நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#6
‘நடந்தால் நன்றாக இருக்கும். இந்த அக்கா சாருமதி மட்டும் என்னைப்போல் இருந்திருந்தால் எனக்கு இந்த சிரமம் வந்திருக்குமா? நேரிடையாக சொல்லிக்கூட அவள் புரிந்துகொள்ளவில்லையே. புரிந்துகொள்ளவில்லையா? இல்லை புரிந்துகொள்ள மறுக்கிறாளா?’

மனதிற்குள்ளேயே தன் கூடப்பிறந்த சகோதரியை தாளித்துக்கொட்டினாள்.

“இரண்டு பேரும் ஒன்றாக உள்ளே வருவதைப் பார்த்தால் எனக்கு என்னவோ சந்தேகமாக உள்ளது அத்தான். மூத்தவர் நீங்க வீட்டில் இருக்கும்போதே தனக்குப் பொண்ணை வீட்டுக்கு அழைத்துட்டு வந்துட்டானே இந்த யுகேந்திரன்.”
அவன் காதைக் கடித்தாள். அவர்கள் உள்ளே நுழையப்போகும் அந்த தருணத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்றவாறு வாசலையேப் பார்த்தான் மகேந்திரன்
“கிருஷ்ணா. வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா.”

“ஏய் ரொம்ப ஓவரா பண்ணாதேடா.” அவன் முதுகில் தட்டினாள்.
“முதன் முதல்ல நம்ம வீட்டுக்கு வர்றே. நான் சொல்றதைச் செய்யேன்.”
கெஞ்சலாகக் கேட்டான்.

“சரி. உன்னோட ஒரே பாசத்தொல்லையாப் போச்சு. சின்னப்பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறே.”

அவனைக் கடிந்துகொண்டே வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் கிருஷ்ணவேணி.

அவள் பின்னேயே அவனும் வந்தான்.

அதைக் கண்ட பிறகுதான் மகேந்திரனால் சரியாக மூச்சு விட முடிந்தது. ஏனோ நிம்மதியாக உணர்ந்தான். இவள் வந்த முதல் நாளே இப்படி படுத்தி வைக்கிறாளே. இனி வரும் நாட்கள் எப்படி கழியப்போகின்றனவோ?

இருவரும் ஒரே வீட்டில் வேறு இருக்கிறார்கள். கண் முன்னே இருக்கும்போது கொஞ்சம் கண்காணிக்கலாம். என்று தன் மனதைத் தைரியப்படுத்திக்கொண்டான்.

“ஹாய் சாருக்கா. எப்படியிருக்கீங்க?”

அவள் தன்னைத்தான் கேட்கிறாள் என்று புரிந்துகொள்ளவே அவளுக்கு சிறிது நேரம் பிடித்தது. அதுவும் அந்த யுகேந்திரன் அழைத்து வந்தவள் தன்னை மதித்துப்பேசுவாள் என்றே நினைக்கவில்லை. அவனை மாதிரியே திமிர் பிடித்தவளாகத்தான் இருப்பாள் என்று நினைத்திருந்தாள்.

“சாரு.”

அருகில் நின்றிருந்த மகேந்திரன் அவளை சுயநினைவிற்கு கொண்டு வர முயற்சித்தான்.

“அத்தான்.” என்று குழைவாக அழைத்தாள்.
அதைக்கேட்ட யுகேந்திரன் பல்லைக் கடித்தான்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 25-02-2019, 06:49 PM



Users browsing this thread: 2 Guest(s)