நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#7
கிருஷ்ணவேணி கேட்டதற்கு பதில் சொல்லாமல் தன் அண்ணனிடம் குழைவாகப் பேசுகிறாளே?

“வாம்மா.”
தன் அறையை விட்டு வெளியில் வந்த ரவிச்சந்திரன் அவளை வரவேற்றார்.
“நல்லாயிருக்கீங்களா மாமா? என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.” என்றவாறே அவரது காலில் விழுந்தாள்.
“நல்லாயிரும்மா.”
மனதார வாழ்த்தினார்.
அடுத்து மகேந்திரன்தான். யுகேந்திரன் அண்ணனைப் பார்த்து கிருஷ்ணவேணியைக் கூப்பிடுமாறு சைகை செய்தான். எங்கே அண்ணன் அவளை அழைக்காமல் போய்விடுவானோ? அவனுக்குப் பிடித்தமின்மையை அவள் கண்டுகொள்வாளோ?
“வா…வாங்க.” என்று ஒருவாறு அவளை அழைத்துவிட்டான்.
“அண்ணா. அவளை ஏன் மரியாதையா கூப்பிடறே? நானே அவளை வா போன்னுதான் கூப்பிடுறேன். என்னை விட சின்னவள். வாபோன்னே கூப்பிடேன்.”
“சரி. சரி. அப்படியே கூப்பிடுறேன்.” முகம் கடுக்க சொன்னான்.
“வாங்க. நேரமாயிடுச்சு. சாப்பிடலாம்.”
வனிதாமணி அழைத்தார்.
அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு வனிதாமணி பரிமாற தயாரானார்.
“ம்கூம். அத்தை நீங்களும் உட்காருங்க. சேர்ந்தே சாப்பிடலாம்.”
கிருஷ்ணவேணி அழைத்தாள்.
“இல்லம்மா. நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்.”
“அதெல்லாம் இல்லை. தனியா உட்கார்ந்து சாப்பிடறது எத்தனை கொடுமை தெரியுமா?”
“எனக்குப் பழகிப்போச்சும்மா.”
“இல்லை. நானும் உங்க கூடத்தான் சாப்பிடுவேன்.”
“நீ இன்னிக்குதாம்மா இங்கே வந்திருக்கே. இன்னிக்கு நீயும் மத்தவங்க கூட உட்கார்ந்து சாப்பிடு. நாளையில் இருந்து நாம சேர்ந்து சாப்பிடுவோம்.”
அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அவள் எழுந்துவிட்டாள். அவள் பின்னேயே யுகேந்திரனும் எழுந்துவிட்டான்.
“ஆன்ட்டி. எங்களுக்காவது சாப்பாடு எடுத்து வைப்பீங்களா? நான் நேத்து இங்கே தங்கினதுக்கே காரணம் இன்னிக்கு காலையில் முக்கியமான வேலை இருக்குன்னு அத்தான் சொன்னார். அதனால்தான். இல்லையா அத்தான்.”
“ஆமாம்.” அவன் வேண்டாவெறுப்பாகப் பதில் சொன்னான்.
“சரிப்பா. நீங்க மூன்று பேரும் சாப்பிட்டு கிளம்புங்க. நாங்க வீட்டில்தான் இருக்கோம். மெதுவா சாப்பிட்டுக்கிறோம்.”
என்றவாறே அவர்களுக்குப் பரிமாற ஆரம்பித்தார் வனிதாமணி.
அவர்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.

“அப்பாடா.” என்று பெருமூச்சு விட்டார் வனிதாமணி.
“நாம இப்ப சாப்பிடலாமா அத்தை.”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 25-02-2019, 06:50 PM



Users browsing this thread: 6 Guest(s)