07-06-2020, 07:26 PM
(This post was last modified: 07-06-2020, 07:28 PM by nathan19. Edited 1 time in total. Edited 1 time in total.)
1
அது ஒரு புதன் கிழமை, மாலை ஒரு 8 அல்லது கூட இருக்கும். வெளியே லேசான மழை, டின்னர் தயாராக இருந்தது, பால்கனியில் கொஞ்சம் மழை பார்த்தவன் ஹாலுக்கு வந்து டிவி ஆன் செய்து எனது வழக்கமான மூவி கலெக்சன் இலிருந்து படம் பார்க்க நினைத்தேன், ஒரு 50 படங்கள், கொஞ்சம் ஆங்கில சீரிஸ் இருக்கும், படங்களில் தமிழ், மலையாளம் அதிகம், கொஞ்சம் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி.
ஹேராம் ? அல்லது மூன்றாம் பிறை ? அல்லது நாயகன்? உயிரே?
யோசித்தபடி பாட்டிலில் இருந்த காஸ்ட்லி இறக்குமதி சரக்கை கிளாஸில் ஊற்றி, ஸ்நாக்ஸ் பரப்பினேன். மிகவும் relax ஆக இருந்தேன். வீட்டுக்கும் phone பேசியாகி விட்டது. இனி யாரும் எந்த வித தொல்லையும் தரமாட்டார்கள். கிளாசை எடுத்து பிரமாண்ட நிலைக் கண்ணாடி இருந்த திசை நோக்கி எனக்கு நானே சியர்ஸ் செய்து, அப்படியே இடது கையால் ஹே ராம் பிளே செய்ய அழுத்தினேன். வலது கையால் கிளாசை வாய்க்கு கொண்டு சென்று ஒரு மிடங்கு அருந்தினேன்.
செல் ஒலித்தது. கடுப்பில் பார்த்தேன். யாரோ ஒரு unknown number. எடுக்கலாமா? வேண்டாமா என்று யோசித்தேன். பொதுவாக எனது பெர்சனல் நம்பர் எனது நெருங்கிய நண்பர் அல்லது உறவினர்களுக்கு மட்டும் தான் தருவேன். பிசினஸ் விசயங்களுக்கு தனி எண் உண்டு. இது எதோ விளம்பர கால்?? இருப்பினும் இந்த நேரத்தில்??
நான் யோசிக்கும் போதே கால் கட் ஆனது. நான் அதை மறந்து படம் பார்க்க முடிவு செய்தேன். சில வினாடிகளில் திரும்ப அதே எண்ணில் இருந்து அழைப்பு.
இந்த முறை எடுத்தேன். "ஹலோ" என்றேன்.
"மிஸ்டர். சுந்தரம்?" எதிர் முனையில் யாரோ ஒரு ஆண் பதட்டமாக கேட்டான். குரல் பரிச்சயம் இல்லை. யாரோ ஒரு புது நபர், குரலும் ஒரு பதட்டத்தில் இருந்தது.
"எஸ். சொல்லுங்க"
அவனுக்கு எனது குரலில் எனது வயது, அல்லது வசதி அல்லது ஒரு வித அதிகார தொனி அல்லது அவை அனைத்தும் தெரிந்தது போல.
"சார், நான் திருப்பூர் *** ஹாஸ்பிடல் ல இருந்து பேசறேன்."
"திருப்பூர்? சரி. சொல்லுங்க?"
"உங்களுக்கு அபிராமி தெரியுங்களா?"
"அபிராமி, திருப்பூர், எனக்கு திருப்பூர் ல தெரிஞ்சவங்க அதிகம் இல்லை. என்ன விசயம் சொல்லுங்க"
"சார், ஒரு சின்ன ஆக்ஸிடென்ட், அடி பட்ட பொண்ணோட செல் ல உங்க நம்பர் பார்த்து பண்றேன், இந்த பொண்ணு உங்களுக்கு தெரியும்னு நெனச்சேன். அந்த பொண்ணு மயக்கத்தில் இருக்கு. நீங்க எங்கே சார் இருக்கீங்க?"
"நான் இப்போ கோயம்புத்தூர் ல தான் இருக்கேன், ஆனா நான் சென்னை settled. இங்க திருப்பூர் ல யாரும் தெரிஞ்சவங்க அதிகம் இல்லை. நீங்க அந்த செல் ல வேற ஏதும் நம்பர் க்கு பண்ணுங்க" கட் செய்ய நினைத்தேன்.
"சார், சார், அந்த பொண்ணு ஹேன்ட் பேக் ல, அது ஐடி, போன், கொஞ்சம் சில்லறை தவிர ஏதும் இல்லை. ஐடி பார்த்து தான் பேரு அபிராமி தெரியும், போன் ல ரொம்ப கம்மியா தான் நம்பர் இருந்தது, அப்பா நம்பர், அம்மா நம்பர், அப்புறம் இன்னும் ரெண்டு மூணு பேரு நம்பர் பண்ணிப் பார்த்தேன். யாருமே எடுக்கலை சார். பிளீஸ் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க சார்" கிட்டத்தட்ட அவன் கெஞ்சினான். எனக்கும் முன் பின் தெரியாத ஒரு நபருக்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்து, இவ்வளவு அக்கறையுடன் பேசும் அவன் மீது ஒரு பரிதாபம் வந்தது.
நானும் யோசித்தேன். அபிராமி என்ற பெயரில் யாரும், அதும் திருப்பூரில் நினைவில் வரவில்லை.
நான் 18, 19 வருடங்களுக்கு முன்னரே சென்னை வாசி ஆகியவன். பிசினஸ் காரணமாக இங்கே கோயம்புத்தூரில் மாதா மாதம் வருவேன். இங்கேயும் சொந்த வீடு வசதி எல்லாம் உண்டு. சொந்தமாக ஒரு இண்டஸ்ட்ரி நண்பர் இருவருடன். 30 பேருக்கு மேலே நேரடியாக பணி புரிகிறார்கள். அங்கே சென்னையிலும் வேலைகள் உண்டு. வீடுகள் உண்டு. பூர்வீக சொத்துக்கள் அதுவும் பெருந்துறை அருகே உண்டு. இரண்டு அன்பான குழந்தை. இந்த 40 வயதில் மிக திருப்தியான வாழ்க்கை. "சார், சார்" என குரல் கேட்டு திரும்ப வந்தேன்.
"உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க சார்"
"தெரியல சார், பொண்ணு என்ன வயசு இருக்கும்??"
"இருக்கும் ஒரு 20, 22. ஐடில வயசு, date of birth இருக்கா பார்க்கிறேன் சார்"
"எனக்கு திருப்பூரில் யாரும் தெரியாது. நீங்க அவங்க ஐடி பார்த்தீங்க இல்ல, அட்ரஸ் இருந்தா சொல்லுங்க"
"ஒரே நிமிசம் சார், ஊரு ஈங்கூர், அப்பா பேரு செல்வராஜ், அட்றஸ்" என சொல்லி முடிக்கும் முன்பே கேட்டேன்.
"என்னது, ஈங்கூர் செல்வராஜ் பொண்ணா??"
அதிர்ச்சியாக கேட்டேன்.
"சார், உங்களுக்கு தெரியுமா சார், அப்பாடா" என கொஞ்சம் நிம்மதியாக சொன்னான். நான் தான் திடீரென நிம்மதி இழந்து தவித்தேன்.
"சார், நான் ஒரு ஒன் அவர், ஒன்றரை அவர்ல வந்துடுவேன், நீங்க கொஞ்சம் கூட இருந்து அது வரை பாருங்க சார்," என கொஞ்சம் பதட்டமாக கேட்டேன்.
"சார், நீங்க பொறுமையா வாங்க சார், நீங்க வரவரை இருக்கேன்"
உடனே பேன்ட் மாற்றி மறக்காமல் பர்ஸ் எடுத்து கிளம்பினேன். காரில் பாடல் கூட போட தோண வில்லை.