நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#9
நீயும்தான் அவளைப் பார்த்தேல்ல. எனக்கு என்னவோ அவளைக் கண்டாலே பயமா இருக்கு. அவ மட்டும் என் மகனைத் திருமணம் செய்துக்கிட்டா அப்புறம் அவன் எங்களுக்கு இல்லை. நாங்க இந்த வீட்டையே மறந்துடவேண்டியதுதான்.”

“அது எப்படி அத்தே? உங்க பையன் ரொம்ப பாசமானவராச்சே?”
“அதே பாசம் எங்களுக்கும் இருக்கில்லையாம்மா. அவனுக்காக நாங்களே எல்லாத்தையும் விட்டுட்டு போற மாதிரி செஞ்சிடுவா.”
“இப்பதான் நானும் வந்துட்டேன்ல. ஒரு கை பார்த்துடுவோம். ஆமா. நான் வர்றதைப் பத்தி அவளுக்குத் தெரியும்தானே? அப்புறம் ஏன் அப்படி பார்த்தாள்?”

“நாங்க ரெண்டுபேரும் கிருஷ்ணான்னு மட்டும்தான் சொன்னோம்.”

“அதைத்தானே மத்த ரெண்டுபேருக்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க?”

“இல்லம்மா. உங்க மாமாவுக்கு தெரியும்.”

“அப்ப யுகேனோட அண்ணாவுக்கு தெரியாதுதானே?”

அவர் யோசனையானார். நேரடியாக கிருஷ்ணா என்பது ஒரு பெண் என்று இருவருமே அவனிடம் சொல்லவில்லை. அப்புறம் எப்படி அவன் அவளைக் கண்டதும் சாருலதாவைப் போல் அதிர்ச்சியடையாமல் இருந்தான்.

அதன் பிறகும் எப்படி கிருஷ்ணா என்றுவிட்டு ஒரு பொண்ணை வீட்டுக்கு அழைத்து வரலாம் என்று சண்டையும் போட்டானில்லை.

சாதாரணமாக கோபத்தையாவது வெளிக்காட்டியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. அப்ப கிருஷ்ணவேணியை அவனுக்கு முன்னமே தெரியுமா?

இப்போது யோசிக்கையில் அவனுக்கு தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

அவளுக்கான அறையை ஏற்பாடு செய்யச் சொல்வதற்காக அவர் வேலையாளை அழைத்தபோது அவரிடம் வந்தவன் ஊரு உலகத்தில் மத்தவங்க தப்பா பேச இடம் கொடுக்கக்கூடாது என்றவன் அவர்களுக்கு தப்பு செய்யற வாய்ப்பைத் தராமல் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றிருந்தான். அப்போதைக்கு அவன் சொன்னதை மட்டும் ஏற்று அவனுக்கு எதிர்த்த மாதிரி இருந்த அறையைத்தான் ஏற்பாடு செய்திருந்தார் அவர். இப்போதைக்கு யோசிக்கும்போது வருவது பெண்தான் என்று அவனுக்குத் தெரிந்திருக்குமோ என்று தோன்றியது.

“ஏம்மா. நீ என் மகனை இதற்கு முன்னரே பார்த்திருக்கியா? நீதான் கிருஷ்ணவேணின்னு அவனுக்குத் தெரியுமா?”
“நான் அவரை முன்னமே பார்த்திருக்கேன் அத்தை. ஆனால் நான்தான் கிருஷ்ணவேணின்னு தெரியுமான்னு எனக்கு தெரியலை. அன்னிக்கு யுகா என்னை அறிமுகப்படுத்தி வைக்கலை.”

“சரி. என்னவோம்மா. அவன் மனசில் என்ன இருக்குன்னு நமக்கு எப்படித் தெரியும்? சரி வா இந்தச் சின்னப்பயலைப் போய் சமாளிப்போம்.”


அதே நேரத்தில் அலுவலகத்தில் மகேந்திரனுக்கு வேலையே ஓடவில்லை. வேலை என்று பெரிதாக தன்னை அழைத்து வந்துவிட்டு எதுவும் கொடுக்காமல் இருக்கிறானே? ஒருவேளை வீட்டைப் பற்றிய யோசனையோ? அந்த கிருஷ்ணவேணியைப் பற்றி தான் போட்டுக்கொடுத்தது பற்றி யோசிக்கிறானோ?

யோசிக்கட்டும் யோசிக்கட்டும். அவளை வீட்டை விட்டு துரத்தட்டும்.

தனக்குள்ளேயே கருவிக்கொண்டாள்.

மகேந்திரன் எண்ணத்தில் முழுவதும் வீட்டு ஞாபகம்தான்.

அவனுக்கு கிருஷ்ணவேணின்னு சொன்ன உடனேயே அவள் யாரென்று புரிந்துவிட்டது.

அவளைச் சென்ற வருடம் அவர்களது கல்லூரி நாள் விழாவில்தான் சந்தித்தான். அவனை அங்கே சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.

அவர்களது கல்லூரியில் அவனை வரவேற்றதே அவள்தான்.

அவனை பூங்கொத்து கொடுத்து வரவேற்றபோது அவள் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. கூடச் சேர்ந்து சிரிக்க அழைக்கும் குழந்தையின் சிரிப்பைப் போல. தன்னைக் கண்டதும் மலர வைக்கும் ஒரு மலரின் மென்மையைப் போல. அவனுக்கு எதனுடன் ஒப்பிடுவது என்று புரியவில்லை.

இருந்தாலும் எப்போதும் இருக்கும் ஜாக்கிரதை உணர்வுடன் அவளைப் பார்த்தான். அவள் சிரிப்பதை பார்த்தால் அவளுக்கு தான் புதியவனாக இருப்பேன் என்பது போல் தெரியவில்லை.

அவளுக்குத் தன்னை யார் என்று தெரிந்திருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது.

அதற்கேற்றாற் போல் அவள் அவனது சகோதரனை நாடிச் சென்று அவனைப் பார்த்தவாறே ஏதோ பேசுவது தெரிந்தது.

அப்போது கூட அவள் பெயர் என்னவென்று தெரியாது.

அதன் பிறகு பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு அவனைப் பரிசுகள் கொடுக்கச் சொன்னார்கள். அப்போது பல போட்டிகளில் வென்று பரிசினை அவள்தான் அள்ளிச்சென்றாள்.

அப்போது அவளைப் பெயர் சொல்லி அழைத்தபோது அவனது மனதில் பதிந்துவிட்டது. ஏனென்று இன்னும் புரியவில்லை.

அதன்பிறகு கலைநிகழ்ச்சியில் அவளது பரதமும் அரங்கேறியது. அவள் நன்றாகவே ஆடினாள்.

இருந்தும் அவன் மனதில் அவள் மேல் இனம் புரியாத கோபம்.

அப்படி வாங்கிச் சென்ற பரிசில்களை எல்லாம் சந்தோசத்துடன் தன் சகோதரனிடம் அவள் கொடுத்து மகிழ்வது கண்டு அவனுக்குப் பொறுக்கவில்லை.

இவளைப் போன்ற பெண்கள் தன் தம்பி போன்ற ஆண்மகன்களை தங்கள் பின்னால் சுற்றவிட்டுவிட்டு எல்லாப் பரிசினையும் தாங்களே அள்ளிக்கொள்கிறார்கள்.

என்று தேவை இல்லாமல் கரித்துக்கொட்டினான்.

உலகம் தெரியாமல் தம்பி அவளிடம் மாட்டிக்கொண்டானோ? என்று கவலையாய் இருந்தது.

இதோ இன்று காலையில் கூட தங்கள் வீட்டு வாசலில் இருவரும் எப்படிச் சிரித்துப் பேசினார்கள்.

இதில் இந்த அம்மாவும் கூட சேர்ந்துவிட்டார்.

அவரை ஜாடையாக எச்சரித்தது வீணாகிப்போயிற்று.
கண்ணை மூடிய போது அவன் கண்களுக்குள் வந்து ஆட்டம் காட்டினாள் கிருஷ்ணவேணி. அவன் தலையைப் பிடித்துக்கொண்டான்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 25-02-2019, 07:02 PM



Users browsing this thread: 27 Guest(s)