கனியும் ஒரு காதல்..(completed)
#27
எம். டி கையசைத்து அகிலாவை கூப்பிட்டார்.... அகிலா அவர் அருகில் வந்தாள்

"சார்... சொல்லுங்க சார்...."

"அகிலா.. ம்ம்ம் பையன் நல்ல செலக்ட் பன்னியிருக்க....."

"என்ன சார் சொல்லுரீங்க....."

"இல்லைம்மா.. பையன் பயங்கர சுமார்ட்... ம்ம்ம் உன் செலக்சன் பிரமாதம் அகிலா.... நல்லா வருவான்...one of the assest of the company...keep him with you..... நான் பசி தாங்க மாட்டேன்னு கூட அவன் கிட்ட சொல்லி வச்சிருக்கிறா.. குட் குட்...". சொல்லி சிரித்தார்.....

ஜி எம் மும் அவர் சொன்னதுக்கு தலை அசைத்தார்.....

""தாங்க்ஸ் சார்..
மெல்ல நகர்ந்தாள் அவரிடமிருந்து.. நான் எப்படா உன் கிட்ட சொன்னேன்... எப்பவோ ஒரு முறை பேச்சு வாக்கில் சொன்னது... இன்னும் என்ன இருக்குடா உன்னிடம்... என்னப் படுத்திருயே படுவா....இப்பவே உன் கிட்ட சொல்லனும் போல இருக்குடா.... என்ன சொல்ல....பிடிச்சிருக்குன்னா... ச்ச்சி... நீயா செய்யிர எல்லாத்தையும் நான் தான் செய்யச் சொன்னேன்னு...சொல்ல.. மனசு வேனும்டா.. செல்லம்...
அது உன் கிட்ட நிறைய இருக்குடா...இல்லை என்னை இம்பிரஸ் பண்ண இதை எல்லாம் செய்யிரியா... நான் தான் எப்பவோ உன் கிட்ட மயங்கி கிடக்கிறேனே... இன்னும் என்ன இருக்கு இம்பிரஸ் பண்ண்.. மனசு அலறியது.. அவளுக்கு கேட்டது....


லஞ்ச் நல்ல முறையில் முடிந்தது... கடைசியில்... தான் அகிலாவும்...மோகனும் சாப்பிட்டனர்....அப்புரம்... டீ பிரேக்... அது முடிந்ததும்... அகிலா மோகனிடம்...

"மோகன் நான் ரூமுக்கு போய்ட்டு அப்படியே அட்மின்ல கொஞ்சம் வேலை இருக்கு அத முடிச்சுட்டு வந்துடுரேன்... நீ பாத்துக்கடா சொல்லி விட்டு நகர்ந்தாள்....

அவள் போய் 10 நிமிடம் கூட இருக்காது எம். டி... போடியத்தில் இருந்து மைக்ல " இப்போது கமர்சியலில் இருந்து அவங்க தரப்ப விளக்குவாங்க "

"சார் அகிலா.. கீழ போயிருக்காங்க.. சார்..."

அதனால் என்ன நீ பேசு தயாராதான வந்திரிப்பீங்க " சிரித்தபடி அவனைப் பார்த்தார். மோகன் தடுமாறிய படி...

"ஒகே சார்...." பட்டென்று பேக் எடுத்தான் பென் டிரவ் எடுத்து லாப் டாபில் சொருகினான்... மைக் அருகில் வந்தான்....

அவன் பேசியதின் சமாசாரம் இது தான்.....

நமது சேல்ஸ் நண்பர்கள் கடுமையாக உழைத்து... விற்வனை செய்து.. அத காசாக்கி... கம்பனிக்கு லாபம் சம்பாதிது கொடுகின்றனர்...அவர்கள் வேலை விற்பனை அப்புறம் பண வரவு... இத்துடன் முடித்து விடுகிறார்கள்.. நம் கம்பனியின் விற்பனை முக்கால் வாசி..அடுத்த மாநில விற்பனை தான்... அதிலும் முழுவதும் concessional rate of tax விற்பனை செய்கிரோம்.. ஆனால் அதற்குண்டான படிவம் ( declaration forms ) இன்னும் இரண்டு வருடங்களாக நமக்கு வரவில்லை.... அதன் மொத்த மதிப்பு 10 கோடி ஆகும்... இவைகளை நாம் அவர்களிடம் இருந்து பெறா விட்டால்.. நாம் 20 கோடி மற்றும் அபராதம், வட்டி என்று கம்பனி கட்ட வேண்டியது இருக்கும்....எனவே அனைத்து சேல்ஸ் நண்பர்களும்... இதை முழு மூச்சாக எடுத்து இன்னும் ஒரு மாத்ததில் அனைத்து ப்டிவங்களையும் வாங்கி கொடுத்தால் இந்த வருடம் நாம் 10 கோடி உண்மையிலேய லாபம் சம்பாதிப்பதற்கு சமம்.....உங்கள் அன்பான ஒத்துழைப்பு அவசியம் வேனும்..

அவன் பேசி முடித்ததும் முதலில் கை தட்டியவர் எம்.டி தான் எழுந்து வந்து அவனிடம் கை குலுக்கியவர்....

"ம்ம்ம் கரைட்டான பாய்ண்ட் புடிச்ச , பாரு நான் கூட இது பத்தி யோசிக்கல.. குட் ஷோ". சொன்னவர்
Like Reply


Messages In This Thread
RE: கனியும் ஒரு காதல்.. - by johnypowas - 25-02-2019, 05:54 PM



Users browsing this thread: 4 Guest(s)