25-02-2019, 07:13 PM
நான் அந்த ஹாஸ்பிடலில் நுழைந்த போது மணி 8 ஆகியிருந்தது. மாலதி சொன்ன அறைக்கு வெளியே கவுசி அழுது கொண்டு நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள். எனக்கும் பதட்டமாயிருந்தது. அவளிடம் விசாரித்தேன்.
'என்ன ஆச்சு கவுசி?'
'வண்டில போயி வேன்ல மோதிட்டாங்க.. கால்லதான் பெரிய அடின்னு டாக்டர் சொல்றாங்க அங்கிள். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு'
'பயப்படாதப்பா ஒன்னும் ஆகாது..' என்றபடி அறைக்குள் நுழைந்தேன். கட்டிலில் மாலதியின் கணவர் மயக்கத்தில் இருந்தார். அவருடைய காலில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. தலையிலும் சிறிய காயம் பட்டிருந்தது. பக்கத்தில் ஆர்த்தி கவலையுடன் உட்கார்ந்திருந்தாள். நான் கவுசியிடம் திரும்பி 'அம்மா எங்கே?' என்றேன். 'டாக்டரைப் பாக்கப் போயிருக்காங்க அங்கிள். நீங்க உக்காருங்க' என்று விட்டு கதவருகே போய் நின்று கொண்டாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரைப் பார்த்தபடி அசையாமல் உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் கையில் சில மருந்து பாட்டில்களுடன் மாலதி வந்தாள். என்னைப் பார்த்ததும் கண்களில் நீர் கொட்டத் தொடங்கியது. மருந்து பாட்டில்களை வைத்துவிட்டு கணவர் இருந்த கட்டிலின் ஓரமாக உட்கார்ந்தாள். அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அழுது அழுது வீங்கியிருந்தது. மூக்கு சிவந்திருந்தது. நான் கவலை தோய்ந்த குரலில் மெதுவாய் கேட்டேன்.
'என்ன ஆச்சு மேடம்?'
'ஆபீஸ்ல இருந்து டூ வீலர்ல வரும் போது வேன்ல மோதிட்டாங்களாம். கால்ல நல்ல அடி. ரோட்லயே விழுந்து கிடந்திருக்காங்க. அங்க இருந்த ஒருத்தர் அவருடைய போன்ல இருந்து அவரு பிரண்டுக்கு போன் பண்ணி சொல்லவும் அவர்தான் உடனே வந்து அவரைத் தூக்கிட்டு இங்க வந்து சேர்த்து எனக்கு சொன்னாங்க' (விசும்பினாள்).
'சரி அழாதிங்க மேடம். டாக்டர் என்ன சொன்னார்?'
'கால்லதான் பெரிய அடி. மத்தபடி பயப்படுற மாதிரி ஒன்னுமில்லனு சொல்றாங்க. ஆனாலும் எனக்குப் பயமா இருக்கு சிவா..'
'ஓகே ஓகே ரிலாக்சா இருங்க. நீங்க தைரியமா இருந்தாத்தான் பிள்ளைங்க பயப்படாம இருப்பாங்க.. நான் ஏதாவது உதவி செய்யனும்னா சொல்லுங்க?'
'இல்ல சிவா.. இவரை இப்படி ஆஸ்பத்திரில சேர்த்ததும் எனக்கு என்ன செய்யன்னே தெரியல. அதான் உனக்கு போன் பண்ணி சொன்னேன். உதவி தேவைப்பட்டா சொல்றேன்.'
'ரிலேசன்ஸ் யாரும் வரலையா?'
'அத்தையும் மாமாவும் வந்துகிட்டு இருக்காங்க. இவரு அண்ணணும் இப்ப வந்துடுவார். இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நெனக்கவே இல்ல சிவா.. பயமா இருக்கு'
'என்ன மேடம் இது. அதான் டாக்டர் ஒன்னுமில்லனு சொல்லிட்டாங்கள்ல.. பயப்படாதீங்க.. ரிலாக்ஸ் ப்ளீஸ்.. சாப்பிட்டீங்களா?'
'இல்ல..'
'சரி நான் போயி ஏதாவது வாங்கிட்டு வரேன்.'
'இல்ல அதெல்லாம் வேணாம். இப்ப சாப்பிடுற நெலமையிலா நான் இருக்கேன்.
'புரியுது மேடம். பிள்ளைங்க பாவம் இல்லையா? உங்க ஹஸ்பன்ட் முழிச்சதும் சாப்பிடலையானுதான் கேப்பார். நான் போயி வாங்கிட்டு வரேன்.'
அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினேன். சிறிது நேரத்தில் மூன்று பேருக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றேன். உள்ளே மாலதியின் மாமனாரும் மாமியாரும் கவலையுடன் உட்கார்ந்திருந்தனர். நான் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன். மாலதி தேங்ஸ் என்றாள். நான் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். மனம் பாரமாயிருந்தது.
மாலதியின் கணவரை டிஸ்சார்ஜ் செய்ய ஒரு வாரமானது. அந்த ஒரு வாரகாலத்தில் தினமும் ஒரு முறையாவது சென்று பார்த்தேன். அவர் சகஜமாய் பேசத் தொடங்கிவிட்டார். ஆனால் கால் குணமாக மூன்று மாதமாகும் என்று சொன்னார். அதுவரை சரிவர நடமுடியாது என்று கவலைப்பட்டார். அவ்வப்போது மாலதியிடம் போனில் அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டேன். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்ற பிறகு இரண்டு மூன்று முறை சென்று பார்த்தேன். மாலதியின் சிரமத்தைக் குறைப்பதற்காக அவளுடைய அத்தையும் நாத்தனாரும் (கணவரின் தங்கை) உடனிருந்தனர். மாலதியின் முகத்தில் சிரிப்பைப் பார்த்தே பத்து நாட்களுக்க மேலாகியிருந்தது. பள்ளிக்கும் அவள் செல்ல வில்லை. இரண்டு வாரங்கள் கழித்து நாத்தனார் அவருடைய வீட்டிற்குச் சென்றார். மாலதி பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள். மாலதியிடம் தனியாக மனம்விட்டுப் பேசி நிறைய நாள் ஆகியிருந்தது.