Thriller ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்!! [Completed]
சில வருடங்களுக்கு முன்பு,

“பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” 8 மாத கர்ப்பிணியான பொறுமையாக சுவற்றை தாங்கி எழுந்தாள் பிரபா.
“நான் வேணும்னா வரலைன்னு போன் பண்ணி சொல்லிடவா” போக மனமில்லாமல் கேட்டான் ஆனந்த். 

“எவ்ளோ பெரிய கம்பெனி, உங்களை நேர்ல பார்க்கணும்னு கூப்பிட்டு இருக்காங்க. மரியாதைக்காச்சும் போய் பார்த்துட்டு அமெரிக்காவை ரெண்டு வாரம் சுத்தி பார்த்துட்டு வாங்க” புன்முறுவலுடன் சொன்னால் பிரபா.  

அவனை அணைத்து உச்சி முகர்ந்து, முத்தமிட்டு போக மனமில்லாமல் ஆனந்த் அமெரிக்கா சென்றான். அவன் அமெரிக்கா சென்றாலும் அவனது நினைவுகள் முழுக்க கருவில் 8 மாத குழந்தையை தனிமையில் சுமந்து இருக்கும் அவள் மனைவி மீது தான் இருந்தது. 

அமெரிக்க சென்ற நான்கு நாட்கள் சென்ற நிலையில் அந்த பிரபல கம்பெனி CEO அவனை நேரில் சந்தித்தார்.

“தேங்க்ஸ் ஆனந்த். நீங்க நேர்ல வந்ததுக்கு. இப்போ சமீபத்திலே அனானிமஸ் அப்படிங்குற க்ரூப் பல சாப்ட்டவர் கம்பெனி ஹேக் பண்ணி நிறைய நஷ்டம் ஆச்சு. ஆனா நீங்க முன்கூட்டியே கிரிட்டிகள் பக்ஸ் எல்லாம் கண்டிபிடிச்சு சொன்னதாலே எங்களால் அதுல இருந்து தப்பிக்க முடிஞ்சிச்சிச்சு. சோ தேங்க்ஸ்”

“அதுக்கு நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்லுறதை விட உங்க கம்பெனியோட அருமையான பக் பவுண்டி ப்ரோக்ராம் கொண்டு வந்தவரை தான் தேங்க்ஸ் சொல்லணும்.”

“அதை கொண்டு வந்ததே நான் தான் Mr ஆனந்த். நான் மிச்ச CEO மாதிரி பிரோபிட் ஓரியண்டட் ஆளு கிடையாது. பை தி வே நான் தேங்க்ஸ் சொல்லணும்னு உங்களை வர வைச்சது எல்லாம் ஒரு சாக்கு தான். உண்மையில நீங்க என்னோட கம்பெனில செக்கூரிட்டி எக்ஸ்பெர்டா ஜாயின் பண்ண முடியுமான்னு கேட்க தான்”

“இல்லை சார்”

“உங்களோட சாலேரி கேட்கலையே” கிட்டத்தட்ட மாத வருமானமே 7 இலக்கத்தை தொட்டது. 

“மணி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை சார். நான், என்னோட வைப், சுத்தி இருக்கிற இயற்கை நிறைஞ்ச இடம் இதுவே எனக்கு போதும் சார்”

“இவளோ ஆபர் பண்ணியும் ரிஜெக்ட் பண்ணிட்டு பொண்டாட்டி, ஊரு தான் வேணும்னு சொல்லுற ஆளை நான் பார்த்தது இல்லை. எனிவே நீங்க ரீகன்சிடர் பண்ணினா எனக்கு கால் பண்ணுங்க. என்னோட பெர்சனல் நம்பர்” 

“ஸ்யூர் சார்”

“நைஸ் மீட்டிங் யூ” சொல்லிவிட்டு அவர் சென்றுவிட ஆனந்தின் போனிற்கு அவன் மனைவியின் போனில் இருந்து அழைப்பு வந்தது. 

“ஹலோ, உங்க ஒய்ப் ஹாஸ்பிடல்ல அட்மிட்  ஆகி இருக்காங்க. உங்களால் கிளம்பி வர முடியுமா” 

“நீங்க யாரு பிரபா எங்கே”

“ஹாஸ்ப்பிட்டல்ல செக்அப்புனு வந்தவங்க மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க”

“ஐயோ”

“பயப்படாதீங்க சார் ரொம்ப சீரியஸ் எல்லாம் இல்லை. நீங்க வர வரைக்கும் நான் வெயிட் பண்ணுறேன்”

“நான் அமெரிக்கால இருக்கேன்”

“இதுல ஹாஸ்பேண்ட் அப்படினு இருந்திச்சு அது தான் கால் பண்ணினேன். வேற ஏதாச்சும் நம்பர் இருக்கா”

“வேற வேற யாரும் இல்லை. நான் இப்போ கிளம்பினா கூட வர 2 நாள் ஆகும்”

“இதுக்காக எல்லாம் கிளம்பி வராதீங்க, நானே என் அக்கா மாதிரி கூட இருந்து பார்த்துக்கறேன்”

“தேங்க்ஸ் மா, உன்னோட பேரு என்ன?”

“அமிர்தா”     

ஆனந்த் அன்று இரவே பிளைட் டிக்கெட் போட்டு வீட்டிற்கு கிளம்பி வந்தான், நேராக ஹாஸ்பிடல் சென்ற போது கொஞ்ச நேரம் முன்னாடி தான் டிஸ்சார்ஜ் ஆகி போனதாக சொல்ல வீட்டிற்கு வந்த போது கதவை திறந்தது அமிர்தா. 

“என் கூட போன் பேசிட்டு வெச்ச உடனே அமெரிக்கால இருந்து கிளம்பிடீங்களா” சிரித்து கொண்டே கேட்டாள் அமிர்தா. 

[Image: 17663722-415594135477593-6549409639853719552-n.jpg]

“பிரபா எங்கே?” கேட்டுக்கொண்டே பெட்ரூம் நோக்கி சென்றான். 

அங்கே அவள் கட்டிலில் சாய்ந்து உக்கார்ந்து இருந்தாள். 

“என்னாச்சு பிரபா”

“வயறு லேசா வலிக்குற மாதிரி இருக்குனு ஹாஸ்பிடல் போனேன்,  அங்கேயேமயங்கி விழுந்துட்டேன் போல. இவளும் தங்கச்சியும் தான் கூட இருந்து பார்த்துக்கிட்டாங்க” பிரபா சொன்னாள்.

“ரொம்ப தேங்க்ஸ் அமிர்தா, உன் தங்கச்சிக்கு சொல்லிடு”

“சரி சார் நான் கிளம்பறேன்”

அமிர்தா சொல்லிவிட்டு கிளம்பியவுடன் “நல்ல பொண்ணு இல்ல” என்றான். 

“பாவங்க ரெண்டு பேருமே அனாதை புள்ளைங்க, பக்கத்துல இருக்க ஹோம்ல தங்கி படிக்குதுங்க”

“சரி பிரபா, நீ ஒழுங்கா ஆன உடனே அந்த ஹோம்கு போய் நம்மளால முடிஞ்சது  டொனேட் பண்ணிட்டு வந்துடலாம்”

“அதை தான் நானும் சொல்லணும்னு வந்தேன், நீங்க முந்திக்கிடீங்க”

“இவ்ளோ வருசமா கூட இருக்கேன்,  இது கூட தெரியாதா என்ன” 

இரண்டு நாட்கள் களித்து பிரபாவுடன் சென்று ஐந்து இலக்க தொகையை நன்கொடையாக கொடுத்தான். 

“ரொம்ப தேங்க்ஸ் சார், எங்க காப்பகத்துக்கு வந்த பெரிய அமௌன்ட் இது தான். நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க”

“White Hat Hacker”

“அப்படின்னா”

“பெரிய பெரிய சொப்ட்வ்ர் கம்பெனியோட ப்ரோக்ராம்ல இருக்க தப்பை கண்டுபிடிச்சு அதை அவங்களுக்கே சொல்லுவேன். அவங்க கண்டுபிடிச்ச பக் ஏத்தா மாதிரி பணம் தருவாங்க”

“இதெல்லாம் வேற தர்ராங்களா”

“ஆமா, இப்போ எல்லாமே சாப்டவேர்ல தானே இருக்கு. இதுவே பேங்க் அக்கவுண்ட் சாப்டவேர்ல பிரச்சனை இருந்தா எல்லா பணமும் போய்டமே அதனாலே அவங்களே பக் பவுண்டினு பக் கண்டுபிடிச்ச காசு கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க”

அவர்கள் பேசிட்டிவிட்டு வெளியே வந்தபோது எதிரே ஸ்கூல் யூனிபார்மில் வந்த இன்னொரு பெண்ணை பார்த்து பிரபா நின்றாள்.

[Image: anu-emmanuel-swapna-sanchari-actress-new...-37663.jpg]

“ஏய் என்னாச்சு டல்லா வரே. அமிர்தா காலஜ் படிக்குறேன்னு சினிமா சான்ஸ் தேடி போய்ட்டா” 

“நீ +2 நல்ல படிக்கணும் என்ன” 

“ஹ்ம்ம்” என்று சொல்லிவிட்டு அனு நடக்க தொடங்கினாள். 

“இவ தான் அனு, என்னை பார்த்துகிட்டே இன்னொரு பொண்ணு. அமிர்தாவும் இவளும் ஒண்ணா இந்த ஹோம்ல தான் வளர்த்தாங்க. துள்ளி குதிச்சிட்டு இருந்தா அவ போன உடனே ஆளே டல்லயிட்டா” 

“அனு உனக்கு போர் அடிச்சா எங்க வீட்டுக்கு வா, பிரபாவுக்கு நான் இல்லாத டைம்ல போர் அடிக்கும்” தூர சென்றவளிடம்  ஆனந்த் கத்தி சொல்லினான்.

“சரி அங்கிள்” 

மூன்று வாரம் கழித்து, பிரபா குழந்தையை பெற்று எடுத்தாள். அனு அவர்கள் வீட்டில் அதிக நேரம் கழித்தாள். +2 தேர்வு முடிவடைந்தவுடன் கேரளாவில் நர்சிங் படிக்க சென்றவள் போன 1 வருடம் களித்து விடுப்பில் வந்தபோது கூட இவர்களை எல்லாம் வந்து பார்த்துவிட்டு அமிர்தாவுக்கு கூடிய சீக்கிரமே ஒரு படவாய்ப்பு அமைய போவதாக சொன்னாள். அதற்க்கு பிறகு அவர்கள் அனுவை பார்க்கவில்லை. 

ஆனந்த் எவ்ளவோ மறுத்தும் பிரபா அவனை வற்புறுத்தி ஒரு கார் வாங்க வைத்தாள். புது கார் வாங்கியதை முன்னிட்டு அவர்கள் ஊட்டி போகலாம் என்று முடிவெடுத்து போகும்போது தான் அந்த துரதிர்ஷ்ட சம்பவம் நடந்தது. எதிரே வேகமாக வந்த கார் இவர்களின் காரை இடித்து தள்ளியதில் இவர்களின் கார் பள்ளத்தாக்கில் தூக்கி வீசப்பட்டு ஒரு பெரிய மரத்தில் மாட்டிக்கொண்டு நின்றது. 

“பிரபா பிரபா  சீட் பெல்ட் சீக்கிரம் கழட்டு கார் கீழே போகுது” மயக்கத்தில் இருந்தவளை எழுப்பிய ஆனந்த் அழுது கொண்டு இருந்தான். 

“என்னாச்சி….”

“ஆக்சிடன்ட்.. நீ மயக்கம் ஆகிட்டே”

“சீட் பெல்ட்டை கழட்டி வா இந்த மரக்கிளை வழியா பக்கத்து மரத்துக்கு போய்டலாம்” 

சீட் பெல்ட் கழட்டி அவளை பாதுகாப்பாக கூட்டி கொண்டு பக்கத்து மற கிளைக்கு சென்றவுடன் தான் “என்னங்க குழந்தை” பிரபா கதறினாள்.

“நம்ம மேல அந்த கார் இடிச்ச உடனே நீ மயங்கிட்ட பிரபா, உன் கையில் இருந்தவன் அப்போவே கீழே விழுந்துட்டான். 

“ஆஆ” என்று ஓலமிட்டாள். தொப் என்ற சத்தத்துடன் சில ஆயிரம் அடி உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. 

அங்கிருந்தவர்கள் சத்தம் கேட்டு பார்க்க போலீஸ் வரவழைக்கப்பட்டு இவர்கள் இருவரும் கயிறு மூலமாக மீட்கபட்டனர். மூன்று நாட்களுக்கு அடர்ந்த காடு என்பதால் குழந்தையை மீட்கும் பனி கைவிடப்பட்டது. 

இவன் எவ்வ்ளவு சொல்லியும் போலீஸ் தரப்பில் இது வெறும் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எதிரே வேற எந்த காரும் வந்து இடிக்கவில்லை என்று கேஸ் மூடப்பட்டது. ஆனந்த மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று திரும்பி வரும் போது அங்கிருந்த ஒரு கடையின் வெளிப்புறத்தில் CCTV கமெரா ஒன்று இருந்ததை பார்த்தான். அவர்களிடம் சென்று சம்பவம் நடந்த அன்று இருந்த ரெக்கோர்டிங்கில் அந்த பாரின் கார் தாறுமாறாக ஓடிவரும் காணொளியை எடுத்துக்கொண்டு டிஜிபிடம் சென்றான்.

“நான் எவளோ சொல்லியும் நம்பளை சார் நீங்க. ஆக்சிசன்ட் நடந்த நாள் 2 நிமிசத்துக்கு முன்னாடி நான் சொன்ன அதே அடையாளம் உள்ளே கார் எப்படி தறிகெட்ட போகுதுன்னு”

“இந்த பூட்டேஜ் மட்டும்  வச்சி  எல்லாம் அது ஆக்சிடெண்ட்னு ப்ரோவ் பண்ண முடியாது Mr .ஆனந்த்”

“கரெக்ட் நான் சொன்னது உண்மைன்னு ப்ரூவ் ஆகுதுல்ல. இது யாரோட கார் என்னன்னு விசாரிச்சு பார்த்தா ஏதாச்சும் கிளு கிடைக்கலாம்ல”

“ஆனந்த் இதுல எல்லாம் நேரத்தை வீணாக்கி லைப்பை வேஸ்ட் பண்ணாதீங்க. உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வயசு ஆகலை இந்த மாதிரி ராபிட் ஹோல்லா எல்லாம் வெஸ்ட் பண்ணாம அடுத்தது ரெடி பண்ணீங்க அப்படின்னா எல்லாம் மறந்து போய்டும் என்ன நான் சொல்லுறது” 

ஆனந்திற்கு அவரை அடிக்க வேண்டும் என்பது போல தோன்றியது, இருந்தாலும் இடம் ஏவல் அறிந்து பொறுமையாக சென்றான். 

ஆனந்த் அந்த கார் இம்போர்ட்டட் கார் என்பதால் தமிழகத்தில் எத்தனை கார் இருக்கிறது என்பதை ரொம்ப சுலபமாக கண்டுபிடித்த அவனுக்கு அந்த கார் த்ரியாவின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ய பட்டதை கண்டுபிடிக்க ரொம்ப நாள் ஆகவில்லை. ஆருஷ் த்ரியா சோசியல் மீடியாவில் சம்பவம் நடந்த நாட்கள் அதற்கு முன்பு போட்ட பதிவுகள் எல்லாம் வைத்து பார்த்ததில் அவர்கள் இருவரும் ஊட்டியில் இருந்தது தெரியவந்தது. போலீஸ் ஏன் கேஸை மாற்றி எழுதியது எல்லாம் அவனுக்கு நன்றாக இப்போது விளங்கியது. 

இதை எல்லாம் அவன் மனைவியிடம் சொல்ல சென்றபோது தான் அவள் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதை பார்த்தான். அவன் மனைவி ஆக்சிடென்ட் குழந்தை இழந்த சோகத்தில் நடைப்பிணம் ஆனவள் கொஞ்சம் நாட்களில் பிணமாகவே ஆகிவிட்டாள். ட்ராமாலா இருந்த ஸ்ட்ரெஸ் அவங்களால தாங்க முடியாம ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க என்று டாக்டர்கள் ஏதோ சொன்னார்கள், ஆனந்த் தனித்து விடப்பட்டான். அப்போது தான் அனு அவனை பார்க்க வந்தாள், அவனுக்கு சமாதானம் கூறினாள். 

“அமிர்தா எங்கே அணு”

அணு ஓவென்று அழ தொடங்கி ஆருஷ் எப்படி அவளை ஏமாற்றினான் என்பதை எல்லாம் சொல்லி காட்டினாள்.

“என்ன சொல்லுற ஆருசா”

“ஆமா எனக்கு வாரத்துக்கு ஒரு தடவையாச்சும் போன் பண்ணி பேசிடுவா. பாலரத்னம் படம் ஓகே ஆயிடிச்சினு சந்தோசமா சொல்லிட்டு அடுத்து பாண்டி போறதயும் சொன்னா. அதுக்கு அப்புறம் போன் பண்ணல. விசாரிச்சப்போ தான் அவ சூசைட் பண்ணிக்கிட்டது தெரிய வந்திச்சு. த்ரியா படத்துல ஆருஷ் ஹீரோவா ஆனதுக்கு அப்புறம் ஆருஷ்கும் த்ரியாவுக்கும் அமிர்தா சூசைட் பண்ணிக்க காரணம்னு தோணுச்சு”

“உன்கிட்ட ப்ரூப் இருக்கா”

“ஆருஷ் அமிர்தா எடுத்த போட்டோதான் இருக்கு என்று” இருவரும் எடுத்த போட்டோ ஒன்றை காட்டினாள்.

“இது எல்லாம் பத்தாது”

“அட போங்க சார். அவங்க ரெண்டு பேரும் கொன்னது வீடியோ இருந்தா கூடதான் பத்தாது. நம்ம நாட்டுல என்னைக்கு சார் சட்டம் ஒரே மாதிரி இருந்து இருக்கு. அரசியல்வாதி, பணக்காரங்களுக்கு ஒரு சட்டம் நம்மள மாதிரி சாதாரண மக்களுக்கு வேற ஒரு சட்டம்” 

எப்பாடு பட்டாவது தன்னுடைய காரை இடித்தது ஆருஷின் கார் தான் என்று சட்டத்தின் முன்பு நிறுத்திவிடலாம் என்று நினைத்த அவனுக்கு சின்ன பெண் தான் என்றாலும் அனு சொன்னது ஆனந்திற்கு உண்மையை உணர்த்தியது. 

“அனு, நீ சொல்லுறது கரெக்ட் தான். என்னோட காரை இடிச்சது கூட த்ரியாவோட கார் தான். நான் எவளோ சொல்லியும் FIRல எங்களை இன்னொரு கார் இடிச்சது மாதிரி கூட இல்லை”

“நம்மளால வேடிக்கை மட்டும் தான் சார் பார்க்க முடியும். கால் மணி நேரத்துல சாப்பிட வாங்க” அணு கிட்சன் சென்றாள்.

வேடிக்கை மட்டும் தான் சார் பார்க்க முடியும் என்கிற அந்த வார்த்தை மட்டும் அவன் காதுக்குள் ரீங்காரமாக ஒலித்தது. 

“என்னோட குடும்பத்தையே சீர்குலைச்ச அவங்களை என்னாலே சும்மா விட்டு விட முடியாது அனு”

“என்னை அக்கறையா பார்த்துக்கிட்டது எங்க அம்மா கூட கிடையாது ஒன்னு அமிர்தா. இன்னொன்னு பிரபா அக்கா அவங்க ரெண்டு பேரோட சாவுக்கும் காரணம் த்ரியா ஆருஷ் ரெண்டு பேரு தான். எனக்கு பழி வாங்கனும் ஆசை தான் ஆனா அவங்க கிட்ட கூட நெருங்க முடியாதே” 

“பொறுமையும் வில் பவர் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம் அனு”.

“அவங்க ரெண்டு பேரை பழிவாங்கணும்னா நான் என்ன வேணும்னாலும் செய்யுறேன்” அனு அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

அந்த நேரத்தில் சுச்சி லீக்ஸ் சக்கை போடு போட மச்சி லீக்ஸ் என்ற பெயரில் ஆனந்த் ஒரு அக்கௌன்ட், வெப்சைட் தொடங்கி அவனது ஹாக்கிங் திறமையை பயன்படுத்தி சினிமா கிசுகிசுக்களை கொடுத்து நீங்காத ஒரு பிராண்ட் வால்யூ உண்டாக்கினான். இருந்தாலும் அவனின் டார்கெட் எல்லாம் த்ரியா, ஆருஷ் மீது மட்டும் தான். 

ஆருஷ் த்ரியாவை கல்யாணம் செய்தலும் அவன் BDSM வெப்சைட் பார்த்து வந்த ஹிஸ்டரியை எல்லாம் வைத்து ஒரு பெண்ணை வைத்து ட்ராப் செய்ய முடிவு செய்தான். அனு தானே செல்வதாக கூறி வேண்டும் என்றே அவன் வலையில் வீழ்ந்து கொஞ்சம் கொஞ்சமாக த்ரியாவுக்கும் இவனுக்கும் இடைவெளி உண்டாக்க மச்சி லீக்சில் வந்த செய்திகள் வதந்திகள் எல்லாம் இருவருக்கும் இருந்த இடைவெளியை இன்னும் கூட்ட செய்தது. கடைசியாக ஆருசே தன்னுடைய கையால் விஷம் கொடுத்து த்ரியவாய் கொன்றான். 

“இவங்க ரெண்டு பேருக்கும் சமாதி கூட வைக்க கூடாது மாமா, செத்துட்டாங்களா உயிரோடு இருக்காங்களான்னு கூட தெரிய கூடாது” அனு சொன்னது அவனுக்கு சரியாக பட்டது. த்ரியாவின் சடலத்தை கடத்தி ஆறுசயும் அதே இடத்திற்கு வரவைத்தார்கள் இருவரும். 

நிகழ்காலத்தில்,

ஆம்னி  வேனை திறந்து பார்த்த  ஆரூஸ் உறைந்து போனான்.
உள்ளே அனு இல்லை இருந்தது த்ரியா.. ஆம் அவன் விஷம் கொடுத்து கொன்ற த்ரியாவே தான்.  சென்னை வீட்டில் இருந்து அடக்கம் செய்ய பார்த்தபோது ஏற்றிய அதே பிரீசர் வைத்த பெட்டியில் பிணமாக தான்  கிடந்தாள்.

“டேய் நீ யாரு உனக்கு என்ன வேணும்”

“இந்த இடம் ஞாபகம் இருக்கா”

“இல்லை”

“இல்லையா, இப்போ ஞாபகம் வரும் பாரு” வேனின் ஹண்ட்ப்ரெக் எடுத்துவிட “ஏய் ஏய் ஏய்” ஆருஷ் சுதாரிக்கும் முன்னே  த்ரியாவின் சடலத்தோடு அந்த வேன் மலை உச்சியில் இருந்து கீழே விழுந்தது.

“நீ இடிச்சப்போ என்னோட காரும் இப்படி தான் கீழே விழுந்திச்சு”  

“ஷிட் ஷிட் அதுக்குன்னு..அது யாருன்னு தெரியும்ல” ஆறுசுக்கு வார்த்தைகளே வரவில்லை. 

“தெரியும் நீ தானே விஷம் கொடுத்து சாவடிச்ச, நீ என்ன அவளை மாதிரி விஷம் குடிச்சு சாகுரியா இல்லை...”

“வேணாம் ப்ளீஸ். நான் தான் அக்க்சிடெண்ட் பண்ணினேன்னு உண்மையா போலீஸ் கிட்ட ஒதுக்குறேன்”

“ஓத்துக்கிட்டு ஒரு வாரத்தில பைல வந்து ஜாலியா இருப்பே. நாங்க என்னவோ தப்பு பண்ணவன் மாதிரி ஸ்ட்டஸனுக்கும் கோர்ட்டுக்கும் சுத்தணும். எங்களை மாதிரி சாதாரண மனுசன் எல்லாம் சட்டம் பார்த்துக்கும் சட்டம் பார்த்துக்கும் விட்டதாலே தாண்டா ஏழைக்கு சின்ன சின்ன தப்புக்கு எல்லாம் தண்டனை கொடுக்குற சட்டம் எவளோ பெரிய தப்பு பண்ணினாலும் பணக்காரனை மட்டும் சந்தோசமா சுத்த விடுது.அதனாலே தான் நீ பண்ணின தப்பு தண்டனை கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்” 

“அப்படி என்ன பெருசா தப்பு பண்ணிட்டேன் அது ஒரு ஆக்சிடென்ட்” 

“கரெக்ட்தான்..”

“இது யாருன்னு தெரியுதா..” அமிர்தாவின் போட்டோவை காட்டிக்கொண்டே இருட்டில் இருந்து வந்தாள் அனு.

“அமிர்தா.. அனு..உனக்கு எப்படி தெரியும்”

“அவ என்னோட அக்கா, உன்னை நம்பி ஏமாந்து போன என்னோட அக்கா. அதனாலே தான் உன்னை ஏமாத்தி உன் கையாலே த்ரியாவுக்கு விஷம் கொடுக்க வச்சேன்”

“யூ” என்று அடிக்க ஓங்கிய அவனின் கையை ஆனந்த் தடுக்க “நீ எப்போவுமே சொல்லுவியே அது என்ன பைன் வித் பிளேசர் தானே. இவளோ நாளா என்கிட்ட பிளேசர் அனுபவிச்ச நொவ் இட்ஸ் டைம் பார் பைன்” என்று அவனை தள்ள அந்த அகல பாதாளத்தில் அவனும் போய் விழுந்தான். 

அடுத்த நாள் மச்சி லீக்ஸ் தளத்தில் ஆருசு பெயரில் கேரளாவில் இருந்து ஸ்பெயினுக்கு புக் செய்துஇருந்த டிக்கெட் வெளியிடப்பட மற்ற செய்திகள் எல்லாம் ஆருஷ் த்ரியா இருவரும் ஸ்பெயினில் செட்டில் ஆகிவிட்டனர் என்பது போல வெளியிட மக்கள் அவர்கள் அங்கே போய்விட்டதாக நம்ப தொடங்கினர். சில மாதங்களில் முதல் பக்கத்தில் வந்த செய்தி எட்டாம் பக்கம் போய் சுவாரசியம் இல்லாமல் போனதில் ஒரேடியாக நிறுத்தப்பட்டது.

சில மாதங்கள் கழித்து.

மும்பை மாநகரம், அந்த பெரிய பாலிவுட் ஹீரோ போனில் கடுப்பாக பேசிக்கொண்டு வந்தான். 

“அது எப்படி என்னை பத்தி தப்பான நீவ்ஸ் போடலாம்”

“அதில்ல சார், அந்த பொண்ணு நீங்க தப்பா நடந்துக்கிட்டது ஆதாரத்தோடு காட்டினாங்க”

“காட்டினா நிவ்ஸ் போடுவியா.”

“அதுதானே பத்திரிகை தர்மம்”

“உன்னோட வீக்லி மகசின் மொத்த காபியும் நான் வாங்கிட்டேன், ஒரு காப்பி கூட வெளியே போகலை இப்போ என்னோட ரசிகர்களுக்கு நீ பதில் சொல்லு”

“சார் ப்ளீஸ் நோ சார்” அவன் கெஞ்சினான். 

அந்த ஹீரோ போனை கட் செய்து விட்டு மிடுக்குடன் காரை எடுக்க நடந்து கொண்டு இருந்த நேரத்தில் அந்த பத்திரிகை அலுவககம் சூறையாட பட்டு கொண்டு இருந்தது.  அவன் காரில் உட்கார்ந்தவுடன் தன்னுடைய கிளீவேஜை காட்டி கொண்டு “சார் சார் ஆட்டோகிராப்” என்று அனு நீட்ட அவளின் அழகை பார்த்து பிரமித்து போனான். 

[Image: annu-311226-ACd7k9-Ek-1024x576.png]

“வாவ் வாட் எ பியூட்டி எங்கே போகணும்னு சொல்லு நான் ட்ராப் பண்ணிடுறேன்”

“வாவ் ரியலி” என்று அவள் குதித்த போது அவளின் இளமை குதிக்க அவன் வலையில் விழுந்ததை தூரத்தில் நின்று பார்த்து கொண்டு அனுவை பார்த்து “ஸ்டார்ட் காமெரா, ஆக்சன்” என்பது போல முணுமுணுத்தான். 

-- The End--
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


Like Reply


Messages In This Thread
RE: ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்!! [Completed] - by naughty2hotty - 13-06-2020, 08:38 PM



Users browsing this thread: 33 Guest(s)