீங்க? என்ன ஆச்சு??" பதறி கேட்டேன்.

"காலைல இருந்தே கானோம்பா, எல்லா இடமும் தேடிட்டோம்" அழுதார்.

"என்னன்னே, எப்படி, அண்ணே நான் என் ப்ரெண்ட் கிட்ட உடனே பேசுரேன், நானும் உடனே கிளம்பி வர்றேன், கோயம்புத்தூர் தான் இருக்கேன், சீக்கிரம் வரேன், எப்படிண்ணே ஏதும் பிரச்சினை யா, ஏதும் திட்டினீங்களா ?"

அவர் கொஞ்சம் தயங்கி "ஓடிப் போயிட்டா போல தோணுது அப்பா" என்றார்.

"சீ என்னன்னே, அவ சின்ன பொண்ணு அண்ணே, 19 இல்ல 20 இருக்குமா ? என்ன அண்ணே"

"தெரியல அப்பா, நைட்டு சுமதி கூட தான் படுத்து இருந்தாள், காலைல இவ வாசல் கூட்டும் போதே காணல, என்னை எழுப்பி 6 மணிக்கே சொன்னாள், பதறிப் போய் ஊரு முழுக்க தேடி, அவ ப்ரெண்ட், தெரிஞ்சவங்க எல்லாம் பார்த்திட்டு தான் உனக்கு இப்போ பண்றேன்" மீண்டும் உடைந்து போய் அழுதார். 

சுமதி போனை வாங்கி பேசினாள்.

"சுந்தர், நம்ம வீட்ல முன்ன தறி ஓட்டுனாங்க நா*** பசங்க, எனக்கு என்னமோ அதுல ஒருத்தன் மேல தான் சந்தேகமா இருக்கு, உன் ப்ரெண்ட் மூலமா கொஞ்சம் அவன் வீட்டு ஆளுங்களை மிரட்டி விசாரிச்சா தெரியும்" அவள் கணவனை விட கொஞ்சம் தைரியமாக பேசினாள்.

"அக்கா, நான் நேரிலேயே வரேன், நீ கவலைப் படாதே, அவன் கிட்ட பேசுரன், நீங்க ரெண்டு பேரும் நேர்ல ஸ்டேஷன் வாங்க, ஒன்னும் இல்ல, நாம பார்த்துக்கலாம்"

உடனேயே என் நண்பன் அவனுக்கு தகவல் சொன்னேன். இன்னும் சில பல நண்பர்கள் மூலம் நிறைய பேருடன் தொடர்பு கொண்டு, அந்த பையனின் ஊர்க் கார பசங்களிடம் பேச காதல் தகவல் உண்மை என தெரிந்தது. 

நான் பெருந்துறை வரும் முன்னேயே எனக்கு தெளிவாக சிட்டு ஓடிப் போய் விட்டாள் என்பது புரிந்தது. அந்த பசங்களுக்கு எங்கே சென்றார்கள் என்பது பற்றி எதுவும் தெரிய வில்லை, சென்னிமலை தான் முதல் சாய்ஸ், இங்கு ரிஸ்க் என விட்டால் பழனி??

இரண்டு பக்கமும் கால், நண்பர்கள், பழனிக்கு போலீஸ் மூலம் விசாரிக்க விரைவில் அவர்கள் பழனியில் இருப்பதும் காலை ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்று தெரிய வந்தது. 

ஒரு வழியாக அவளையும், பையன், உடன் சென்ற நண்பர்கள் என எல்லாரையும் பெருந்துறை கொண்டு வர மாலை ஆனது.
[+] 3 users Like nathan19's post
Like Reply


Messages In This Thread
RE: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - by nathan19 - 15-06-2020, 09:44 AM



Users browsing this thread: 8 Guest(s)