Thriller ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்!! [Completed]
ஆருஷ் gps வழிகாட்ட அந்த இடத்தை நோக்கி காரை ஓட்டினான். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி 5 நிமிடம் உள்ளே சென்றவுடன் ஒரு ஆளில்லாத காடு வந்தவுடன் “யூ ஹாவ் அரைவட்” என்று gps கத்தியது. ஆருஷ் கீழே இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தான் கும்மிருட்டாக ஆளில்லாமல் இருந்தது. கடிகாரத்தை பார்த்தான் மணி 10.30 ஆகி இருந்தது.

[Image: aarav-stills-photos-pictures-03.jpg]

சற்று நேரத்தில் ஆருஷின் போன் அடித்தது.

“ஹலோ, நீ சொன்ன இடத்துக்கு வந்துட்டேன்”

“என்ன அதுக்குள்ள வந்துட்டியா”

“நீ சொன்ன இடத்துக்கு நான் வந்துட்டேன், அந்த போட்டோஸ் எல்லாம் எங்கே”

“இரு இரு நான் என்ன ஸ்போர்ட்ஸ் காரா வச்சி இருக்கேன் இவளோ சீக்கிரம் வர, நீ ஒன்னு செய் உன்னோட காரை அங்கேயே விட்டுட்டு ஒரு பத்து நிமிஷம் வந்த வழியே திரும்பி நடந்தா ஒரு பெட்ரோல் பாங்க் வரும் அங்கே ஒரு ரெட் கலர் கார் இருக்கும் அதை எடுத்துக்கிட்டு அந்த கார்ல இருக்க GPS சொல்லுற இடத்துக்கு வா”

“ஏய் என்ன வேணும் உனக்கு” ஆருஷ் கடுப்பாக கத்தினான்.

“கூடிய சீக்கிரம் சொல்லுறேன்.”

“...”
“பை தி வே, உனக்கு இந்த போன் வேண்டாம் அதையும் அங்கேயே வச்சிட்டு வந்துடு, உன்னோட போன் லொகேஷன் மூவ் ஆனது பார்த்தா உடனே போட்டோஸ் லீக் ஆகிடும் சோ டோன்ட் டூ எனிதிங் ஸ்டுபிட்”

ஆருஷ் அவன் சொன்னவாறே போனை வைத்துவிட்டு கார் நோக்கி நடக்க தொடங்கினான், அதை இருட்டில் இருந்து மறைந்து கொண்டு ஒரு கருப்பு உருவம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது. ஆருஷ் கொஞ்ச தூரம் சென்றதும் அவன் வைத்துவிட்டு சென்ற போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு சிம்மை தூக்கி எறிந்துவிட்டு ஆரூஸை பாலோ செய்ய தொடங்கியது.

சுமா மருமகனின் செல்லுக்கு நான்காவது முறையாக டயல் செய்து ஸ்விட்ச் ஆப் என்று வந்தவுடன் கவலை கொண்டாள். மகளின் சடலத்தை காணவில்லை இப்போது மருமகனின் போனும் ஸ்விட்ச் ஆப் என்று வருகிறது ஏதோ தவறு நடப்பதாக அவளின் ஆழ்மனது சொல்ல போனை எடுத்து போலீசுக்கு போன் செய்தாள்.

அடுத்த கால் மணி நேரத்தில் அவளின் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் தேடி வந்தார். இன்ஸ்பெக்டரிடம் சுமா எல்லாவற்றையும் சொன்னாள்.

“என்ன மேடம் சாய்ங்காலத்துல பாடி காணாம போச்சுன்னு சொல்லுறீங்க எனக்கு ராத்திரி 11 மணிக்கு சொல்லுறீங்க”

“நான் அப்போவே சொல்லலாம்னு தான் சொன்னேன், ஆனா ஆருஷ் தான் போலீஸ் கிட்ட சொன்னா மீடியாகு போய்டும் நானே வரேன்னு சொன்னாரு. இப்போ ஆருஷ் நம்பரும் ஸ்விட்ச் ஆப்னு வருது” அப்பாவியாக சுமா சொன்னாள்.

“இந்த மாதிரி விசயத்துல டைம் தான் மேடம் முக்கியமே. இப்போ என்ன மீடியாவா சுத்திகிட்டு இருக்கு 4-5 மணி நேரம் வீணாகிடிச்சி பாருங்க” தன்னுடைய வாக்கி டாக்கி எடுத்தார்.

“சாரி இன்ஸ்பெக்டர்”

“நீங்க சென்னை வரப்போ எங்கே எல்லாம் ஸ்டாப் பண்ணீங்கன்னு தெரியுமா”

“ஹ்ம்ம் அவள் நிறுத்திய 2 இடங்களின் பெயர்கள் சொன்னாள்”

இன்ஸ்பெக்டர் உடனே கண்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டு அந்த அந்த ஊர்க்கு பக்கத்துல இருக்க ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு தகவல் சொல்லி அங்கே போய் விசாரிக்க சொல்லி சிசிடிவி கமெரா இருந்தால் அதை செக் செய்யும் படி சொல்லிவிட்டு ஆருஷின் நம்பேரை கொடுத்து அதை ட்ரெஸ் செய்ய சொன்னார்.

ஐந்து நிமிடத்தில் கண்ட்ரோல் ரூமில் இருந்து இன்ஸ்பெக்டருக்கு அழைப்பு வந்தது.

“சொல்லுங்க”

“சார் நீங்க சொன்ன ரெண்டு ஊருக்கு பக்கத்துல இருக்க ஏரியா SI கிட்ட சொல்லிட்டோம்”

“அந்த நம்பர் ட்ரெஸ் பண்ணிடீங்களா”

“கடைசியா கிடைச்ச லொகேஷன் கரூர் கிட்ட.”

“கரூரா.. சரி என்னோட போனுக்கு லொகேஷன் அனுப்புங்க”

சுமாவிடம் வந்தார்.

“மேடம் ஆருஷ் ஏன் கரூர் போகணும்”

“ஏன்னு தெரியல அவரு இங்கே தான் வந்துட்டு இருந்தார்”

“இங்கே வந்துட்டு இருந்தவர் ஏன் திடிர்னு ரூட் மாறி கரூர் போகணும்”

“ஒரு வேலை த்ரியா பாடி விஷயமா ஏதாச்சும் போன் வந்து போய் இருக்கலாம் இன்ஸ்பெக்டர். கரூர் பக்கம் தானே நாம போய் பார்க்கலாம் ப்ளீஸ் ப்ளீஸ்” சுமா பதறினாள்.

இன்ஸ்பெக்டர் ஜீப்பை கரூர் நோக்கி ஓட்ட சொல்ல சுமாவும் கெஞ்சி கூத்தாடி ஜீப்பின் பின்புறம் உக்கார்ந்து கொண்டாள். அவர்கள் கரூர் நகரை அடைந்த போது மணி இரவு 2ஐ தாண்டி இருந்தது. GPS லொகேஷன் கோயம்பத்தூர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையை காட்ட ஜீப் ட்ரைவரை அந்த திசை நோக்கி சொல்லும் படி சொன்னார், 10 நிமிடம் சென்றவுடன் இங்கே லெப்ட் எடு ஜீப்பை அந்த மண்ரோட்டில் ஜீப் செல்ல “ஸ்டாப் ஸ்டாப்” என்று சுமா கத்தினாள்.

“என்னாச்சி மேடம்”

“அங்கே நிக்கிறது ஆரூஸோட காரு மாதிரி இருக்கு”

“மேடம் நீங்க வண்டியா விட்டு கீழே இறங்காதீங்க வண்டிய ஆப் பண்ணிட்டு பின்னாடி வா” என்று டிரைவருக்கு சொல்லிவிட்டூ தன்னுடைய துப்பாக்கியை கையில் பிடித்து இன்ஸ்பெக்டர் இருட்டில் தனியாக நின்று கொண்டு இருந்த காரை நோக்கி சென்றார்.

அங்கிருந்து வெகு தூரத்தில்,
ஆரூசுக்கு பயங்கரமாக குளிர தொடங்கியது, மலை பாதை என்பதால் வெகு கவனமாக காரை ஒட்டி கொண்டு சென்றான். ஊட்டி 22 km என்கிற மைல்கல் தொலைவில் தெரிந்தது. சில கிலோ மீட்டர் தூரம் சென்றவுடன் gps கருவி “You have arrived “ என்று கத்தியது.

காரை நிறுத்தினான் சுற்றிலும் யாருமில்லை. அப்போது ஒரு போன் அடிக்கும் சத்தம் கேட்டது.

“ஹலோ”

“ஏய் நீ சொன்ன இடத்துக்கு வந்துட்டேன் அனு எங்கே”

“அப்படியே முன்னாடி வா அடுத்த U பெண்ட் வரும் அங்கே காரை நிறுத்து”

ஆருஷ் காரை அந்த யு பேண்டில் நிறுத்தினான், ரோட்டின் ஓரத்தில் தடுப்பை இடித்து கொண்டு ஒரு மாருதி ஆம்னி வேன் நின்று கொண்டு இருந்தது”

ஆருஷ் காரை விட்டு இறங்கியவுடன் அவன் இதுவரை பார்த்திராத ஒருவன் எதிரில் நின்று கொண்டு இருந்தான். கண்ணாடி போட்டு அரைவழுக்கை விழுந்து 40 வயது இருக்கும் அவனுக்கு.

“யாருடா நீ, உனக்கு என்ன வேணும்”

“..”

“நீ சொன்னபடி தான் செஞ்சிட்டேனே, இப்போ சொல்லு அணு எங்கே”

அவன் ஆம்னி காரை பார்க்க ஆருஷ் வேகமாக ஆம்னி காரை நோக்கி ஓடி திறந்தான். திறந்து பார்த்தவன் உறைந்து போனான் உள்ளே அணு இல்லை இருந்தது த்ரியா.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


[+] 4 users Like naughty2hotty's post
Like Reply


Messages In This Thread
RE: ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்!! - by naughty2hotty - 12-06-2020, 08:32 PM



Users browsing this thread: 38 Guest(s)