நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#5
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 02 - ராசு

[Image: nivv.jpg]

ம்மா. கிருஷ்ணா வந்தாச்சு. நீங்க ஆரத்திய எடுத்துட்டு வர்றீங்களா?”

“ஏய் அதெல்லாம் எதற்கு?

பதிலுக்கு கிருஷ்ணா மறுப்பது தெரிந்தது.

“இதோ வர்றேன்ப்பா.”

வனிதாமணி ஆலம் சுற்றுவதற்காக தட்டை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தார்.

மகேந்திரனுடன் வந்த சாருலதாவின் முகத்தில் எதிர்பாராத அதிர்ச்சி. யுகேந்திரன் என்னவோ கிருஷ்ணா என்றதும் அவனுடன் படிக்கும் பையன்தான் என்று நினைத்திருந்தாள். அதற்கு நேர்மாறாக ஒரு அழகான சிறு வயது பெண் வந்து நின்றதும் அவளுக்கு பயங்கர அதிர்ச்சிதான்.

“ஏய் நீ தள்ளிப்போடா.” என்று தன் இளைய மகனைக் கடிந்தவாறே அவளுக்கு மட்டும் ஆலம் சுற்றினார் வனிதாமணி.

“அம்மா. எனக்கும் சேர்த்து ஆரத்தி எடுக்க வேண்டியதுதானே?”

குறைபட்டுக்கொண்டான் யுகேந்திரன்.

“அதற்குள் என்னடா அவசரம்? அதற்கு இன்னும் காலம் இருக்கிறதே?”

“ஒவ்வொரு வீட்டில் ஒரு அழகான பொண்ணோட வந்தால் சாதாரணமா செய்யறதுதானே?”

“எத்தனை வீட்டில் போய் பார்த்தியாம்? வயசுக்கேத்த பொறுப்பு இன்னும் வரலை. அதற்குள் ஆசையைப் பாரு.”

செல்லமாய் மகனது முதுகில் தட்டினார். ஆலத்தை சுற்றிய பிறகு அருகிருந்த வேலைக்காரப் பெண்ணிடம் தாம்பாளத்தைக் கொடுத்து அதை கொட்டிவிட்டு வரச்சொன்னார்.
அவள் அதை வாங்கிக்கொண்டு வெளியே சென்றாள்.
நீ உள்ளே வாடாம்மா.”

“முதல்ல என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை.”

சொன்னவாறே வனிதாமணியின் காலில் விழுந்தாள் கிருஷ்ணவேணி.

“நல்லாயிருடாம்மா.”

மனம் நெகிழ அவளை ஆசிர்வதித்து தலையை வருடினார். அப்படியே அவளது தோளைத் தொட்டுத் தூக்கிவர் அணைத்துக்கொண்டார்.

“உள்ளே வாடாம்மா.”

வார்த்தைக்கு வார்த்தை வாடா போடா என்று வனிதாமணி கிருஷ்ணாவை அழைக்க அழைக்க சாருலதாவிற்கு மனம் பொறுமியது. என்றாவது ஒருநாள் தன்னை இப்படி செல்லமாய் அழைத்திருக்கிறாரா? என்று யோசித்துப் பார்த்தாள். என்றுமே வனிதாமணி இப்படி ஒருநாள் கூட செய்ததில்லை.

ஒரு வேண்டாத விருந்தாளியாய்தான் தன்னை நடத்துகிறார்கள் என்று புரிந்து என்ன செய்ய? ரோசப்பட்டு வராமலா இருக்க முடியும்? அப்புறம் இத்தனை சொத்தையும் யாருக்கோ தாரை வார்த்துக்கொடுக்க வேண்டியதாகிவிடும்.

சொத்து இல்லாமல் தங்களால் வாழ முடியுமா?

அது மட்டும் முடியாது என்று அவளுக்கு நிச்சயமாய் புரிந்தது.

‘அதுவும் அந்தக் கிழவியும் சின்னப்பயலும் செய்வதற்கு நான் இந்த அளவிற்கு ஆத்திரப்பட வேண்டுமா?’

‘மாமாவும் மகேந்திரன் அத்தானும் இதுவரைக்கும் எதுவுமே சொல்லவில்லையே. அப்ப அவங்க சொல்ற வரைக்கும் காத்திக்கிட்டிருக்க போறியா?’

‘அதுவும் இந்த கிருஷ்ணாவும் அந்த யுகேந்திரனும் சேர்ந்து கூடிய சீக்கிரமே அப்படி சொல்ல வைத்து விடுவார்கள்.’

‘அவர்கள் வீட்டு பையனைக் காட்டிலும் மாமா என்னை பெரிதாக நினைக்கப்போவதில்லை. அதற்குள் ஏதாவது குட்டையைக் குழப்பிவிடவேண்டும்.’

‘இந்த கிருஷ்ணா எதற்காக வந்திருக்கிறாள்? அவளும் யுகேந்திரனும் நேசிக்கிறார்களோ? அதற்கு அடித்தளமாகத்தான் அவளை இங்கே அழைத்து வந்திருக்கிறானோ?’

‘அப்படி இருந்துவிட்டால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மகேன் அத்தானை நான் கல்யாணம் செய்துகொண்டுவிட்டால் அவனை அப்படியே தனிக்குடித்தனம் என்ற பெயரில் வெளியே அனுப்பிவிடலாம். அப்புறம் அவனை ஒதுக்குவது என்ன முடியாத காரியமா?’
மனதிற்குள் என்னென்னவோ திட்டங்கள். இதெல்லாம் நடக்குமா? என்று அவள் யோசிக்கவேயில்லை.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 25-02-2019, 06:35 PM



Users browsing this thread: 7 Guest(s)